search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "47 பேர் காயம்"

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2 காவலர்கள் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 47 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். #Jallikattu
    அவனியாபுரம்:

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலும், மாவட்ட கலெக்டர் நடராஜன், மாநகர ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி ஆணையாளர் அனிஷ்சேகர் ஆகியோர் முன்னிலையிலும் தொடங்கியது.

    விழாவில் புதிதாக நியமிக்கப்பட்ட குழுவினர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் பதிவு செய்யப்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின் வாடிவாசல் பின்புறம் வரிசையாக நிறுத்தப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 75 பேர் வீதம் களத்தில் இறக்கப்பட்டனர்.

    வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வந்த முரட்டுக் காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர்.

    சில காளைகள் பாய்ந்து வீரர்களை பந்தாடியது. மாடுபிடி உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டை பார்க்க கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பார்வையாளர்கள் குறைந்த அளவில் காணப்பட்டனர்.

    ஜல்லிக்கட்டு காலை 8 மணி தொடங்கி நான்கு மணியளவில் முடிவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 552 ஜல்லிக்கட்டு வீரர்களில் 2 பேர் நிராகரிக்கப்பட்டு 550 பேர் கலந்து கொண்டனர். இதில் எடை குறைவில் ஒருவரும் மது அருந்தி வந்தவரும் ஜல்லிக்கட்டில் நிராகரிக்கப்பட்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டி 8 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் 2 காவலர்கள் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 47 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். #Jallikattu


    அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா கோவையில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    கோவை:

    கோவை மாநகரில் அ.தி.மு.க. சார்பில் 47-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவினாசி ரோட்டில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், ஓ.கே. சின்னராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.ராஜூ, சிங்கை முத்து, முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், பகுதி செயலாளர்கள் வக்கீல் விமல் சோமு, செல்வக்குமார், வெள்ளியங்கிரி, வக்கீல் பிரிவு செயலாளர் ஆறுமுகம், புரட்சித் தம்பி, சிங்கை பாலன், பழையூர் மோகன், ஆதிநாராயணன், மணல்பாரதி, லாலிரோடு ராதா, பிரபாகரன், காலனி ராஜ்குமார், வெள்ளலூர் பாலகிருஷ்ணன், சால்ட் வெள்ளியங்கிரி, சிங்கை ரங்கநாதன், பீளமேடு துரைசாமி, மாரப்பன், சாரமேடு பெருமாள், காட்டூர் செல்வராஜ், ஆர்.பி. பங்கஜ், துரைசாமி, எம்.பி. பாண்டியன், ஏ.பி.கே. சரவணன், கமலஹாசன் பால முரளி, கமலக்கண்ணன், பப்பாய் ராஜேஷ், வக்கீல்கள் பாலகிருஷ்ணன், ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வக்கீல் பிரிவு சார்பில் கோர்ட் முன்பு 47- வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், தாமோதரன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் வக்கீல்கள் பாலகிருஷ்ணன், எஸ்.பி. சந்திரசேகர், ராஜசேகர், கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து, ஆர்.எஸ். மாதவன், ரங்கராஜன், ராமச்சந்திரன், சண்முக சுந்தரம், அண்ணா தொழிற்சங்க நா.கருப்பு சாமி, சிங்கை வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகோபர் தீவில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Earthquake
    ஜகார்த்தா:

    வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட நிக்கோபர் தீவில் இன்று மதியம் 1.43 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவானது. 

    இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த மாதம் அந்தமான் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 குடியேறிகள் சென்ற படகு துனிசியா கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்தள்ளது. #47migrantsdead #Tunisiaboatsink #Tunisiancoast

    டுனிஸ்:

    உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். 

    மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

    உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர். லிபியா நாட்டின் கடற்பகுதி வழியாக சென்றால் கண்காணிப்பு அதிகமாக உள்ளதால் துனிசியா கடற்பகுதி வழியாக இவர்கள் பெரும்பாலும் இத்தாலியை நோக்கிச் செல்கின்றனர்



    அந்தவகையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 அகதிகள் சென்ற படகு துனிசியா கடற்பகுதியில் நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 35 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் நேற்று வெளியாகின. இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணிகளில் மேற்கொண்டு 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடலில் மூழ்கி காணாமல்போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #47migrantsdead #Tunisiaboatsink #Tunisiancoast
    ×