search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bahour"

    பாகூரில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பாகூரில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மதுப் பாட்டில்களை கடத்துவதை தடுக்க பாகூர் போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அது போல் சோரியாங் குப்பம் பகுதியில் ரோந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் 4 அட்டை பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்ததை போலீசார் கண்டனர்.

    இதையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அட்டை பெட்டிகளை திறந்து சோதனையிட்டனர். அப்போது 4 அட்டை பெட்டிகளிலும் 242 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.

    இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் கேப்பர் மலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது 42) என்பதும், இவர் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த மதுப் பாட்டில்களை பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இதுபோல் பாகூர் போலீசார் ஆராய்ச்சிகுப்பம் பகுதியில் ரோந்து சென்ற போது ஒருவர் கையில் கட்டை பையுடன் சென்றார். அவரிடம் இருந்த கட்டை பையை வாங்கி பார்த்தனர். அதில், 52 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.

    இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கீழ்பரிக்கல்பட்டை சேர்ந்த உதயகுமார் (வயது 32) என்றும், இவர் அதிக விலைக்கு விற்க மதுபாட்டில்களை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. உதயகுமாரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பாகூரில் குடும்ப தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலுசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    பாகூர் பங்களா வீதி பகுதியை சேர்ந்தவர் வினோத், பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி (வயது 25). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு புத்திரன் (6), ரட்சன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். தமிழரசி மேலும் குழந்தை வேண்டாம் என்று குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார். இதனால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போனது. இந்த நிலையில் வினோத் 15 நாள் சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பினார்.

    தமிழரசி என்னையும், குழந்தைகளையும் கவனிக்காமல் சுற்றுலா சென்று விட்டீர்களே? என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று வினோத் வேலைக்கு சென்று விட்டு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    கதவை தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது தமிழரசி பேன் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    வினோத் கதவை உடைத்து மனைவியை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் வில்லியனூர் மாவட்ட கலெக்டர் உதயகுமார் உத்தரவின் பேரில் தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது. #tamilnews
    பாகூர் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பாகூர்:

    பாகூர் சோரியாங்குப்பம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி (46) என்ற மனைவியும், 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

    மகாலிங்கம் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

    இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று குடித்து விட்டு வந்ததால் மனைவி திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த அவர் அதே பகுதியில் உள்ள ஒரு தோப்பில் தூங்கி உள்ளார்.

    இதை அறிந்த லட்சுமி அங்கு சென்று வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்து விட்டு வந்தால் பிள்ளைகளை எப்படி கரை சேர்ப்பது? என்று கூறி விட்டு வீட்டுக்கு சாப்பிட வாருங்கள் என கூறி சென்று விட்டார்.

    இந்த நிலையில் தென் பெண்ணையாற்றின் அருகே கைலியால் ஒருவர் மரத்தில் தூக்கு போட்டு தொங்குவதை அந்த பகுதியில் சென்றவர்கள் சிலர் பார்த்து அப்பகுதி மக்களிடம் கூறினர்.

    அங்கு சென்று பார்த்த போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது மகாலிங்கம் என்பது தெரிய வந்தது.

    உடனே அவரது மனைவி லட்சுமிக்கு தகவல் கொடுத்தனர். லட்சுமியும், அவரது பிள்ளைகளும் அலறியடித்து ஓடி வந்தனர். தூக்கில் தொங்கிய மகாலிங்கத்தை கண்டு கதறி அழுதனர்.

    இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×