என் மலர்

  நீங்கள் தேடியது "accident"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குலதெய்வ கோவிலுக்கு சென்ற பெண் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி ஆனார்.

  விழுப்புரம்:

  சென்னை பாடியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் இவர்உறவினர்கள் குழந்தை கள் உட்பட 19 பேர் நாகப்பட்டி னம் மாவட்டத்தில் உள்ள மகழி கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் குலதெய்வ கோவிலுக்கு ஒரு வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர் வேலை முத்துசாமி டிரைவர் ஓட்டி வந்தார் நேற்று இரவு விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலையில் வரும் போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.

  இதில் பேனில் பயணம் செய்த சுந்தரி . 48 . க/பெ.கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் வேனில் பயணம் செய்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது தகவல் அறிந்து விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் அடிபட்டவர்களை உடனடி யாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வள்ளியூரில் உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
  • இந்த விபத்தில் ராஜ்குமாரும், சேகரும் படுகாயம் அடைந்தனர்.

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது52). சம்பவத்தன்று இவரும், இவரது உறவினரான களக்காட்டை சேர்ந்த செல்லையா மகன் சேகரும் வள்ளியூரில் உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். ராஜ்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

  திருக்குறுங்குடி அருகே ராஜபுதூர்-கேசவநேரி சாலையில் நம்பி உடையார் சாஸ்தா கோயில் அருகே சென்ற போது, பின்னால் வந்த லோடு ஆட்டோ அவர்கள் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

  இந்த விபத்தில் ராஜ்குமாரும், சேகரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

  போலீசார் இதுதொடர்பாக லோடு ஆட்டோவை ஓட்டி வந்த களக்காடு அருகே சிதம்பரபுரம், சேதுராயபுரத்தை சேர்ந்த தவசிக்கனி மகன் பொன் கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
  • அதுபோல் தருண் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார்.

  புதுச்சேரி:

  வில்லியனூர் அருகே மூர்த்தி நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மகன் தருண் (வயது22). இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

  இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று திரும்புவது வழக்கம். அதுபோல் தருண் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார்.

  ஆரியப்பாளையம் மேம்பாலத்தை கடந்து மங்கலம் ரோடு சந்திப்பில் சென்ற போது தருண் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வில்லியனூரை சேர்ந்த குலசேகரன் (60) என்பவர் மீது மோதி விட்டு பின்னர் அதன் பின்னால் மனைவி-மகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் ராம ரெட்டிக்குளம் விமல்(32) என்பவர் மீது மோதியது.

  இதில் தூக்கி வீசப்பட்ட தருண் தலை, முகத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மற்ற 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த குலசேகரன், விமல் மற்றும் அவரது மகள் கவிதா(13) ஆகியோர் படுகாயமடைந்தனர். விமலின் மனைவிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து காயமடைந்த 3 பேரும்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இவர் இன்று மகராஜநகர் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

  நெல்லை:

  பாளை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ(வயது28). இவர் இன்று மகராஜநகர் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் பிரிட்டோ மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

  இது தொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரிட்டோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை அருகே சாலையை கடக்க முயன்றவர் பலியானார்.
  • எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது.

  வாடிப்பட்டி

  மதுரை மாவட்டம் சோழவந்தான்அருகே உள்ள கண்ணுடையாள் புரத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் சிபிராஜ் (வயது 19). இவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

  அப்போது எதிர்பாராத விதமாக சமயநல்லூர் அருகே டபேதார் சந்தை முன்பு சாலையை கடக்க முயன்ற சென்னை வடபழனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (59) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிபிராஜ் படுகாயம் அடைந்தார்.

  அப்போது கோவையில் இருந்து மதுரை நோக்கி மினிலாரி வந்தது. அதை உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி (40) ஓட்டி வந்தார். அந்த லாரி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது.

  இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் பாண்டி தலைமையில் வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

  இந்த விபத்தில் மினிலாரி மற்றும் மோட்டார் சைக்கிள் முழுமையாக சேதமடைந்தது. அடுத்தடுத்து நடந்த விபத்து சம்பந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லாரியில் இருந்த நிலக்கரி சாலையில் கொட்டியதில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.
  • சாலையில் லாரி கவிழ்ந்து நிலக்கரி கொட்டி மலைபோல் குவிந்து கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  தஞ்சாவூர்:

  தஞ்சை- திருச்சி சாலையில் நேற்று மதியம் ஒரு லாரி நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தது. லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த டிரைவர் மோகனசுந்தர் (வயது 47) ஓட்டிச்சென்றார்.

  லாரி தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாடடை இழந்து சாலையிலேயே கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த நிலக்கரி சாலையில் கொட்டியது. மேலும் லாரி கவிழ்ந்ததில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் மயக்க நிலையில் இருந்தார்.இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மோகனசுந்தரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் லாரி கவிழ்ந்து நிலக்கரி கொட்டி மலைபோல் குவிந்து கிடந்ததால் அந்த பகுதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இதையடுத்து போக்கு வரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. பின்னர் கவிழ்ந்த லாரி அப்புறப்படுத்த ப்பட்டதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பன்றிகள் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 விவசாயிகள் பலியானார்கள்.
  • இளவரசன் பலத்த காயம் ஏற்பட்டு வேதனையால் அலறி துடித்தார்.

