என் மலர்
உலகம்
- 'சாட் ஜிபிடி' க்கு பயிற்சி அளித்தல், அதன் மேம்பாடு தொடர்பான பணிகளை செய்தவர் ஆவார்
- மனித குலத்துக்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் எச்சரித்தார்.
OpenAI நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும், அந்நிறுவனத்தின் தீய நடைமுறைகளை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவருமான 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார்.
நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் நிலவி வந்த நிலையில் தற்கொலை மூலமே அவரது உயிர் பிரிந்துள்ளதாக சான் பிரான்சிஸ்கோ மருத்துவ பரிசோதகர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து அவரது இறப்பில் எந்த மர்மமும் இல்லை என சான் பிரான்சிஸ்கோ போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

யார் இந்த சுசீர் பாலாஜி?
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுசீர் பாலாஜி, ஏஐ தொல்நூட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஓபன் ஏஐ நிறுவனத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கணினி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.
சுமார் 4 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பாலாஜி 2022 பிற்பகுதியில் அந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'சாட் ஜிபிடி' க்கு பயிற்சி அளித்தல், அதன் மேம்பாடு தொடர்பான பணிகளை செய்தவர் ஆவார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2024 இல் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
இதைத்தொர்ந்த்து ஓபன் ஏஐ சாட் ஜிபிடி குறித்த பல குற்றசாட்டுகளை பாலாஜி பொதுவெளியில் முன்வைத்தார். நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த பாலாஜி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் வணிக கொள்கைகள் வணிகங்களுக்கும் சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்ததால் அதில் இருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

சாட் ஜிபிடிக்கு பயிற்சி அளிக்க பதிப்புரிமை பெற்ற தரவுகளை ஓபன் ஏஐ பயன்படுத்தி அமெரிக்க பி[பதிப்புரிமை சட்டத்தை மீறியதாக அவர் குற்றம் சாட்டினார். பல எழுத்தாளர்கள், கம்பியூட்டர் புரோகிராமர்கள், பத்திரிகையாளர்கள் தங்களின் உழைப்பை ஓபன் ஏஐ எந்த அனுமதியும் இன்றி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.
பாலாஜியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஓபன் ஏஐ மீது பல வழக்குகளும் தொடரப்பட்டன. கடுமையான விதிமுறைகள் இல்லாமல் மனித குலத்துக்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் கவலை தெரிவித்தார்.காலப்போக்கில், இந்த தொழில்நுட்பம் சமூகத்திற்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் பாலாஜியின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. கடைசியாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவிலும் ஓபன் ஏஐ மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஏஐ வளர்ச்சி குறித்த கவலையை வெளிப்படுத்தி இருந்தார்.
உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சேவைகள் ஏஐ ஆல் சக்தியூட்டப்பட்டவை என்று விளம்பரம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவுக்கு ஏஐ பெரு வணிகத் தேவையாக வளர்ந்துள்ள நிலையில் பாலாஜி மரணத்தை போலீஸ் தற்கொலை என்ற முடிவுக்கு வந்தாலும், இதில் இன்னும் மர்மம் உள்ளதாகவே பலர் சந்தேகிக்கின்றனர்.
- டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் ஷார்ட் பொசிஷனை அதிக அளவில் வைத்துள்ளார்.
- டெஸ்லா நிறுவனத்தால் 1.5 பில்லியன் டாலரை இழந்ததாக கூறினார்
உலக பணக்காரர்களான மைகோரோசாப்ட் நிறுவர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் நீண்ட நாள் பகையாளிகள். பில் கேட்ஸை தனது கருத்துக்களால் அவ்வப்பொது எலான் மஸ்க் சீண்டுவது வழக்கம்.
டிரம்ப் ஆதரவால் தற்போது அமெரிக்க அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள எலான் மஸ்க் சொத்துமதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. எனவே தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் மீண்டும் பில் கேட்ஸை சீண்டியுள்ளார்.

'டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார். ஆனால் டெஸ்லா உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுக்கும்பட்சத்தில் அது பில்கேட்ஸை கூட திவாலாக்கி விடும்' என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் ஷார்ட் பொசிஷனை அதிக அளவில் வைத்துள்ளார். பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் சரிய போகிறது என்று கூறி அந்த விஷயத்தில் முதலீடு செய்வதே ஷார்ட் பொசிஷன் ஆகும்.
டெஸ்லா நிறுவனத்தால் 1.5 பில்லியன் டாலரை இழந்ததாக கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் டெஸ்லா பங்குகளை ஷார்ட் செய்தார்.
இதன்படி டெஸ்லா திவாலாகும்பட்சத்தில் அது பில் கேட்ஸ்-கு அதிக லாபத்தை வழங்கும். இதற்கு, எலான் மஸ்க் கடுமையான எதிர்வினையாற்றினார். அதிலுருந்து இருவருக்குமிடையில் பகை வளர்ந்தது.

இந்த நிலையில்தான், தற்போது தனக்குள்ள செல்வாக்கை பறைசாற்றும் விதமாக டெஸ்லா திவாலாகாமல் ஒரு வேலை அதற்கு நேர்மாறாக உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்தால் அதனால் பில் கேட்ஸ் கூட சொத்துக்களை இழந்து திவாலாகி விடுவார் என்று மஸ்க் தம்பட்டம் அடித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்டின் சந்தை மூலதனம் அல்லது சந்தை மதிப்பு $3.316 டிரில்லியன் ஆகும். அதேவேளை டெஸ்லாவில் சந்தை மதிப்பு $1.251 டிரில்லியன் ஆகும்.
- இரண்டாவது முறையாக யூன் பதவிநீக்கம் தொடர்பாக புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.
- தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின.
அவசர நிலை
பட்ஜெட் மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காததால் தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார். 45 வருட தென் கோரிய அரசியல் வரலாற்றில் அவசர நிலை பிரகடனப்படுத்தபட்டது இதுவே முதல் முறை ஆகும்.
பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவருக்கு எதிரான தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.

பதவி நீக்கம்
ஆனால் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆனால் மக்களிடையே வலுக்கும் எதிர்ப்பால் சொந்த கட்சியினரே யூனுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதற்கிடையே இரண்டாவது முறையாக யூன் பதவிநீக்கம் தொடர்பாக புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று [சனிக்கிழமை] தென் கொரிய பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் யூன்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
வாக்கெடுப்பில் மொத்தம் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின. 3 பேர் வாக்களிக்க மறுத்தனர். 8 வாக்குகள் செல்லாததாயின.
இதன்படி தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகியுள்ளதால் யூன் சுக் பாராளுமன்றத்தால் ஒருமனதாக பதவிநீக்கம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்தது என்ன?
ஆனால் இதனால் யூன் உடனே பதவியை விட்டு விலகமாட்டார். தென் கொரிய சட்டப்படி, இந்த வெற்றி பெற்ற தீர்மானம் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், பதவி நீக்கம் முற்றிலுமாக செயல்பாட்டுக்கு வர பல வாரங்கள் ஆகும்.

நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகளில் ஆறு பேர் பதவி நீக்கத்தை உறுதிப்படுத்தி வாக்களித்தால், யூன் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார். யூனை பதவி நீக்கம் செய்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து தீர்ப்பளிக்க நீதிமன்றத்திற்கு 180 நாட்கள் வரை அவகாசம் உள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் யூன் சுக் நியமித்த பிரதமர் ஹான் டக்-சூ, அரசாங்கத்தின் செயல் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
- ரஷியாவுக்குள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு ஏவுகணைகளை அனுப்புவதோடு நான் உடன்படவில்லை.
