என் மலர்
நீங்கள் தேடியது "Junior NTR"
ராஜமவுலி இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராஜமவுலி இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிவிவி தனய்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், அஜித்தின் ‘வலிமை’ பாணியில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரம்மிப்பூட்டும் காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
The era of #RRRMovie has just begun!
— RRR Movie (@RRRMovie) November 1, 2021
Presenting the much anticipated #RRRGlimpse...https://t.co/khszq8EcOg
Let's together bring back the glory of Indian cinema. In cinemas from 7th Jan 2022.@ssrajamouli@tarak9999@AlwaysRamCharan@ajaydevgn@aliaa08@oliviamorris891@DVVMovies
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் இருவரும் போராளிகளாக நடித்து வருகிறார்கள். #RRR
மிக பிரமாண்டமான காட்சியமைப்புகளால் உலக அளவில் பேசப்பட்ட திரைப்படம் ‘பாகுபலி.’ எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையையும் செய்தது. இதையடுத்து ராஜமவுலி இயக்கத்தில் வரும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது.
‘மகதீரா’ படம் மூலம் ராம்சரண், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘சிம்ஹாத்ரி’ மற்றும் ‘எமதொங்கா’ ஆகிய படங்களின் மூலம் ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவருக்கும் திருப்புமுனையைக் கொடுத்தவர் ராஜமவுலி. அவர்கள் இருவரையும் தன்னுடைய அடுத்தப் படத்தில் இணைத்த ராஜமவுலி, அந்த படத்தில் தற்காலிகமாக ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்று பெயரிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் நடைபெறுவதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கோமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில், பழங்குடியின மக்களுக்கான நியாயம் கேட்டு போராடும் தலைவராக ஜூனியர் என்.டி.ஆரும், பிரிட்டீஷாரை எதிர்த்து கலகத்தில் ஈடுபடும் அலுரி சீதாராம ராஜூ என்ற கதாபாத்திரத்தில் ராம்சரணும் நடிப்பதாக தகவல்கள் வெளியாயின.
ரூ.350 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை, அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பெரிய பட்ஜெட் மற்றும் பீரியட் படம் என்பதால், சொன்ன நேரத்தில் படத்தை வெளியிட முடியுமா என்பது சந்தேகம்தான். தாமதமானாலும், ராஜமவுலியிடம் இருந்து ஒரு தரமான படம் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.
பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். #Rajamouli #RRR
‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. முதல்கட்டப் படப்பிடிப்பில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கினார். சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை டி.வி.வி. தான்யா தயாரித்து வருகிறார்.
தற்போது ராம்சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் முக்கியமான கவுரவ கதாபாத்திரத்தில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க மறுத்த அஜய் தேவ்கன், ராஜமவுலி இயக்கும் படத்தை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.

கவுரவ கதாபாத்திரம் தான் என்பதால் மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளதாக அஜய் தேவ்கன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நான் ஈ’ இந்தி பதிப்புக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் அஜய் தேவ்கன். அந்த படத்திலிருந்தே ராஜமவுலி, அஜய் தேவ்கன் இருவரும் நட்பாகப் பழகி வருகிறார்கள்.