search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Istanbul"

    • 10 வருடங்களுக்கு முன் மார்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்
    • ஆபத்துக்களை குறித்து குறைந்தளவே தகவல்களை மருத்துவமனை தந்திருக்கிறது

    பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் மெலிஸா கெர் எனும் 31-வயது பெண். இவர் சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக தனது மார்பகத்தை பெரிதாக்கி கொள்ள ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    சமீபத்தில் இவருக்கு தனது உடலின் முதுகெலும்பிற்கு கீழே உள்ள பின்புற பகுதிகளில் தசைகள் குறைவாக இருப்பதாக தோன்றியதால், இப்பகுதியை அழகுப்படுத்த மருத்துவ வழிமுறைக்கான தகவல்களை தேடினார்.

    இதற்காக துருக்கி நாட்டில் பிரேசிலியன் பட் லிஃப்ட் (Brazilian butt lift surgery) எனப்படும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதை தெரிந்து கொண்டார். நுணுக்கமான இம்முறையில் உடலின் சதை மிகுந்த பாகங்களிலிருந்து சதை துணுக்குகள் எடுக்கப்பட்டு, சதை குறைந்த பகுதிகளில் ஊசி மூலம் உட்செலுத்தப்படும். பிறகு சில நாட்கள் மாத்திரை, மருந்து மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

    துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ளது மெடிக்கானா கடிக்கோய் மருத்துவமனை (Medicana Kadikoy Hospital). இங்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறித்து அறிந்த கெர், அம்மருத்துவமனையை தொடர்பு கொண்டார். அறுவை சிகிச்சை குறித்து லேசான பதற்றம் அவருக்கு ஏற்பட்டதால், இதற்கு முன்பாக அதே சிகிச்சையை செய்து கொண்டவர்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்க கோரினார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அனுப்பவில்லை.

    இருப்பினும், கெர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்ததால், அவர் துருக்கி சென்றார். அங்கு அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை முடிந்ததும், கெர் அம்மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

    இங்கிலாந்தில், இது குறித்த விசாரணையில் அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சையில் உள்ள ஆபத்துக்கள் குறித்து குறைவான தகவல்களே துருக்கி மருத்துவமனையால் தரப்பட்டிருக்கிறது என தெரிய வந்துள்ளது.

    அயல்நாடுகளில் அறுவை சிகிச்சைக்கான வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் இது குறித்து அங்கு சென்று அழகுக்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பும் மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இங்கிலாந்தின் சுகாதார மந்திரிக்கு கடிதம் எழுதப்போவதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

    துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். #Istanbulbuildingcollapse
    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் ஏழு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.



    இதுதொடர்பாக, மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

    கட்டிட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் சந்தித்து ஆறுதல் கூறினார். #Istanbulbuildingcollapse
    துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். #Istanbulbuildingcollapse
    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் ஏழு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று ஐந்து வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

    விசாரணையில், கட்டிடத்தின் 3 மாடிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். #Istanbulbuildingcollapse
    துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #JamalKhashoggi #SaudiConsulGeneral
    இஸ்தான்புல்:

    அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59), துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து திரும்பவில்லை.

    அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலில் இதனை மறுத்த சவுதி அரேபியா, பின்னர் தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதை உறுதி செய்தது. சவுதி மன்னராட்சியையும் பட்டத்து இளவரசரையும் கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோக்கி கொல்லப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.



    இந்நிலையில் துருக்கி பாராளுமன்றத்தில் அதிபர் எர்டோகன் நேற்று பேசினார். அப்போது அவர் கசோக்கி படுகொலை திட்டமிட்ட சதி என குற்றம்சாட்டினார்.

    ‘கசோக்கி படுகொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை நீக்கி உள்ளனர். சவுதி அரேபிய தூதரகம் அருகேயுள்ள காட்டினை சவுதி அரேபிய ஏஜெண்டுகள் பார்வையிட்டிருக்கிறார்கள். இந்த காட்டில்தான் கசோக்கியின் உடல் வீசப்பட்டிருக்கலாம் என கருதி துருக்கி அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இது கொடூரமான திட்டமிட்ட படுகொலை. இதை மறைக்க முடியாது. எனவே, கசோக்கி உடல் எங்கு இருக்கிறது? என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சவுதி அரேபியா வெளியிட வேண்டும். இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மைகளை நிச்சயம் வெளிக்கொண்டு வருவோம்’ என்றார் எர்டோகன்.

    இதற்கிடையே கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டில் கிடைத்து இருப்பதாக பிரிட்டன் நாட்டு செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.  

    கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் டோகு பெரின்செக் கூறியதாக துருக்கி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கசோக்கியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டும், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மற்றொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. #JamalKhashoggi #SaudiConsulGeneral
    இஸ்தான்புல் அட்டாடர்க் ஒலிம்பிக் மைதானத்தில் 2020 யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் கால்பந்து லீக் தொடர் நடைபெறும். இதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும். இந்த வருடத்திற்கான (2017-18) இறுதிப் போட்டி உக்ரைனில் உள்ள கிவ் நகரில் நடைபெறுகிறது. இதில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    2018-19 தொடரின் இறுதிப் போட்டி அடிட்லெடிகோ மாட்ரிட் அணியின் ஹோம் தைானமான வாண்டா மெட்ரோபோலிடானோவில் நடக்கிறது. இந்த மைதானத்தில் 67 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.

    இந்நிலையில் 2019-2020 தொடரின் இறுதிப் போட்டி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள அட்டாடர்க் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறும் என யூஇஎஃப்ஏ தலைவர் அலெக்சாண்டர் செபரின் உறுதிப்படுத்தியுள்ளார்.



    2005-ம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டி இந்த மைதானத்தில்தான் நடைபெற்றது. இதில் லிவர்பூல் - ஏசி மிலன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு கட்டத்தில் 0-3 என பின்தங்கியிருந்த லிவர்பூல், பின்னர் 3-3 என டிரா செய்தது. அதன்பின் நடைபெற்ற பெனால்டி சூட்அவுட்டில் வெற்றி பெற்று வாகை சூடியது.
    ×