என் மலர்
உலகம்
- மக்களாட்சி நிறுவப்பட்டு பொதுத்தேர்தல் நடந்தபோது ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பிடித்து ஆட்சி அமைத்தது.
- 2021-ம் ஆண்டு மியான்மரில் மீண்டும் புரட்சி வெடித்து ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டது.
மியான்மரை சேர்ந்தவர் ஆங் சாங் சூகி (வயது 80). அந்தநாட்டின் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய தலைவர். இதற்காக 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
அங்கு ராணுவ ஆட்சி ஒழிக்கப்படுவதற்கு 1988-ம் ஆண்டு ஆங் சாங் சூகி நிறுவிய தேசிய ஜனநாயக கட்சி முக்கிய பங்கு வகித்தது. 1989 முதல் 2010 வரை 20 ஆண்டுகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மக்களாட்சி நிறுவப்பட்டு பொதுத்தேர்தல் நடந்தபோது ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பிடித்து ஆட்சி அமைத்தது.
தொடர்ந்து நாட்டின் அரசு ஆலோசகராக செயல்பட்டு வந்தார். 2021-ம் ஆண்டு மியான்மரில் மீண்டும் புரட்சி வெடித்து ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டது. ஆங் சாங் சூகி கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் கடந்த 5 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது இவருடைய மகன் கிம் அரிஸ் தனது தாயான ஆங் சாங் சூகியை சந்திக்க மறுக்கப்படுவதாகவும், வீட்டுச்சிறையிலே அவர் இறந்துவிட்டதாக புகார் தெரிவித்தார்.
இதனை மியான்மரின் ராணுவ அரசாங்கம் மறுத்துள்ளது. அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவருடைய தற்போதைய புகைப்படமோ, வீடியோவையோ வெளியிட்டு ஆதாரத்தை வழங்கவில்லை. இதனால் அவர் வீட்டுச்சிறையிலேயே உயிர் இழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் (IVAC) மூடப்பட்டது.
- அந்நாட்டில் தலைவர்கள் பொதுவெளியில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருகின்றனர்.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் (IVAC), பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்காவில் உள்ள ஜமுனா ஃபியூச்சர் பார்க் வளாகத்தில் இயங்கி வரும் இந்திய விசா விண்ணப்ப மையம், நேற்று மதியம் 2 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
வங்கதேசத்தில் உள்ள சில கிளர்ச்சியாளர்கள் இந்திய தூதரகத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றதாலும், அந்நாட்டில் சில தலைவர்கள் பொதுவெளியில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருவதாலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு இடைக்கால அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச உயர் ஆணையருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் வங்கதேச மக்களுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை வலுப்படுத்தவே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
- திபெத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது
- இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானது.
பீஜிங்:
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்குப் பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது.
இந்நிலையில், திபெத்தில் நேற்று இரவு 9.34 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
- பிரதமர் மோடி முதல் கட்டமாக ஜோர்டான் நாட்டுக்குச் சென்றார்.
- ஜோர்டானைத் தொடர்ந்து 2வது கட்டமாக பிரதமர் மோடி எத்தியோப்பியா சென்றார்.
மஸ்கட்:
பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக ஜோர்டானுக்கும், அதன்பின் எத்தியோப்பியாவுக்கும் அவர் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்நிலையில், எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 3-வது கட்டமாக பிரதமர் மோடி ஓமன் சென்றடைந்தார்.
ஓமன் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.
ஓமன் தலைநகர் மஸ்கட் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அந்நாட்டு துணை பிரதமர் வரவேற்றார்.
- எலான் மஸ்கின் சொத்துமதிப்பு அண்மையில் கிடுகிடுவென உயர தொடங்கியது.
- 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை மஸ்க் படைத்தார்.
உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் இன்டெஸ்க் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனுக்கு 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் அண்மையில் கோரிக்கை வைத்தார். இதற்கு டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எலான் மஸ்கின் சொத்துமதிப்பு கிடுகிடுவென உயர தொடங்கியது. இதன்மூலம் 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை மஸ்க் படைத்தார்.
தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 648 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
- இன்று ராகுல் காந்தி பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.
- காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு சென்றார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.
இன்று அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார். அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை ராகுல் காந்தி நடத்தவுள்ளார்.
இந்நிலையில், இன்று ராகுல் காந்தி முனிச்சில் உள்ள BMW உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். குறிப்பாக ராகுல் காந்தி, பி.எம்.டபிள்யூ. நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட டி.வி.எஸ். நிறுவனத்தின் 450சிசி மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பார்த்தார். இது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
இதனிடையே பேசிய ராகுல் காந்தி, "வலுவான பொருளாதாரங்களுக்கு உற்பத்தித் துறைதான் முதுகெலும்பாகத் திகழ்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் உற்பத்தித் துறை சரிவைச் சந்தித்து வருகிறது. நாம் வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டுமானால், நாம் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் பெருமளவில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- இந்தியாவில் உள்ள எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் இருப்பிடமாக உள்ளது.
- எத்தியோப்பியாவின் விடுதலைக்காக இந்திய வீரர்கள் எத்தியோப்பியர்களுடன் இணைந்து போரிட்டனர்.
எத்தியோப்பியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது அற்புதமாக இருக்கிறது. நான் இங்கு என் சொந்த ஊரில் இருப்பது போல் உணர்கிறேன். ஏனென்றால் இந்தியாவில் உள்ள எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் இருப்பிடமாக உள்ளது.
இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் ஆகிய இரண்டுமே நமது தேசத்தை அன்னை என்று குறிப்பிடுகின்றன. அவை நமது பாரம்பரியம், கலாச்சாரம், அழகு ஆகியவற்றில் பெருமை கொள்ளவும், தாய்நாட்டைப் பாதுகாக்கவும் நம்மை தூண்டுகின்றன.
எத்தியோப்பியா ஆப்பிரிக்காவின் ஒரு முக்கிய சந்திப்பில் அமைந்துள்ளது. இந்தியா இந்தியப் பெருங்கடலின் மையத்தில் உள்ளது. இரு நாடுகளும் பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றில் இயல்பான கூட்டாளிகள்.
இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பில் நான் நட்பு, நல்லெண்ணம் மற்றும் சகோதரத்துவ வாழ்த்துக்களைக் கொண்டு வந்து உள்ளேன். எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்த விருதை இந்திய மக்களின் சார்பாக பணிவுடனும் கைகூப்பியும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்தியாவும் எத்தியோப்பியாவும் தட்பவெப்ப நிலையிலும் உணர்விலும் ஒருமித்த அன்பைப் பகிர்ந்து கொள்கின்றன. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையர்கள் பரந்த கடல்களுக்கு அப்பால் தொடர்புகளை உருவாக்கினார்கள்.
1941-ம் ஆண்டில் எத்தியோப்பியாவின் விடுதலைக்காக இந்திய வீரர்கள் எத்தியோப்பியர்களுடன் இணைந்து போரிட்டனர்.
இந்திய நிறுவனங்கள் எத்தியோப்பியாவில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒன்றாக உள்ளன. வளரும் நாடுகளாக இந்தியாவும் எத்தியோப்பியாவும் ஒரு வருக்கொருவர் கற்றுக் கொள்ளவும், வழங்கவும் நிறைய உள்ளன.
உலகளாவிய தெற்குப் பகுதி யாருக்கும் எதிராக அல்லாமல், அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் எழுச்சி பெறும் ஒரு உலகமாகும்.
பயங்கரவாதத்தை எதிர்க்கும் எத்தியோப்பியா நாட்டிற்கு நன்றி
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
- சுமார் 57,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இதில் 440 பேர் பலியாகினர்.
முன்பு வெறும் முன்னெச்சரிக்கையாக இருந்து வந்த கலாநிலை மாற்றம் என்ற சொல் அஞ்சியபடி தற்காலத்தில் நிதர்சனமான ஒன்றாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளை உலகம் அனுபவித்து வருகிறது.
அந்த வகையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளை உலகம் இதுவரை கண்டிராத வகையில் சந்தித்தது.
உலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பெரும்பாலான இயற்கை பேரிடர்களுக்கு விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தையே முக்கிய காரணியாக குறிப்பிடுகின்றனர். அதன்படி காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கத்தால் இந்தாண்டு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.
மியான்மர் - நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகள்
மார்ச் 2025-இல் மியான்மரின் மண்டலே பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய நிலச்சரிவுகளைத் ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

