search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமளாபுரம் பேரூராட்சியில் பசுந்தீவன தயாரிப்பு குறித்து  விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்ற காட்சி. 

    சாமளாபுரம் பேரூராட்சியில் பசுந்தீவன தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

    • விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது.
    • அசோலா தீவன வளர்ப்பு முறையை விவசாயிகள் எளிதில் மேற்கொள்ள முடியும்.

    மங்கலம் :

    தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை பல்லடம் வட்டாரம் சார்பில் மாநில விரிவாக்கத்திட்டங்களின் உறுதுணை சீரமைப்புதிட்டம் மற்றும் மேலாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா ) 2022-2023 திட்டத்தின் கீழ் சாமளாபுரம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் விவசாயிகளு க்கு அசோலா வளர்ப்பு முறை, உலர் தீவனம் தயாரிக்கும் முறை, பசுந்தீவன தயாரிப்பு முறைகள் குறித்து விவசாயி களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய பேராசிரியர் மதிவாணன் அசோலா வளர்ப்பு, கால்நடைக ளுக்கான பசுந்தீவன வளர்ப்பு குறித்து பேசுகையில், அசோலா தீவன வளர்ப்பு முறையை விவசாயிகள் எளிதில் மேற்கொள்ள முடியும் எனவும், அசோலா விதைகள் தேவைப்படுவோர் திருப்பூர் பழைய பஸ்நிலையத்திற்கு எதிரில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை அணுகி பெற்றுக்கொள்ள லாம் என பேசினார்.

    மேலும் அட்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அக்ரிமனோகர், உதவி தொழில் நுட்ப மேலாளர் பாலாஜி, வேளாண் அலுவலர் அஜீத், உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார், சாமளாபுரம் பகுதியை சேர்ந்த அருணாசலம், சந்திரசேகர மூர்த்தி மற்றும் சாமளாபுரம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×