என் மலர்
உலகம்
- 10 வயது நிரம்பாத சிங்கப்பூர் சிறுமி ஒருவர் குகேஷை நெருங்கினாள்.
- சிறுமியின் அன்பை கண்டு பூரித்துபோன குகேஷ் பேரன்புடன் அதில் தனது ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழக வீரர் குகேஷ் சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு, முன்னாள் சாம்பியன் கார்ல்சன் தொடங்கி உலக பணக்காரரான எலான் மஸ்க் வரை உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. போட்டி முடிந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் குகேஷ் கலந்து கொண்டார். அப்போது 10 வயது நிரம்பாத சிங்கப்பூர் சிறுமி ஒருவர் குகேஷை நெருங்கினாள்.
தான் குகேஷின் தீவிர ரசிகை எனக்கூறியபடி தன் கைகளால் செய்யப்பட்ட தலையணை ஒன்றை அவரிடம் காண்பித்து 'ஆட்டோகிராப்' போடும்படி கேட்கிறார். சிறுமியின் அன்பை கண்டு பூரித்துபோன குகேஷ் பேரன்புடன் அதில் தனது ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 20 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- மயோட்டே தீவை சிடோ புயல் கடுமையாக தாக்கியது.
- பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மமுத்சொ:
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவு மடகாஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது.
இந்நிலையில், மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்தப் புயலால் பல வீடுகள் சேதமடைந்தன.
மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தப் புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.
புயல் தாக்கிய மயோட்டே தீவிற்கு தேவையான நிவாரண உதவிகளை பிரான்ஸ் அரசு வேகப்படுத்தியுள்ளது. மீட்புப்பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எலான் மஸ்க் பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேமை விளையாடி வந்தார்.
- எலான் மஸ்க் டையப்லோ IV என்ற என்ற வீடியோ கேமின் ன்லீடர்போர்டில் முதலிடத்திற்கு முன்னேறினார்.
உலக பணக்காரரான எலான் மஸ்க் டையப்லோ IV என்ற என்ற வீடியோ கேமை விளையாடி வந்தார். இந்த விளையாட்டின் லீடர்போர்டில் எலான் மஸ்க் முதலிடத்திற்கு முன்னேறினார். இதன்பிறகு அவர் பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேமை விளையாடி வந்தார்.
இந்நிலையில், பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேம் விளையாடியதில் சீட்டிங் செய்ததாக கூறி உலக பணக்காரரான எலான் மஸ்க் அவ்விளையாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
'மிக வேகமாக பல செயல்களைச் செய்ததற்காக நீங்கள் வெளியேற்றப்பட்டீர்கள்"'என்ற அந்த வீடியோ கேமின் ஸ்க்ரீன்சாட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஸ்க், "சிறிய அளவில் கூட அதை நான் செய்யவில்லை" என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.
- அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் உசேனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதுகுறித்து ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா இன்று தெரிவித்திருந்தார்.
இந்தியரான ஜாகிர் உசேன், அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் ஹுசைனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.
மேலும், கடந்த ஒரு வாரமாக ஜாகிர் உசேன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், இன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
சாகிர் உடல்நிலை குறித்து அவரது நண்பர் ராகேஷ் கூறுகையில், "அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் அவரது நிலைமை குறித்து கவலைப்படுகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயரிழிந்தார்.
- கோடைகாலங்களில் பகல்நேரத்தை அதிகரிக்க 'பகல் சேமிப்பு நேரம்' என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- கோடைகாலம் துவங்கும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை முன்னோக்கி நகர்த்தி வைப்பர்.
அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பகல் சேமிப்பு நேரம் (Daylight Saving Time-DST) என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நீண்ட கோடைகாலங்களில் பகல்நேரத்தை அதிகரிக்க 'பகல் சேமிப்பு நேரம்' என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது கோடைக்காலம் துவங்கும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை முன்னோக்கி நகர்த்தி வைப்பர். இதன் மூலம் அதிகமான பகல் நேரம் கிடைக்கும். பின்னர் கோடைகாலம் முடியும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை பின்னோக்கி நகர்த்தி வைப்பர்.
இதன்படி அமெரிக்காவில் மார்ச் மாதம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை கடிகாரத்தை 1 மணிநேரம் முன்னோக்கி நகர்த்தி வைப்பார்கள். பின்னர் நவம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று கடிகாரத்தில் 1 மணிநேரத்தை பின்னோக்கி நகர்த்தி வைப்பார்கள்.
முதல் உலகப் போரின் போது இந்த நடைமுறை உருவானது, பின்னர் இரண்டாம் உலகப் போரில் ஆற்றலைச் சேமிப்பதற்காக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1966 இல் சீரான நேரச் சட்டத்துடன் மேலும் தரப்படுத்தப்பட்டது. அதே சமயம், ஹவாய் மற்றும் அரிசோனாவின் பெரும் பகுதி 'பகல் சேமிப்பு நேரம்' என்ற நடைமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த 'பகல் சேமிப்பு நேரம்' முறைக்கு அமெரிக்காவில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பகல் நேரங்களில் ஏற்படும் நேர மாறுதல்களால் தூக்கம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பகல் சேமிப்பு நேர முறையை அகற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "குடியரசுக் கட்சி பகல் சேமிப்பு நேரத்தை அகற்ற சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும். பகல் சேமிப்பு நேர முறை நமக்கு தேவையில்லை. அது சிரமமானது மற்றும் செலவு மிகுந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
- அதுவே உலகின் முதல் தேநீர் பானம் என்றானது
- ஐக்கிய நாடுகள் சபை 2019 இல் மே 21 ஆம் தேதியை ஒரு புதிய சர்வதேச தேயிலை தினமாக அறிவித்திருந்தது
என்னதான் காப்பி, ஜூஸ் என இருந்தாலும் உலகம் முழுவதிலும் மக்களுக்கு விருமபான பானமாக என்றும் முதலிடத்தில் உள்ளது தேநீர் ஒன்றே ஆகும். அத்தகைய தேநீரின் சிறப்புகளை பறைசாற்றும் விதத்தில் வருடந்தோறும் டிசம்வர் 15 உலக தேநீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் தேயிலையின் நீண்ட வரலாறு மற்றும் அதன் கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் இந்த தினம் இந்தியா, இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, வங்கதேசம், கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, தான்சானியா ஆகியவை தேயிலை உற்பத்திக்கு பெயர் போன நாடுகள் கொண்டாடுகிறது.