தொடர்ந்து ஜூலை மாதத்தில் பெய்த பருவமழையினால் கச்சின்மாநிலத்தின் ஜேட் சுரங்கப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.
ஆப்கானிஸ்தான் பேரழிவுகள்
ஆப்கானிஸ்தானில் 2025-ஆம் ஆண்டு இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆகஸ்ட் 31-இல் ஜலாலாபாத் அருகே ஏற்பட்ட 6.0 ரிக்டர் நிலநடுக்கத்தால் மலைப்பகுதிகளில் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல கிராமங்கள் சிதைந்தன. இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நவம்பர் மாதத்தில் பல்க் மாகாணத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. பனிப்பொழிவு, சாலைகள் துண்டிப்பு காரணமாக அந்த மக்களுக்கு உதவி கிடைப்பதிலும் பெரும் சிக்கல்கள் நீடித்தன.
ஐரோப்பாவை வாட்டியெடுத்த வெப்ப அலை
ஏப்ரல் மாதம் முதலே ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் வெப்பம் தகித்தது. ஜூன், ஜூலை மாதங்களில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது.
இந்த அதீத வெப்பத்தால் அல்பேனியா, போஸ்னியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பா முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த வெப்ப அலைக்கு 16,500 பேர் பலியாகினர் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

