என் மலர்
இந்தியா

கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றபோது ஓடையில் இறங்கிய கார்... நள்ளிரவில் நடந்த விபத்து
- கூகுள் மேப் காட்டிய வழியில் இரவு 11.30 மணியளவில் சென்ற போது திடீரென சாலை முடிந்தது.
- மழையால் வழித்தடத்தை கூகுள் மேப்பால் காட்ட முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோட்டயம்:
கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கூகுள் மேப்பை பயன்படுத்தி காரில் சென்ற போது, நள்ளிரவில் ஓடையில் கார் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கும்பநாடு பகுதியைச் சேர்ந்த 4 பேர், எர்ணாகுளத்தில் இருந்து நேற்று இரவு ஊருக்கு காரில் நள்ளிரவில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கூகுள் மேப்பை பயன்படுத்தி டிரைவர் காரை ஓட்டி உள்ளார். கூகுள் மேப் காட்டிய வழியில் இரவு 11.30 மணியளவில் சென்ற போது திடீரென சாலை முடிந்தது. டிரைவர் சுதாரித்து பிரேக் போடுவதற்குள் கார் நேராக, ஓடையில் இறங்கியது.
காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் சென்று 4 மாத குழந்தை உட்பட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். மழையால் வழித்தடத்தை கூகுள் மேப்பால் காட்ட முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Next Story