  விழுப்புரம் ஆக.10-

  கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா எனதரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 45) பட்டு ரோசா (45). வளவனூர் அருகே சின்ன குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளவரசன் (38) இவர்கள் 3 பேரும் விவசாய பணியாளர்கள். இவர்கள் 3 பேரும் புதுவை மாநிலம் பகண்டை பகுதியில் கரும்பு வெட்டுவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.புதுவை அருகே வளவனூர் காவல் எல்லைக்குட்பட்ட கூட்ரோ டு பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது கூட்ரோடு அருகே சாலையின் குறுக்கே பன்றி களின் கூட்டம் சென்றது. இதை சிறிதும் எதிர்பாராத மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்த ராமமூர்த்தி கண்ணிமைக்கும் நேரத்தில் பன்றிகள் மீது மோதினார். இதில் மூவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே ராமமூர்த்தி, பட்டுரோஜா ஆகியோர் இறந்தனர். இளவரசன் பலத்த காயம் ஏற்பட்டு வேதனையால் அலறி துடித்தார்.

  இதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து வளவனூர் போலீஸ் நிலைய த்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று படுகாயம் அடை ந்த இளவரசனை மீட்டு விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு கலைக் கல்லூரியில் ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். உயிரிழந்த ராமமூர்த்தி, பட்டு ரோஜா ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்- நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகில் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் கீற்றுகளால் நேயப்பட்ட பழக்கடைகள் உள்ளன.
  • மின்சார ஒயர்கள் உரசியதால் கீற்றுக்கொட்டையின் மீது தீப்பொறி பறந்து விழுந்ததில் பழக்கடையில் தீப்பிடித்தது.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்- நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகில் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் கீற்றுகளால் நேயப்பட்ட பழக்கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் கீற்றுக் கொட்டகை உள்ள பழக்கடை வழியாக மேலே செல்லும் மின்சார ஒயர்கள் உரசியதால் கீற்றுக்கொட்டையின் மீது தீப்பொறி பறந்து விழுந்ததில் பழக்கடையில் தீப்பிடித்தது.

  இதில் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடிய வில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

  தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீஅருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இருப்பினும் பழக்கடை முழுவதும் எரிந்து சாம்பலாயின.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்
  • மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கீரமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சிவஞானம் மகன் சிற்றரசு (வயது 35) ஏசி மெக்கானிக்கா இவர், இரு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் பேராவூரணி சென்றுள்ளார். அப்போது கரம்பக்காடு அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவர், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
  • உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி.

  மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்ட மல்லர்பூர் காவல் நிலையப் பகுதியில் ஆட்டோ மீது பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.

  இந்த கோர விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் நடந்த ஒரு கோர விபத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் வேதனை அடைகிறேன். காயமடைந்தவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன என்று தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

  மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்தார்.

  முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹாரில் உள்ள ஜல்பேஷ் கோயிலுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பிக்கப் வேன்னில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். அந்த வேனில் இருந்த 27 பேரில் 16 பேர் சிகிச்சைக்காக ஜல்பைகுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வானூர் அருகே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.
  • வேலையை முடித்துவிட்டு புதுவையின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று இரவு புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி கொண்டு இருந்தனர்.

  விழுப்புரம்:

  சென்னை திருவான்மியூர் கொட்டிவாக்கம்குப்பம் பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் ராஜமாணிக்கம் (வயது 24) லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் (வயது 27) இருவரும் நேற்று முன்தினம் பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் புதுவை வந்தனர்.  வேலையை முடித்துவிட்டு புதுவையின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று இரவு புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ராஜமாணிக்கம் ஓட்டினார். யோகேஷ் பின்னால் அமர்ந்து இருந்தார். தமிழக பகுதியான வானூர் அருகே மஞ்சகுப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மரக்காணத்திலிருந்து புதுவை நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜமாணிக்கம் மற்றும் யோகேஷ் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

  தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சென்றனர். விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யோகேசை மீட்டு கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு யோகேஷ் பறிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டகுப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விபத்தில் இறந்த ராஜமாணிக்கம் மற்றும் யோகேஷ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோட்ட குப்பம் போலீஸ் நிலை யத்துக்குவிரைந்து வந்தனர். புதுவையில் வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில் சென்னை திரும்பிய வாலிபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உறவி னர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராட்சத இரும்பு தூண் சாலையில் விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  • விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் போலீசில் சரண் அடைந்தனர்.

  சென்னை:

  சென்னை ஆலந்தூரில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வழிகாட்டி பலகை திடீரென சரிந்து விழுந்தது. தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பேருந்து கத்திப்பாரா அருகே அதிவேகமாக வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை வழிகாட்டி பலகை தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

  அதில் வழிகாட்டி பலகையின் ராட்சத இரும்பு தூண் உடைந்து சரிந்து, சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது தூண் விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன.

  இதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது.ராட்சத இரும்புத் தூண் விழுந்ததால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் போக்குவரத்து போலீசில் சரண் அடைந்தனர்.

  இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முக சுந்தரம் (28), சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

  இந்நிலையில், பேருந்து மோதியதில் வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

  உயிரிழந்தவர் குடும்பத்துக்கு போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 3 லட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்நிதியினை நேரில் சென்று வழங்கினார்.