கலிபோர்னியா காட்டுத்தீ
இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 14 இடங்களில் காட்டுத்தீ பரவியது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 57,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இதில் 440 பேர் பலியாகினர்.

டெக்சாஸ் திடீர் வெள்ளம்
ஜூலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த அதீத மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 135 பேர் உயிரிழந்தனர். சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன.

இந்தியா - பாகிஸ்தான் வெப்ப அலை
இந்தியாவில் ஏப்ரல் மாதத்திலேயே அக்னி நட்சத்திரம் போன்ற வெயில் வாட்டியது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இந்தியாவில் மட்டும் இரண்டு மாதங்களில் 455 பேர் வெப்ப பாதிப்புகளால் உயிரிழந்தனர்.

சூடான் நிலச்சரிவு
ஏற்கனவே உள்நாட்டு போரால் மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருந்த வேலையில், சூடானின் தாராசின் கிராமத்தை ஆகஸ்ட் 31 ஏற்பட்ட நிலச்சரிவு மொத்தமாக விழுங்கியது.
இரண்டு கட்டங்களாக நிகழ்ந்த இந்த நிலச்சரிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர்களும் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். இதில் சுமார் 1,500 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் பெருவெள்ளம்
2025 ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை, பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களை உருக்குலைத்தது. 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்தனர்.
நேபாளம் நிலச்சரிவுகள்
அக்டோபர் மாதம் நேபாளத்தின் இலாம் (Ilam) மாவட்டத்தில் பெய்த அதீத மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சுமார் 60 பேர் பலியாகினர்.

மேலும், ரசுவாகாதி பகுதியில் பனி ஏரி உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் அந்நாட்டின் உள்கட்டமைப்பைச் சீர்குலைத்தது.
தென்கிழக்கு ஆசியாயை தாக்கிய சென்யார் புயல்
2025-ஆம் ஆண்டின் இறுதியில் நவம்பர் - டிசம்பர் காலகட்டத்தில் மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை உலுக்கிய சென்யார் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சுமார் 2,100 பேர் உயிரிழந்தனர்.

இதனால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு சுமத்ராவின் சிபோல்கா மற்றும் மேற்கு சுமத்ராவின் அகாம் பகுதிகளில் கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. சுமார் 12 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இலங்கையை உலுக்கிய டிட்வா புயல்
இந்தியப் பெருங்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கை மற்றும் தென்னிந்தியாவைத் தாக்கியது. இலங்கையில் இது மிகப்பெரிய நிலச்சரிவுகளையும் வெள்ளத்தையும் ஏற்படுத்தியது. 600-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன், சுமார் 1.6 பில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. தமிழகம் டிட்வா புயலில் இருந்து நூலிழையில் தப்பியது.

