search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்புரிமை"

    • தடுப்பூசிக்கான சந்தை 10 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
    • இந்நோய் அறிகுறிகளை விரைவில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்

    நுரையீரல் மற்றும் சுவாச பாதையில் தொற்று நோயை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஒரு நுண்கிருமி ஆர்எஸ்வி (RSV) வைரஸ்.

    இந்த வைரஸ் நோய் தொற்று பொதுவாக லேசான குளிர் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால் விரைவில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

    எனவே இதன் தாக்குதலிலிருந்து மனிதர்களை காக்க ஒரு தடுப்பூசியை கண்டு பிடிக்க உலகெங்கிலும் உள்ள முன்னணி மருந்து நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிக்கான சந்தை 10 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    லண்டனை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு பிரிட்டன் மருந்து நிறுவனம் க்ளாக்ஸோ ஸ்மித்க்லைன் (GSK). இந்நிறுவனம் இந்த நோய்க்கு எதிராக அரெக்ஸ்வி எனும் தடுப்பூசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த அனுமதி பெற்று விட்டது.

    இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் உள்ள டெலாவேர் மாநில நீதிமன்றத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் அமெரிக்க பன்னாட்டு முன்னணி மருந்து நிறுவனமான ஃபைசர் மீது காப்புரிமை வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.

    ஃபைசர் நிறுவனத்தின் அப்ரிஸ்வோ (Abrysvo) தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் ஒரு மூலக்கூறு, ஜிஎஸ்கே நிறுவனத்தின் 4 காப்புரிமைககளை மீறுவதாக ஜிஎஸ்கே குற்றம் சாட்டியுள்ளது.

    "ஃபைசர் நிறுவனம் தெரிந்தே அப்ரிஸ்வோ தடுப்பூசியில் எங்களுக்கு உரிமையுள்ள கண்டுபிடிப்புகளை அனுமதியின்றி பயன்படுத்துகிறது. எங்கள் தடுப்பூசியான அரெக்ஸ்வி (Arexvy), ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு 7 வருடங்களுக்கு முன்பே வளர்ச்சியில் இருந்தது. இவ்விவகாரத்தில் ஒரு நீதி விசாரணை நடத்த வேண்டும் என கேட்கிறோம். காப்புரிமை மீறலின் விளைவாக நாங்கள் இழந்த லாபங்கள் மற்றும் ராயல்டிகள் உட்பட பண நஷ்டத்திற்கும் ஈடு வேண்டும். மேலும் ஃபைசர் நிறுவனம் அதன் தடுப்பூசியை அமெரிக்காவில் தயாரித்து விற்பனை செய்வதிலிருந்து தடுக்க வேண்டும். அறிவுசார் சொத்து பாதுகாப்புகள்தான் நிறுவனங்களின் புதுமையான ஆராய்ச்சி நோக்கங்களுக்கு அடிப்படை. எங்கள் தடுப்பூசியான அரெக்ஸ்வியை அறிமுகப்படுத்துவது தடையின்றி நடைபெற வேண்டும்" என ஜிஎஸ்கே தன் புகாரில் கோரியுள்ளது.

    "எங்கள் அறிவுசார் சொத்துக்களின் நிலைப்பாடுகளில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். நோயாளிகளை காக்க எங்களின் புதுமையான தடுப்பூசியை கொண்டு வருவதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எங்கள் நிலையை தற்காத்துக் கொள்ள நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம்" என ஃபைசர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    • கதை திருட்டு செய்து நடித்த காரணத்தினால் புகார் அளித்ததன் பேரில் அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • இசை நாடகத்தில் முதல் முறையாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாடகம் காளி காத்த கருப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் சங்கரதாஸ் சாமிகளின் நாடக நடிகர்கள் சங்கம் சார்பாக எழுதி அமைக்கப்பட்ட காளி காத்த கருப்புசாமி என்னும் நாடகத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்ட நிலையில் சம்பந்தமில்லாத வேறு நபர்கள் நாடகத்தை கதை திருட்டு செய்து நடித்த காரணத்தினால் புகார் அளித்ததன் பேரில் அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இசை நாடகத்தின் சார்பில் பல்வேறு நாடகங்கள் திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், மண ப்பாறை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடை பெறுவது வழக்கம்.அதே போல் புராண கதைகளில் ஒன்றான காளி காத்த கருப்புசாமி என்னும் நாடகம் ஆசிரியர் முனி யராஜன் கைவண்ணத்தில் இயற்றி எழுதப்பட்டது. இந்த நாடகத்தினைஅய்யலூர் சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகர் சங்கம் சார்பாக அனுமதி பெறப்பட்டு அந்த நாடகத்திற்கு முழுமையான மத்திய அரசு காப்புரிமை பெறப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

    ஆனால் இந்த நாடகத்தினை அய்யலூரை சேர்ந்த சில நடிகர்கள் கதை திருட்டு செய்து நாடகத்தை கொச்சை ப்படுத்தி தவறாக நடித்து வந்தனர். இதை எதிர்த்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தபோது இது தங்களது நாடகம் என்று வாதிட்டு வந்தனர். இதனையடுத்து மத்திய அரசால் பெறப்பட்ட காப்புரிமை சான்றிதழை வடமதுரைபோலீஸ் இ ன்ஸ்பெக்டரிடம்காட்டி சம்மந்த ப்பட்ட குழுவினர் புகார் அளித்தனர்.

