தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இளம் இன்ஸ்ட்டா பிரபலம் தற்கொலை.. காரணம் என்ன?

தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார்அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இளம் இன்ஸ்ட்டா பிரபலம் தற்கொலை.. காரணம் என்ன?
Published on

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த துருக்கியை சேர்ந்த இளம் இன்ஸ்டா பிரபலம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பிரபலமடையத் தொடங்கியுள்ள தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் சோலோகேமி [SOLOGAMY] திருமண முறைப்படி கடந்த வருடம் [2023] தான் திருமணம் செய்து கொண்டதாக துருக்கியை சேர்ந்த இன்ஸ்ட்டா பிரபலம் குப்ரா அய்குட் (வயது 26) அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றய தினம் தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி [Sultanbeyli] மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கடைசியாக இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த வீடியோவில், உடல் எடையை அதிகரிப்பது சவாலாக உள்ளது.

நான் மிக விரைவில் எடையை அதிகரித்தே ஆகவேண்டும். ஆனால் தினமும் ஒருகிலோ எடை குறைந்துகொண்டே வருகிறேன் என வேதனையுட தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com