இந்த அனைத்து நிகழ்வுகளையும் இணைக்கும் ஒரே புள்ளி, ஒரே காரணி புவி வெப்பமயமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றம் ஆகும். பனிப்பாறைகள் உருகுவதும், கடல் மட்டம் உயர்வதும், பருவநிலை மாறுபடுவதும் கணிக்கமுடியாத வெள்ளம், நிலச்சரிவுகளை ஏற்படுத்தி மனிதகுலத்தின் இருப்பிற்கே சவாலாக மாறியுள்ளன.
இனியேனும் உலகம் விழித்துக்கொள்ளுமா அல்லது தீவிர வலதுசாரியான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் கூறுவது போல் "காலநிலை மாற்றம் என்பது ஏமாற்று வேலை" என்று தான் ஒரு பொய்யான மாயையில் வாழ்ந்து கொண்டிருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் மோடியே.
பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்கு சென்றவர் அங்கிருந்து நேற்று எத்தியோப்பியா சென்றைடைந்தார். அங்கு அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி அவரை வரவேற்றார்.
பின்னர் ஒருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பொருளாதாரம், தொழில் நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை குறித்து நீண்டது பேச்சு. எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க இந்தியா முடிவு செய்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின், தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் இந்த விருதை மோடிக்கு அளித்தார். இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் மோடியே ஆவார்.
- சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்தது.
- இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.
பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் நேற்று இந்தத் தாக்குதலை நடத்தியது.
இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்தது.
சமீபகாலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமை காட்டி வரும் நிலையில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை போதைப்பொருள் படகுகள் இல்லை என்றும் இந்தத் தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் விமர்சனம் எழுந்தது.
ஆனால், சர்வதேச சட்டங்களின்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பென்டகன் விளக்கம் அளித்துள்ளது.
- அவரை அமரவைத்து ஜோர்டான் மன்னர் கார் ஓட்டிய வீடியோ வைரலானது.
- இந்தியர்களுடன் சந்திப்பு நடந்தும் மோடி அடுத்ததாக ஓமன் செல்ல உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அதன்பின், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் அருங்காட்சியகம் ஒன்றை பார்வையிட்டார். அவரை அமரவைத்து ஜோர்டான் மன்னர் கார் ஓட்டிய வீடியோ வைரலானது.
இந்த நிலையில், ஜோர்டான் டிரிப்-ஐ முடித்துவிட்டு, பிரதமர் மோடி எத்தியோபியா சென்றடைந்தார்.
எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள மோடியை எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி வரவேற்றார்.
இந்த பயணத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை, எதியோபியாவுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் சந்திப்பு நடந்தும் மோடி அடுத்ததாக ஓமன் செல்ல உள்ளார்.
- இந்த கார் இறக்கை இல்லாமல் நிற்கும் இடத்திலிருந்தே takeoff செய்ய முடியும்
- சாதாரண கார் போல் 4 சக்கரங்களோடு சாலையில் ஓடவும் முடியும்
உலகின் முதல் பறக்கும் கார் என அறியப்படும் Alef Model A Ultralight 2 உற்பத்திக்கு தயாரானது. இறக்கை இல்லாமல் நிற்கும் இடத்திலிருந்தே takeoff செய்யவும் சாதாரண கார் போல் 4 சக்கரங்களோடு சாலையில் ஓடவும் முடியும் என்பதாலேயே உலகின் முதல் உண்மையான பறக்கும் கார் ஆக இது கருதப்படுகிறது.
இந்த பறக்கும் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 350 கிமீ வரை சாலையில் ஓடவும் 170கிமீ வரை பறக்கவும் முடியும்.
இந்த பறக்கும் கார் குறிப்பிட்ட சிலருக்கே முதலில் வழங்கப்பட்டு மிகுந்த சோதனைக்கு பின்னர் இது பொது சந்தைக்கு வரும் என Alef Aeronautics நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் விலை சுமார் ரூ. 2.7 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.