    சங்கர தாஸ் சுவாமிகளின் நாடக நடிகர் சங்கத்திற்கு உரிமம் பெற்ற இந்த நாடகத்தினை எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். எதிர்தரப்பினர் இனி இந்த நாடகத்தினை நாங்கள் நடத்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து எழுத்து மூலமாக சமர்ப்பித்துச் சென்றனர்.

    இசை நாடகத்தில் முதல் முறையாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாடகம் காளி காத்த கருப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது. என்று சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகர்கள் சங்க தலை வர் சாமி தெரிவித்துள்ளார்.

    • லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • லப்பர் பந்து' திரைப்படம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

    கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இதில், கெத்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள தினேஷ் படத்தில் என்ட்ரி ஆகும்போது விஜயகாந்த்தின் பிரபல பாடல் ஒலிபரப்பப்படும்.

    இந்நிலையில், 'லப்பர் பந்து' திரைப்படம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்திருந்தார்.

    அதில் அவர்," திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் யாரிடமும் காப்புரிமை எல்லாம் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து" என்றார்.

    • 'சாட் ஜிபிடி' க்கு பயிற்சி அளித்தல், அதன் மேம்பாடு தொடர்பான பணிகளை செய்தவர் ஆவார்
    • மனித குலத்துக்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் எச்சரித்தார்.

    OpenAI நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும், அந்நிறுவனத்தின் தீய நடைமுறைகளை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவருமான 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார்.

    நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

    அவரது மரணத்தில் சந்தேகம் நிலவி வந்த நிலையில் தற்கொலை மூலமே அவரது உயிர் பிரிந்துள்ளதாக சான் பிரான்சிஸ்கோ மருத்துவ பரிசோதகர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து அவரது இறப்பில் எந்த மர்மமும் இல்லை என சான் பிரான்சிஸ்கோ போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

     

    யார் இந்த சுசீர் பாலாஜி?

    இந்திய வம்சாவளியை சேர்ந்த சுசீர் பாலாஜி, ஏஐ தொல்நூட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஓபன் ஏஐ நிறுவனத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கணினி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

    சுமார் 4 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பாலாஜி 2022 பிற்பகுதியில் அந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'சாட் ஜிபிடி' க்கு பயிற்சி அளித்தல், அதன் மேம்பாடு தொடர்பான பணிகளை செய்தவர் ஆவார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2024 இல் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

    இதைத்தொர்ந்த்து ஓபன் ஏஐ சாட் ஜிபிடி குறித்த பல குற்றசாட்டுகளை பாலாஜி பொதுவெளியில் முன்வைத்தார். நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த பாலாஜி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் வணிக கொள்கைகள் வணிகங்களுக்கும் சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்ததால் அதில் இருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

     

    சாட் ஜிபிடிக்கு பயிற்சி அளிக்க பதிப்புரிமை பெற்ற தரவுகளை ஓபன் ஏஐ பயன்படுத்தி அமெரிக்க பி[பதிப்புரிமை சட்டத்தை மீறியதாக அவர் குற்றம் சாட்டினார். பல எழுத்தாளர்கள், கம்பியூட்டர் புரோகிராமர்கள், பத்திரிகையாளர்கள் தங்களின் உழைப்பை ஓபன் ஏஐ எந்த அனுமதியும் இன்றி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.

    பாலாஜியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஓபன் ஏஐ மீது பல வழக்குகளும் தொடரப்பட்டன. கடுமையான விதிமுறைகள் இல்லாமல் மனித குலத்துக்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் கவலை தெரிவித்தார்.காலப்போக்கில், இந்த தொழில்நுட்பம் சமூகத்திற்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

     

    இந்த நிலையில்தான் பாலாஜியின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. கடைசியாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவிலும் ஓபன் ஏஐ மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஏஐ வளர்ச்சி குறித்த கவலையை வெளிப்படுத்தி இருந்தார்.

    உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சேவைகள் ஏஐ ஆல் சக்தியூட்டப்பட்டவை என்று விளம்பரம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவுக்கு ஏஐ பெரு வணிகத் தேவையாக வளர்ந்துள்ள நிலையில் பாலாஜி மரணத்தை போலீஸ் தற்கொலை என்ற முடிவுக்கு வந்தாலும், இதில் இன்னும் மர்மம் உள்ளதாகவே பலர் சந்தேகிக்கின்றனர். 

    • அகத்தியா பட டீசரில் 'என் இனிய பொன் நிலாவே' பாடல் வெளியானது.
    • இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சரிகம நிறுவனம் வழக்குப்பதிவு செய்தது.

    புதுடெல்லி:

    பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'அகத்தியா' படத்தில், இசைஞானி இளையராஜாவின் பாடலான 'என் இனிய பொன் நிலாவே' பாடலை ரீ-கிரியேட் செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன்.

    இதையடுத்து, அகத்தியா பட டீசரில் 'என் இனிய பொன் நிலாவே' பாடலை வெளியிட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சரிகம நிறுவனம் வழக்கு பதிவு செய்தது.

    இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட், என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது. அந்தப் பாடலுக்கான காப்புரிமை சரிகம நிறுவனத்திடம் உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×