- நாம் போரை அதிகரித்து மோசமாக்கி கொண்டிருக்கிறோம். இதை அனுமதிக்கக் கூடாது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், தான் போரை விரும்பவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பேன் எனத் தெரிவித்தார். இதன்மூலம் உக்ரைன்- ரஷியா, இஸ்ரேல்- ஹமாஸ், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ரஷியாவை எதிர்த்து போரிய உக்ரைனுக்கும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை எதிர்த்து போரிட இஸ்ரேலுக்கும் அமெரிக்காதான் ராணுவ உதவி (ஆயுதம் வழங்குதல்) செய்து வருகிறது. போர் நிறுத்தம் ஏற்படடைவில்லை என்றால் டொனால்டு டிரம்ப் கட்டாயமாக ராணுவ உதவியை குறைப்பார்.
கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன அதிபர் ஜெலன்ஸ்கியை டொனால்டு டிரம்ப் சந்தித்தார். பின்னர் சமூக வலைத்தளத்தில் "உக்ரைன்- ரஷியா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க ஏவுகணைகளை ரஷியா மீது உக்ரைன் செலுத்துவது பைத்தியக்காரத்தனம் என டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில் "உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் அங்கே என்ன நடக்கிறது (அமெரிக்க ஏவுகணைகளை ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்துவது) என்பது பைத்தியக்காரத்தனம். அது பைத்தியக்காரத்தனம்.
ரஷியாவுக்குள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு ஏவுகணைகளை அனுப்புவதோடு நான் மிகவும் கடுமையாக உடன்படவில்லை. நாம் இதை ஏன் செய்து கொண்டிருக்கிறோம். நாம் போரை அதிகரித்து மோசமாக்கி கொண்டிருக்கிறோம். இதை அனுமதிக்கக் கூடாது.
நான் உக்ரைனை கைவிடமாட்டேன். நான் ஒரு ஒப்பந்தத்தை அடைய விரும்புகிறேன். இந்த ஒப்பந்தத்திற்கு நீங்கள் சென்று கொண்டிருப்பதுதான் கைவிடாமல் இருப்பதற்கு ஒரே வழி.
உக்ரைன்- ரஷியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட மிகவும் சிறந்த திட்டம் உள்ளது. ஆனால் அதை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. எனக்கு உதவ ஒரு நல்ல திட்டம் இருப்பதாக நினைக்கிறேன், ஆனால் நான் அந்த திட்டத்தை அம்பலப்படுத்தத் தொடங்கும்போது, அது கிட்டத்தட்ட ஒரு பயனற்ற திட்டமாக மாறிவிடும்" என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- விபத்துக்குள்ளான விமானம் இரட்டை எஞ்சின் பைபர் பிஏ -31 ரகத்தை சேர்ந்தது.
- இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவில் விமானம் நெடுஞ்சாலையில் மோதி இரண்டாக முறிந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று தெற்கு டெக்சாஸின் விக்டோரியாவில் உள்ள ஸ்டேட் ஹைவே லூப் சாலையில் பிற்பகல் 3 மணியளவில் இரட்டை எஞ்சின் ப்ரொப்பல்லர் விமானம் ஒன்று கார்கள் மீது மோதியது.
சாலைக்கு மேல் தாழ்வாக பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென சாலையில் செல்லும் 3 கார்கள் மீது மோதி கீழே விழுந்து இரண்டாக முறிந்தது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக விக்டோரியா பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானம் இரட்டை எஞ்சின் பைபர் பிஏ -31 ரகத்தை சேர்ந்தது.
விபத்து நடந்தபோது விமானி மட்டுமே விமானத்தில் இருந்துள்ளார். விபத்தில் அவர் உயிர் தப்பிய நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு வழங்கப்படவில்லை.
- இண்டிகோ சார்பில் யாரும் விமான நிலையம் வரவில்லை.
துருக்கியில் இருந்து டெல்லி மற்றும் மும்பை வரவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் விமானம் தாமதமாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது என பயணிகள் தங்களின் எக்ஸ் மற்றும் லின்க்டுஇன் தளங்களில் பதிவிட்டுள்ளனர். விமான பயணிகளில் ஒருவர் தனது பதிவில், "முதலில் விமானம் இரண்டு முறை தாமதமானது, பிறகு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், 12 மணி நேரம் கழித்து விமானம் புறப்பட தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் விமான பயணிகளில் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு எதுவும் வழங்கப்படவில்லை. இண்டிகோ நிறுவனம் சார்பில் யாரும் விமான நிலையம் வரவும் இல்லை, பயணிகளை அனுகவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக ஏர்ஹெல்ப் ஸ்கோர் வெளியிட்ட அறிக்கையின் படி உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இண்டிகோ இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆங்கில இதழ் டைம்.
