search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KRISHNA JAYANTI FESTIVAL"

    • வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெரு முயற்சியுடன் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கும் இதர 89 பரிவார தெய்வங்களுக்கும் திருச்சன்னதிகள் அமைத்து உலக மக்கள் நலன் கருதி அவ்வப்போது சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் கோகுலாஷ்டமியை முன்னிட்டும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவீன முறையில் கல் ஊஞ்சலில், ஒரு அடி உயர தவழ்ந்த கோலத்தில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள், மஹா அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தம்பதியர் குழந்தை பாக்யம் பெற வேண்டியும், குடும்ப ஒற்றுமை, அகந்தை அகன்றிட, திருமணத்தடை அகல, செல்வம் பெருக, வயல்களில் விளைச்சல் அதிகரிக்க, அமைதி நிலவ, ஆற்றல் பெருக, வறுமை இல்லா வாழ்வு அமைய வேண்டி ஸ்ரீ கிருஷ்ணயாகம், கூட்டு பிரார்த்தனையுடன் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், சீடை, முறுக்கு, தட்டை, அப்பம், லட்டு போன்ற பல்வேறு பலகாரங்கள் பழங்கள் வைத்து நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மேலும் அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜையும், அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.

    இந்த பூஜையில் வீடு, மனை வாஸ்து தோஷங்கள் நீங்கவும், கெட்ட சக்திகள் விலகவும், குடும்பத்தில் சச்சரவுகள் நீங்க, தாம்பத்ய உறவில் விரிசல் அகல, நல்ல வேலை கிடைக்க பிரார்த்தனை நடைபெற்றது.

    பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோம பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • சிறுவர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்து பங்கேற்றனர்.

    புதுக்கோட்டை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தங்களது வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து மகிழ்ந்தனர். மேலும் குழந்தை பருவத்தில் கண்ணன் வீட்டிற்கு வருவது போன்று வாசலின் நுழைவுவாயிலில் இருந்து பூஜை அறை வரை சிறு குழந்தைகளின் கால் தடங்களை பதித்து, கண்ணன் விரும்பும் சீடை, முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை படைத்து வழிபாடு நடத்தினார்கள். இதனால் கிருஷ்ணர் தங்கள் இல்லத்துக்குள் வந்து ஆசி வழங்குவார் என்பது ஐதீகம்.

    புதுக்கோட்டை விட்டோபா பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறுவர்கள் கண்ணன், ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். இதேபோல் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டையில் கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மேலும் கிருஷ்ணர், ராதை அலங்காரம் போட்டி நடைபெற்றது. இதில் சிறுவர்- சிறுமிகள், கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து பங்கேற்றனர்.

    மணமேல்குடி அருகே பொன்னகரத்தில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் சீதேவி, பூதேவி உடனுறை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியொட்டி பெருமாளுக்கு தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தகப்பட்டி கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின்னர் கிருஷ்ணருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • பள்ளி குழந்தைகள், கண்ணன்- ராதை வேடமிட்டு, பஜனை பாடல்கள் பாடியபடியும், உறியடித்தும் விழாவை கொண்டாடினர்.
    • சிறப்பு விருந்தினர்கள் கிருஷ்ணர் வரலாறுகள் மற்றும் அவதார நோக்கங்களை விளக்கி பேசினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வட்டாரத்தில் உள்ள பள்ளிகள், கோவில்களில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. பள்ளி குழந்தைகள், கண்ணன்- ராதை வேடமிட்டு, பஜனை பாடல்கள் பாடியபடியும், உறியடித்தும் விழாவை கொண்டாடினர். சிறப்பு விருந்தினர்கள் கிருஷ்ணர் வரலாறுகள் மற்றும் அவதார நோக்கங்களை விளக்கி பேசினர். பாடல், ஆடல், நாட்டிய நடன போட்டிகளும் நடந்தன.

