search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ண ஜெயந்தி உ
    X

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வாலாஜா தன்வந்திரி பீடத்தில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

    கிருஷ்ண ஜெயந்தி உ

    • வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெரு முயற்சியுடன் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கும் இதர 89 பரிவார தெய்வங்களுக்கும் திருச்சன்னதிகள் அமைத்து உலக மக்கள் நலன் கருதி அவ்வப்போது சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் கோகுலாஷ்டமியை முன்னிட்டும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவீன முறையில் கல் ஊஞ்சலில், ஒரு அடி உயர தவழ்ந்த கோலத்தில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள், மஹா அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தம்பதியர் குழந்தை பாக்யம் பெற வேண்டியும், குடும்ப ஒற்றுமை, அகந்தை அகன்றிட, திருமணத்தடை அகல, செல்வம் பெருக, வயல்களில் விளைச்சல் அதிகரிக்க, அமைதி நிலவ, ஆற்றல் பெருக, வறுமை இல்லா வாழ்வு அமைய வேண்டி ஸ்ரீ கிருஷ்ணயாகம், கூட்டு பிரார்த்தனையுடன் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், சீடை, முறுக்கு, தட்டை, அப்பம், லட்டு போன்ற பல்வேறு பலகாரங்கள் பழங்கள் வைத்து நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மேலும் அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜையும், அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.

    இந்த பூஜையில் வீடு, மனை வாஸ்து தோஷங்கள் நீங்கவும், கெட்ட சக்திகள் விலகவும், குடும்பத்தில் சச்சரவுகள் நீங்க, தாம்பத்ய உறவில் விரிசல் அகல, நல்ல வேலை கிடைக்க பிரார்த்தனை நடைபெற்றது.

    பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோம பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×