- அதிகம் செல்வாக்கு மிக்க நபரை தேர்வுசெய்து டிசம்பர் இதழில் வெளியிட்டு வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான 'டைம்' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய நிகழ்வுகளிலும், செய்திகளிலும் அதிகம் செல்வாக்கு மிக்க நபரை தேர்வுசெய்து டிசம்பர் மாத இதழில் வெளியிட்டு வருகிறது.
இதற்காக சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி மிகச்சிறந்த மனிதரை அந்த இதழ் தேர்ந்தெடுக்கும். அப்படித் தேர்வு செய்யப்படுபவரின் புகைப்படம் டைம் இதழில் வெளி வரும்.
இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் பற்றிய வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபராக தேர்வு பெற்ற டொனால்டு டிரம்ப் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்து 'டைம் இதழில் இடம்பெற்றுள்ளார்.
ஏற்கனவே, கடந்த 2016-ம் ஆண்டு டைம் இதழின் சிறந்த மனிதர் பட்டியலில் டிரம்ப் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
- சமீப காலங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
சீன பெண் ஒருவர் ரெயிலில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலானது.
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ரெயிலில் பயணிக்கும்போது அப்பெண் ரெயிலுக்கு வெளியே தலையை நீட்டி ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த சமயத்தில் ஒரு மரத்தில் மோதி அப்பெண் கீழே விழுந்துள்ளார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்பெண் ஒரு புதருக்குள் விழுந்ததால் காயமின்றி உயிர் தப்பினார்.
சமீப காலங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
- உக்ரைன்- ரஷியா இடையே 2022-ல் இருந்து சண்டை நடைபெற்று வருகிறது.
- தற்போது ரஷியா ஒரு நகரை பிடிக்க கடுமையான சண்டையிட்டு வருகிறது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா திடீரென படையெடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவிகளை உக்ரைன் பெறுவதற்குள், உக்ரைனின் பல நகரங்களை ரஷியா பிடித்துக்கொண்டது. அதன்பின் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள ரஷியா படைகளை குவித்துள்ளது. அதேவேளையில் உக்ரைன் இழந்த பகுதிகளை மீட்க அமெரிக்கா உதவியுடன் சண்டையிட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் உக்ரைன் ரஷியாவின் குறிப்பிட்ட இடங்களை பிடித்து அதிர்ச்சி அளித்தது. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் போக்ரோவ்ஸ்க் நகரை கைப்பற்றுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ரஷியப்படைகள் சண்டையிட்டு வருகின்றன. தற்போது நகரத்தை நெருங்கியுள்ளது. இதனால் நகரத்தை சுற்றி கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் படைகள் மீது தாக்குதல் நடத்தும் ரஷியப்படைகளின் 40 முயற்சிகளை முறியடித்துள்ளோம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
டொனட்ஸ்க் பிராந்தியத்தை சுற்றி உக்ரைன் பாதுகாப்பை அதிகப்படுத்திய நிலையில், ரஷியா டொனட்ஸ்க் பிராந்தியத்தின் அருகில்உ ள்ள டொன்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களை குறிவைத்துள்ளது.
ராணுவ வீரர்கள் மற்றும் கடுமையான ஆயுதங்கள் மூலமாக உக்ரைன் போர் பாதுகாப்பை உடைத்து முன்னேற ரஷிய படைகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா படையெடுப்பதற்கு முன் போக்ரோவ்ஸ்க் நகரில் 60 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். டொனட்ஸ்க் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கான முக்கிய பாதுகாப்பு பகுதியாக இது இருந்து வருகிறது. இந்த பகுதியை ரஷியா பிடித்தால் டொனட்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷியாவுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன பதிலடி கொடுப்பதால் ரஷிய ராணுவம் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், உக்ரைனுக்கு வழங்கும் நிதியுதவியை குறைக்க வாய்ப்புள்ளதால், இது உக்ரைனுக்கு கவலை அளிக்கும் விதமாக இருக்கும்.
