search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "green fodder"

    • தை மாதத்திற்கு பின் போதிய மழை இல்லாததால் மேய்ச்சல் நிலங்கள் கருகின.
    • கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும், குறித்த நேரத்தில் பெய்யாததால் தீவனப்பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

    உடுமலை :

    தை மாதத்திற்கு பின் போதிய மழை இல்லாததால் மேய்ச்சல் நிலங்கள் கருகின. இதனால் உடுமலை கிராமங்களில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும், குறித்த நேரத்தில் பெய்யாததால் தீவனப் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டது.விவசாயிகள் கால்நடைகளுக்கான தீவனத்தேவையை சமாளிக்க வைக்கோல், கழிவுபஞ்சு மற்றும் அடர் தீவனங்களை வாங்கி நிலைமையை சமாளித்தனர். தற்போது கோடை மழை பெய்து வருகிறது.

    இதனால் இயற்கையாக வளரும் கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகைகள் செழித்து வளரத்துவங்கி உள்ளன. பசுந்தீவன பற்றாக்குறை நீங்கி பால் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது.
    • அசோலா தீவன வளர்ப்பு முறையை விவசாயிகள் எளிதில் மேற்கொள்ள முடியும்.

    மங்கலம் :

    தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை பல்லடம் வட்டாரம் சார்பில் மாநில விரிவாக்கத்திட்டங்களின் உறுதுணை சீரமைப்புதிட்டம் மற்றும் மேலாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா ) 2022-2023 திட்டத்தின் கீழ் சாமளாபுரம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் விவசாயிகளு க்கு அசோலா வளர்ப்பு முறை, உலர் தீவனம் தயாரிக்கும் முறை, பசுந்தீவன தயாரிப்பு முறைகள் குறித்து விவசாயி களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய பேராசிரியர் மதிவாணன் அசோலா வளர்ப்பு, கால்நடைக ளுக்கான பசுந்தீவன வளர்ப்பு குறித்து பேசுகையில், அசோலா தீவன வளர்ப்பு முறையை விவசாயிகள் எளிதில் மேற்கொள்ள முடியும் எனவும், அசோலா விதைகள் தேவைப்படுவோர் திருப்பூர் பழைய பஸ்நிலையத்திற்கு எதிரில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை அணுகி பெற்றுக்கொள்ள லாம் என பேசினார்.

    மேலும் அட்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அக்ரிமனோகர், உதவி தொழில் நுட்ப மேலாளர் பாலாஜி, வேளாண் அலுவலர் அஜீத், உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார், சாமளாபுரம் பகுதியை சேர்ந்த அருணாசலம், சந்திரசேகர மூர்த்தி மற்றும் சாமளாபுரம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அட்மா திட்டத்தின் கீழ் அசோலா தீவனம் மற்றும் பசுந்தீவனம் உற்பத்தி குறித்த பயிற்சி, தளிகை கிராம கால்நடைகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • தளிகை கிராம கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் ஜெயந்தி கால்நடைகளுக்குத் தேவையான சத்து மிகுந்த பசுந்தீவனம் குறித்து பயிற்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் வட்டாரம் வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் கீழ் அசோலா தீவனம் மற்றும் பசுந்தீவனம் உற்பத்தி குறித்த பயிற்சி, தளிகை கிராம கால்நடைகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    சிறப்பு பயிற்றுநரான குமாரப்பாளையம், ரிட்டிக்ஷா சுற்றுசூழல் பண்ணை மற்றும் வர்த்தக மேலாளர் மதன்ராஜ், அசோலா உற்பத்தியும் அதன் பயன்பாடுகளும், அசோலாவின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள், பாத்திகளில் அசோலா உற்பத்தி, பராமரிப்பு, அறுவடை போன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு செயல் விளக்கத்துடன் பயிற்சி வழங்கினார்.

    தளிகை கிராம கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் ஜெயந்தி கால்நடைகளுக்குத் தேவையான சத்து மிகுந்த பசுந்தீவனம் குறித்து பயிற்சியளித்தார். நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, அசோலா மற்றும் பசுந்தீவன உற்பத்தியின் அவசியம் குறித்து பயிற்சி வழங்கினார்.

    வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா, உதவி வேளாண்மை அலுவலர் திலீப்குமார், தோட்டக்கலைத்துறை உதவி தோட்டக்கலை அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துறை சார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினர்.

    அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவேற்றம் செய்து, பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    • பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும்.
    • கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை வளர்த்தலும் பிரதான தொழிலாகும். அவ்வகையில், வளர்க்கப்படும் கால்நடைகள் பெரும்பாலும் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இந்நிலையில் உடுமலை சுற்றுப்பகுதியில் பரவலாக மழை நீடித்தது. அதேநேரம், மழையால் விளையும் பசுந்தீவனங்களை கால்நடைகள் உட்கொள்வதால், கழிச்சல் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் புதிதாக பறித்த இலை தழைகளை நன்கு காய வைத்த பின் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:-

    தற்போதைய சூழலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல், பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். ஈரமான இடங்களில் கட்டி வைக்கப்படும் கால்நடைகளுக்கு கால் வீக்க நோய் ஏற்படும் என்பதால் காய்ந்த நிலப்பரப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பால் கறந்தவுடன் மாடுகளை சிறிது நேரம் கழித்த பின்னரே படுக்க வைக்க வேண்டும்.வழக்கத்திற்கு மாறான நிலையில் கால்நடைகள் இருந்தால் உடனடியாக கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×