என் மலர்
இந்தியா

ரிவர்ஸ் எடுத்தபோது நேர்ந்த விபரீதம்... மும்பையில் அரசுப்பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு!
- காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- பாதசாரிகள், பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது.
மும்பையில் நேற்று இரவு 10 மணியளவில் மாநகராட்சிப் பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையின் பாண்டூப் (Bhandup) ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஸ்டேஷன் சாலையில், ரிவர்ஸ் எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து மாநகர் அரசுப்பேருந்து (BEST bus) அங்கு நின்றிருந்த பாதசாரிகள் மற்றும் பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது.
இதில் 4 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர். காயமடைந்த 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் (52) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்