- யூன் சுக் இயோல் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
- பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
சியோல்:
தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார்.
பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அவருக்கு எதிரான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. ஆனால் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதற்கிடையே புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதா மீதான வாக்கெடுப்பை சனிக்கிழமை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கட்சியே விரும்புகிறது.
இந்த நிலையில் அதிபர் யூன் சுக் இயோல் தொலைக் காட்சியில் பேசும்போது கூறியதாவது:-
நான் அறிவித்த ராணுவ அவசர நிலை ஆணை என்பது ஆளுகைச் செயலை சார்ந்தது.
இது விசாரணைகளுக்கு உட்பட்டது அல்ல. கிளர்ச்சிக்கு உட்பட்டது அல்ல. என் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். எனக்கு ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை. நாட்டின் அரசாங்கத்தை முடக்குவதற்கும், அரசியலமைப்பு ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் காரணமான சக்திகள் மற்றும் குற்றக் குழுக்களை கொரியா குடியரசின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதைத் தடுக்க நான் இறுதிவரை போராடுவேன்.
எனது ராணுவ அவசர நிலை சட்டம் என்பது எதிர்க்கட்சியிடம் இருந்து ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூன் கூறும் போது, பதவி நீக்கத்துக்கு பதிலாக யூன் சுக் இயோல் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தற்போது ஜனநாயகத்தையும் குடியரசையும் பாதுகாக்க, பதவி நீக்கம் மூலம் அதிபரை வெளியேற்றுவது தான் ஒரே வழியாக உள்ளது என்றார். இதனால் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
- உலக பணக்காரரான எலான் மஸ்க் புதிய சாதனை.
- எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.
உலக பணக்காரரான எலான் மஸ்க் புதிய சாதனையை படைத்துள்ளார். டெஸ்லா, ஸ்பெஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் சமூக வலை தளம் ஆகியவற்றின் உரிமை யாளரான அவரது சொத்து மதிப்பு சமீபகாலமாக ஏற்றமடைந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு அளித்தார். டிரம்ப் வெற்றி பெற்றதும் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 65 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல் அவரது மற்ற நிறுவன பங்குகளும் விலை அதிகரித்தது. இதனால் எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்தது.

இந்த நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் நிகர சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை எலான் மஸ்க் படைத்துள்ளார்.
ப்ளூம் பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் கோடி) எட்டியுள்ளது.
ஸ்பெஸ்எக்ஸ் நிறுவ னத்தின் முதலீட்டாளர்கள் 1.25 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்தின் மதிப்பு 50 பில்லியன் டாலர் உயர்ந்து 440 பில்லியன் டாலராக அதிகரித்தது.
மேலும் ஒரு ஒப்பந்தம் காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன மதிப்பு சுமார் 350 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதனால் எலான்மஸ்க்குக்கு கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மஸ்க் தனது நிகர மதிப்பில் 218 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- போரை முடிவுக்கு கொண்டுவர நம்பிக்கை தெரிவித்துள்ளன.
காசா முனையில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுதகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. தற்போதைய அமெரிக்க அரசு மற்றும் புதிதாக ஆட்சி அமைக்க இருக்கும் அமெரிக்க நிர்வாகங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய அமெரிக்க அதிபர் பதவியேற்கும் முன் போரை முடிவுக்கு கொண்டுவர நம்பிக்கை தெரிவித்துள்ளன.
எனினும், இது தொடர்பான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன. சமீபத்திய தாக்குதலை மருத்துவமனையின் அருகாமையில் இருந்த ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க முயற்சிப்பதாக இராணுவம் கூறுகிறது. ஹமாஸ் அமைப்பினர் மக்கள் மத்தியில் மறைந்திருப்பதாக குற்றம் சாட்டுகிறது. இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது.






