search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai weather centre"

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து நகர்வதால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRains #NEMonsoon
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக  தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் இந்த வாரம் பரவலாக மழை பெய்தது. அது தற்போது வலுவிழந்து தமிழகத்தின் உள்மாவட்டங்களை நோக்கி நகர்கிறது.

    இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கும்.

    இதன் காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணமலை, வேலூர், சேலம், கரூர், ஈரோடு மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர், திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் பகுதியில் 11 செமீ மழையும், பொன்னேரியில் 10 செமீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னை வடக்கு, டிஜிபி அலுவலகம், மரக்காணம், திண்டிவனம் மற்றும் பண்ருட்டியில் 9 செமீ, தாமரைப்பாக்கம், நெய்வேலியில் தலா 8 செமீ மழை பெய்துள்ளது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 17 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் 45 சதவீதம் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNRains #NEMonsoon
    அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. #IMD #IMDChennai #TNRains
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யலாம். நெல்லை, தூத்துக்குடியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் தற்போதைக்கு மழை வாய்ப்பு குறைவு. புயல் நெருங்கும் போது மழையை எதிர்பார்க்கலாம். 


    தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை குறைந்துள்ளது. புயல் சின்னம் இருப்பதால் நாளை முதல் 13-ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 7 செமீ, நன்னிலத்தில் 5 செமீ,  குடவாசலில் 4 செ.மீ மழை பதிவானது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IMD #IMDChennai #TNRains
    நெல்லை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் தினமும் பலத்த மழை பெய்வதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகலார் பகுதியில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. வால்பாறையில் (பிடிஓ) 12 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 11 செ.மீ., பெரியாறில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை,  நீலகிரி மாவட்டம் ஜிபசார் ஆகிய பகுதிகளில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RainInTamilNadu #SouthwestMonsoon
    ×