போட்டோ எடுத்துட்டு போ பா.. ரசிகருடன் fun செய்த ஜுனியர் என்.டி.ஆர்..

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது.
ஜுனியர் என்.டி.ஆர்.
ஜுனியர் என்.டி.ஆர்.
Published on

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

ஆர்.ஆர்.ஆர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்றது. சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது.

95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். அமெரிக்கா சென்றுள்ளார். இங்கு ரசிகர் ஒருவர் ஆட்டோகிராஃப் வாங்கிவிட்டு வேகமாக புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது "போட்டோ எடுத்துட்டு போ பா" என fun ஆக அந்த ரசிகரை அழைத்து நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com