இந்தியாவில் முதல் சர்வதேச தேயிலை தினம் டிசம்பர் 15, 2005 இல் புது டெல்லியில் கொண்டாடப்பட்டது. சுமார் 5,000 ஆண்டுகள் சீனப் பேரரசர் ஷென் நங் தற்செயலாக தேயிலையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. அவரது ஆட்களுடன் ஒரு மரத்தடியில் அமர்ந்து தண்ணீர் கொதிக்க வைக்கும்போது, காற்றில் பறந்த தேயிலை இலைகள் பானையில் விழுந்துள்ளது.
இது தண்ணீருக்கு சுவையூட்டிய நிலையில் அதுவே உலகின் முதல் தேநீர் பானம் என்றானது. அன்றுதொட்டு கலாச்சார பரிமாற்றங்கள் மூலம் தேயிலை வளர்ப்பு உலகம் முழுவதும் பரவி உள்ளது.
தேயிலை வளர்ப்பு அதிகப்படியான பொருளாதார சந்தையாக மாறினாலும், இலங்கை, இந்தியா, மலேசியா என கடந்த நூற்றாண்டில் பஞ்சத்தை காரணமாக வைத்து தமிழர்கள் உட்பட பல இன மற்றும் மொழிக் குழுக்களை சேர்ந்த மக்கள் தேயிலை தோட்ட அடிமைகளாக இருந்த சரித்திரத்தையும் இந்நாளில் நினைவு கூற வேண்டியது அவசியமாகும்.

ஐக்கிய நாடுகள் சபை 2019 இல் மே 21 ஆம் தேதியை ஒரு புதிய சர்வதேச தேயிலை தினமாக அறிவித்திருந்தாலும் 2005 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா உள்ளிட்ட மேற்கூறிய முக்கிய தேயிலை உற்பத்தி நாடுகளில் டிசம்பர் 15 ஆம் தேதி உலக தேநீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் இணை நிறுவனர் குருபத்வந்த் சிங் பன்னுன்
- ரஷிய ஊடகம் காலிஸ்தான் குறித்த தப்பெண்ணத்தை பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்த தகவல்களை ரஷியா இந்திய உளவு அமைப்பான RAW விற்கு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
RAW வுடனும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனும் தொடர்பில் உள்ள ரஷிய அமைப்புகள் இந்த முக்கிய தகவல்களைப் பரிமாறுவதாக சீக்கியர்களுக்கான நீதி [எஸ்.எப்.ஜே] அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் இணை நிறுவனர் குருபத்வந்த் சிங் பன்னுன், காலிஸ்தானுக்கு எதிராகச் செயல்படுவதாக ரஷியாவை எச்சரித்துள்ளார்.