    திருப்பூர் காமநாயக்கன்பாளையத்திலுள்ள ஸ்ரீபூமி நீளாதேவி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியை முன்னிட்டு, பஜனை குழுவினர், பல்லக்கில் கிருஷ்ணரை அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதன்பின், சிறப்பு பஜனைகளுடன்வழிபாடு, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உறியடி திருவிழா, மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகளும் நடந்தது.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கரிவரதராஜ பெருமாள் கோவில், மூகாம்பிகை நகர், அம்ச விநாயகர் கோவில், முனி யப்பன் கோவில் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் உள்ளிட்டவற்றில், உறியடி திருவிழா நடந்தது.

    காங்கயம் தாலுகா வள்ளியரச்சல் கிராமம் பெருங்கருணைபாளையத்தில் உள்ள பால கிருஷ்ணசுவாமி ஆலயத்தில் கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை 8.45 மணிக்கு விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்ய பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 10..30 மணிக்கு கோபூஜை, 11 மணிக்கு மூலவர் உற்சவர் சிறப்பு அபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12.05 மணிக்கு மகாதீபாராதனை, திருவீதி உலா, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடந்தது. மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடுமலை சின்னவாளவாடியில், ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோவிலில், கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாப்படும். இதைெயாட்டி ேநற்று இரவு 7 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது. நாளை காலை, 8 மணிக்கு, ஸ்ரீ சுதர்சன ேஹாமம், காலை, 10 மணிக்கு மேல், 12 மணிக்குள், ருக்மணி, சத்யபாமா, சமேத வேணுகோபால சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    பகல் 12மணிக்கு மேல், திருவாராதனம், சாற்றுமறை, தீபாராதனை, தீர்த்தம் வழங்கப்பட்டது. மாலை, 3மணிக்கு, ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருவீதி உலாவும், இரவு 7மணிக்கு, உறியடி உற்சவமும் நடைபெறுகிறது.பின்னர், அன்னபிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதேப்போல் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்கள், பள்ளிகளில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

    • கிருஷ்ணரின் அவதாரங்களை அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து கொண்டாடுகின்றனர்.
    • கண்ணன் பிறந்த நாளையொட்டி, சந்தான கோபால கிருஷ்ணன் சேவை நடந்தது.

    உடுமலை :

    உடுமலை, பெரியகடை வீதியில் உள்ள நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா துவங்கியது.

    நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஆவணி மாதம், கிருஷ்ணரின் அவதாரங்களை, ஒவ்வொரு நாளும் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து, கிருஷ்ணஜெயந்தி விழாவை கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று துவங்கியது. செப்டம்பர் 2 ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாளான்று பூமிநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாளுக்கு காலை, 4 மணிக்கு கண்ணன் பிறந்த நாளையொட்டி, சந்தான கோபால கிருஷ்ணன் சேவை நடந்தது. பெருமாளுக்கு சிவப்பு நிற பட்டுடுத்தி, மயிலிறகு சூடி, மலர் அலங்காரத்துடன் கோபால கிருஷ்ண அலங்காரத்தில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி மற்றும் சென்னியோங்கு பாசுரங்கள் சேவை நடந்தது.

    திரளான பக்தர்கள் பங்கேற்று, 'நாராயண நாமம்', கூறி வழிபட்டனர். தொடர்ந்து 'வெண்ணைய்த்தாழி கண்ணன்' அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர், மற்றும் ஸ்ரீ ராமானுஜா சாரிடபிள் டிரஸ்டியினர் செய்திருந்தனர்.

    • நாளை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மாலை 5 மணிக்கு தொடங்குகிறது
    • இதில் கிருஷ்ண பகவானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்படுகிறது.

    திருச்சி,

    திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவார பஸ் நிறுத்தம் வ.உ.சி. தெருவில் இஸ்கான் அமைப்பின் கோவில் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ண பகவான் வழிபாடு பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆகையினால் ஆண்டு தோறும் இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதில் கிருஷ்ண பகவானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்படுகிறது. பின்னர் விழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நந்த புத்திரதாஸ், பாலாஜி கோபால் தாஸ் சுவாமிகள் செய்துள்ளனர்.

    ×