search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Celebrate grandly"

    • பள்ளி குழந்தைகள், கண்ணன்- ராதை வேடமிட்டு, பஜனை பாடல்கள் பாடியபடியும், உறியடித்தும் விழாவை கொண்டாடினர்.
    • சிறப்பு விருந்தினர்கள் கிருஷ்ணர் வரலாறுகள் மற்றும் அவதார நோக்கங்களை விளக்கி பேசினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வட்டாரத்தில் உள்ள பள்ளிகள், கோவில்களில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. பள்ளி குழந்தைகள், கண்ணன்- ராதை வேடமிட்டு, பஜனை பாடல்கள் பாடியபடியும், உறியடித்தும் விழாவை கொண்டாடினர். சிறப்பு விருந்தினர்கள் கிருஷ்ணர் வரலாறுகள் மற்றும் அவதார நோக்கங்களை விளக்கி பேசினர். பாடல், ஆடல், நாட்டிய நடன போட்டிகளும் நடந்தன.

    திருப்பூர் காமநாயக்கன்பாளையத்திலுள்ள ஸ்ரீபூமி நீளாதேவி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியை முன்னிட்டு, பஜனை குழுவினர், பல்லக்கில் கிருஷ்ணரை அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதன்பின், சிறப்பு பஜனைகளுடன்வழிபாடு, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உறியடி திருவிழா, மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகளும் நடந்தது.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கரிவரதராஜ பெருமாள் கோவில், மூகாம்பிகை நகர், அம்ச விநாயகர் கோவில், முனி யப்பன் கோவில் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் உள்ளிட்டவற்றில், உறியடி திருவிழா நடந்தது.

    காங்கயம் தாலுகா வள்ளியரச்சல் கிராமம் பெருங்கருணைபாளையத்தில் உள்ள பால கிருஷ்ணசுவாமி ஆலயத்தில் கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை 8.45 மணிக்கு விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்ய பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 10..30 மணிக்கு கோபூஜை, 11 மணிக்கு மூலவர் உற்சவர் சிறப்பு அபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12.05 மணிக்கு மகாதீபாராதனை, திருவீதி உலா, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடந்தது. மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடுமலை சின்னவாளவாடியில், ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோவிலில், கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாப்படும். இதைெயாட்டி ேநற்று இரவு 7 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது. நாளை காலை, 8 மணிக்கு, ஸ்ரீ சுதர்சன ேஹாமம், காலை, 10 மணிக்கு மேல், 12 மணிக்குள், ருக்மணி, சத்யபாமா, சமேத வேணுகோபால சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    பகல் 12மணிக்கு மேல், திருவாராதனம், சாற்றுமறை, தீபாராதனை, தீர்த்தம் வழங்கப்பட்டது. மாலை, 3மணிக்கு, ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருவீதி உலாவும், இரவு 7மணிக்கு, உறியடி உற்சவமும் நடைபெறுகிறது.பின்னர், அன்னபிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதேப்போல் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்கள், பள்ளிகளில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

    ×