search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Google map"

    • கார் ஏற்றி நசுக்கியதில் 7 பேரின் கால்களும் நசுங்கின.
    • உறவினர் வீட்டுக்கு வந்திருந்த வைசாலி அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.

    போரூர்:

    சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மனைவி சரிதா. இவர்களது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் வீட்டுக்கு வந்து இருந்தனர். நேற்று இரவு அனைவரும் வீட்டுக்குள் தூங்குவதற்கு இடவசதி இல்லாததால் சரிதா, உறவினர்கள் தில்லைநாயகி, மூதாட்டி ஜோதி, கவுதம் நிஷா உள்ளிட்ட பலர் வீட்டுக்கு வெளியே பாயை விரித்து தூங்கினர்.

    சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர் இன்று அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.இன்று அதிகாலை 5 மணி அளவில் 10-வது தெருவுக்குள் கார் ஒன்று வந்தது. திடீரென அந்த கார் அதிவேகமாக வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டு இருந்த சரிதா உள்ளிட்ட7 பேர் மீது ஏறியது. கார் ஏற்றி நசுக்கியதில் 7 பேரின் கால்களும் நசுங்கின. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். இதில் 4 பேர் பெண்கள் ஆவர்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது கார் நசுக்கியதால் 7 பேர் காயம் அடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த அனைவரும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கார் ஏறியதில் சரிதா, தில்லை நாயகி ஆகிய 2 பெண்களின் கால்களிலும் எலும்புகள் உடைந்துள்ளன. இதுபற்றி கேள்விப்பட்டதும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குறுகலான சந்தில் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வைசாலி பாட்டீல் என்பது தெரிய வந்தது.

    சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர் இன்று அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது. கூகுள் மேப் காட்டிய வழியில் குறுகலான குடியிருப்பு பகுதியில் சந்து இருப்பது தெரியாமலேயே வைசாலி காரை ஓட்டிச் சென்று உள்ளார். அப்போது வீட்டு முன்பு தூங்கியவர்கள் மீது ஏற்றியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கூகுள் மேப்பை நம்பி சென்று முட்டுச்சந்தில் விபத்தை ஏற்படுத்திய வடமாநிலப் பெண் வைஷாலி பாட்டீல் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அஜாக்கிரதை, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கூகுள் மேப் காட்டிய வழியில் இரவு 11.30 மணியளவில் சென்ற போது திடீரென சாலை முடிந்தது.
    • மழையால் வழித்தடத்தை கூகுள் மேப்பால் காட்ட முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கோட்டயம்:

    கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கூகுள் மேப்பை பயன்படுத்தி காரில் சென்ற போது, நள்ளிரவில் ஓடையில் கார் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளா மாநிலம் கும்பநாடு பகுதியைச் சேர்ந்த 4 பேர், எர்ணாகுளத்தில் இருந்து நேற்று இரவு ஊருக்கு காரில் நள்ளிரவில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கூகுள் மேப்பை பயன்படுத்தி டிரைவர் காரை ஓட்டி உள்ளார். கூகுள் மேப் காட்டிய வழியில் இரவு 11.30 மணியளவில் சென்ற போது திடீரென சாலை முடிந்தது. டிரைவர் சுதாரித்து பிரேக் போடுவதற்குள் கார் நேராக, ஓடையில் இறங்கியது.

    காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் சென்று 4 மாத குழந்தை உட்பட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். மழையால் வழித்தடத்தை கூகுள் மேப்பால் காட்ட முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    திருச்சூரில் இருந்து மூணாறுக்கு ‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #GoogleMaps #Caraccident
    திருவனந்தபுரம்:

    திருச்சூர் வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர்கள் கோகுல்தாஸ், (வயது 23). ஈசாக் (29), முஸ்தபா (36).

    3 வாலிபர்களும் கடந்த வியாழக்கிழமை காரில் திருச்சூரில் இருந்து மூணாறுக்கு புறப்பட்டனர். சரியான வழி தெரியாததால் ‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    இவர்களது கார் மூணாறு அருகே பாலமட்டம்- அவழிச்சல் சாலையில் சென்று கொண்டிருந்தது.

    நள்ளிரவு நேரத்தில் ‘கூகுள் மேப்’பை பார்த்தபடி கார் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அவழிச்சல் அருகே சென்ற போது சாலையில் பெரும் பள்ளம் இருப்பதை கண்டனர்.

    காரை நிறுத்த முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. காரில் இருந்த 3 பேரும் காருடன் பள்ளத்தில் விழுந்தனர்.

    30 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் சுமார் 8 அடி தண்ணீர் இருந்தது. இதனால் வாலிபர்கள் மூவரும் காரின் மேற்பகுதியை பிடித்தபடி உதவிக்கேட்டு கூச்சலிட்டனர்.

    30 அடி ஆழம் கொண்ட பள்ளம்.

    அப்போது அந்த வழியாக ரப்பர் தோட்ட தொழிலாளிகள் சிலர் இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பள்ளத்தில் இருந்து கூச்சல் வந்ததை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். அங்கு காரை பிடித்தபடி 3 வாலிபர்கள் உயிருக்கு போராடுவதை கண்டனர்.

    தொழிலாளிகள் அனைவரும் பள்ளத்தில் விழுந்த வாலிபர்களை பத்திரமாக மீட்டனர். இதற்காக அவர்கள், அணிந்திருந்த வேட்டியை கழட்டி கயிறு போல் ஆக்கி அதன் மூலம் வாலிபர்களை வெளியே அழைத்து வந்தனர்.

    வாலிபர்கள் மூவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினர். பள்ளத்தில் விழுந்த கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

    3 வாலிபர்கள் பள்ளத்தில் விழுந்து மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் இன்னொரு குடும்பமும் மூணாறு செல்ல ‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி இதே பாதையில் வந்தது.

    கிராம மக்கள் அவர்களை தடுத்து நடந்த சம்பவத்தை கூறி மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தினர்.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, திருச்சூர்-மூணாறு செல்ல ‘கூகுள் மேப்’பில் வழி தேடினால் இந்த பாதைதான் வருகிறது. ஆனால் இங்கு 30 அடி ஆழ பள்ளம் இருப்பது உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே தெரியும்.

    இதுபற்றி பிரதான சாலையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்க நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதை தடுக்க முடியாது என்றனர்.  #GoogleMaps #Caraccident





    ×