search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "credit fraud"

    • தனியார் நிறுவனத்தில் லோன்பெற ஏ.டி.எம். எண் மற்றும் ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார்
    • சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளி கிராமம் கிருஷ்ணா புரம் வட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம், கடந்த 17-ந் தேதி ஒருவர் பேசினார்.

    அப்போது தனியார் நிறுவனத்தில் லோன்பெற பிரகாஷ் தகுதி பெற்றுள்ளதாகவும், ஏ.டி.எம். எண் மற்றும் ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார்.

    அதை நம்பிய பிரகாஷ் தன்னுடைய ஏ.டி.எம். கார்டு எண், மற்றும் ஓ.டி.பி. ஆகியவற்றை எதிரில் பேசிய நபரிடம் கூறியிருக்கிறார்.

    சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.51,245 எடுக்கப்பட்டுள்ளது. உடனே சுதாரித்து கொண்ட பிரகாஷ் இதுகுறித்து சைபர் கிரைம் 1930-ஐ தொடர்பு கொண்டு பண பறிபோனது சம்பந்தமாக புகார் அளித்தார்.

    அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி அவர் இழந்த ரூ.51,245-ஐ மீட்டனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பாதிக்கப் பட்ட நபரிடம் அவர் இழந்த பணத்தை அவருடைய வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணத்தை வழங்கினார்.

    • மனைவி பெயரில் ரூ.18 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருநகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் பரவை மீனாட்சி மில் காலனியைச் சேர்ந்த வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவரை சென்னைக்கு கடத்திச் சென்று விட்டார். அவர் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, சென்னை மதனந்தபுரம், கிருஷ்ணா நகரில் குடும்பம் நடத்தி வந்தார்.

    அப்போது பழனியப்பன் மனைவியின் பெயரில் ரூ.18 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

    அதனை அவர் திரும்பி செலுத்தவில்லை. இந்த நிலையில் பழனியப்பன் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.

    மேலும் பழனியப்பன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயி பேரில் கடன் மோசடி செய்த புகாரில் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மீது உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மேலூர்:

    கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் கடன் பெற்று வருகின்றனர்.

    குருவார்பட்டியைச் சேர்ந்த மாயழகு என்ற விவசாயி வங்கியில் ரூ.45 ஆயிரத்து 620 கடன் பெற்றதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாயழகு, தான் கடன் எதுவும் பெறவில்லை என தெரிவித்தார். மேலும் தனது பெயரில் மோசடியாக கடன் பெற்றிருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

    இது குறித்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

    அதன் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி விசாரணை நடத்தினார். கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ராமசாமி, உறுப்பினர் சின்னகண்ணு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    ×