ரஷிய ஊடகம் காலிஸ்தான் குறித்த தப்பெண்ணத்தை பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே நியூ யார்க்கில் உள்ள ரஷிய தூதரகம் முன் எஸ்எப்ஐ உறுப்பினர்கள் போராட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அமரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள ரஷிய தூதரகம் முன்னும் ஆர்ப்பாட்டம் நடத்த எஸ்எப்ஐயினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக குருபத்வந்த் சிங் பன்னுன் மீதான கொலை முயற்சியில் இந்தியாவை தொடர்புப்படுத்தி சர்ச்சை எழுந்ததும், அவர் இந்திய விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
- குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு இரு குழுக்களிடையே சண்டை.
- வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டவைகள் என்பது தெரிய வந்துள்ளது.
மணிலா:
தாய்லாந்தின் வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் நள்ளிரவில் இசை திருவிழா நடந்தது.
இதில் சுமார் 9 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திடீரென்று குண்டு வெடித்தது. இதனால் திருவிழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருவிழாவில் பங்கேற்ற கூட்டத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்த பகுதி மியான்மர் எல்லைக்கு அருகே உள்ளது. அங்கு கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கே.என்.யூ என்ற கிளர்ச்சிக் குழுவினர் தங்களது எதிரிகும்பலுடன்' மோதலில் ஈடுபட்டதாகவும், அப்போது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை அந்த கிளர்ச்சி குழு மறுத்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சரின் செய்தித்தொடர்பாளர் தனதிப் சவாங்சாங் கூறும்போது, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு இரு குழுக்களிடையே சண்டை நடந்துள்ளது.
அந்த வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டவைகள் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று உள்ளூர் போலீசார் தெரிவித்தனர் என்றார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது.
- நாட்டுக்காக என் ஆசையை கைவிட முடியாது.
ஈரானில் பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில் ஈரான் பாடகியான பரஸ்டூ அஹமதி (வயது27) ஆன் லைனில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இதில் அவர் நீண்ட கருப்பு ஸ்லீவ்லெஸ் மற்றும் காலர் இல்லாத ஆடையை அணிந்து இருந்தார். அவருடன் 4 பேர் கொண்ட இசைக்குழு இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

முன்னதாக அந்த வீடியோவில், அவர், எனக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம். ஆனால் நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது. இருப்பினும் நாட்டுக்காக என் ஆசையை கைவிட முடியாத பெண்ணாக இந்த கச்சேரியை நடத்துகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இசை நிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாத தால் பாடகி பரஸ்டூ அஹமதியை போலீசார் கைது செய்து உள்ளனர். வடக்கு மாகாணமான மஸந்தரானின் தலை நகர்சாரி சிட்டியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இசைக்குழுவில் உள்ள இசொஹைல் பாகி நசிரி, எஹ்சான் பெய்ராக்தார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இந்திய நிறுவனங்கள் கூடுதலாக 5 சதவீத வரி செலுத்தியாக வேண்டும்.
- இதற்கு இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) என்று பெயர்.
இந்தியாவை தங்களின் விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதனால் அங்கு வணிகம் மேற்கொண்டிருக்கும் நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து இந்தியவிலும், இந்திய நிறுவனங்களும் அந்நாட்டிலும் வர்த்தகம் செய்து வருகின்றன. சுவிட்சர்லாந்து சட்டப்படி மற்ற நாட்டு நிறுவனங்கள் 10% வரியை செலுத்த வேண்டும்.
ஆனால் இந்தியா போன்று விருப்ப பட்டியலில் இருக்கும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 5% வரியை செலுத்தினால் போதுமானது. இதற்கு இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) என்று பெயர். இந்த விருப்ப பட்டியலிலிருந்துதான் தற்போது இந்தியாவை அந்நாடு நீக்கியிருக்கிறது.
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வணிக நிறுவனமான 'நெஸ்லே' பொருட்கள் இந்தியாவில் அதிக புழக்கத்தில் உள்ளன. அதில் குறிப்பாக மேகி நூடுல்ஸ் அதிக விற்பனை ஆகும் பண்டமாக இருந்தது.

ஆனால் உணவுப் பொருளான மேகி நூடுல்ஸ் -இல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ரசாயனம் கலந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மேகி இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
ஆனால் அதிக ரசாயனம் கலக்கவில்லை என கூறி நெஸ்லே நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

வெகு காலமாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசின் முடிவு சரிதான் என்ற தீர்ப்பளித்தது. இதனால் குமைச்சலில் இருந்த சுவிட்சர்லாந்து தற்போது இந்த வேலையை பார்த்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் இந்த உத்தரவு 2025 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அன்றைய தேதி முதல் அந்நாட்டில் வணிகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் கூடுதலாக 5 சதவீத வரி செலுத்தியாக வேண்டும்.
- சரக்கு கப்பல்கள் உதவியுடன் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
- அகதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்
கிரீஸ் நாட்டின் கடற்பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிரீஸ் நாட்டில் உள்ளதற்குத் தீவான கவ்டோஸ் பகுதியில் நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] இரவு அகதிகளை ஏற்றி கொண்டுவந்த மரப் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கிரீஸ் கடலோர காவல்படை நேற்று [சனிக்கிழமை] தெரிவித்துள்ளது.
சரக்கு கப்பல்கள் உதவியுடன் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்டவர்களில் 29 பெண்கள் அடங்குவர். அகதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை தெரியாததால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக அகதிகள் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
- 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
- குகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "18வது @ 18!" என்று பதிவிட்டிருந்தார்
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது.
நேற்று முன்தினம் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார். இதன்மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
இதனால் குகேஷ்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் நிறுவங்களின் உரிமையாளரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க் குகேஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "18வது @ 18!" என்று பதிவிட்டிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.






