search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "copyrighted"

    • கதை திருட்டு செய்து நடித்த காரணத்தினால் புகார் அளித்ததன் பேரில் அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • இசை நாடகத்தில் முதல் முறையாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாடகம் காளி காத்த கருப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் சங்கரதாஸ் சாமிகளின் நாடக நடிகர்கள் சங்கம் சார்பாக எழுதி அமைக்கப்பட்ட காளி காத்த கருப்புசாமி என்னும் நாடகத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்ட நிலையில் சம்பந்தமில்லாத வேறு நபர்கள் நாடகத்தை கதை திருட்டு செய்து நடித்த காரணத்தினால் புகார் அளித்ததன் பேரில் அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இசை நாடகத்தின் சார்பில் பல்வேறு நாடகங்கள் திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், மண ப்பாறை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடை பெறுவது வழக்கம்.அதே போல் புராண கதைகளில் ஒன்றான காளி காத்த கருப்புசாமி என்னும் நாடகம் ஆசிரியர் முனி யராஜன் கைவண்ணத்தில் இயற்றி எழுதப்பட்டது. இந்த நாடகத்தினைஅய்யலூர் சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகர் சங்கம் சார்பாக அனுமதி பெறப்பட்டு அந்த நாடகத்திற்கு முழுமையான மத்திய அரசு காப்புரிமை பெறப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

    ஆனால் இந்த நாடகத்தினை அய்யலூரை சேர்ந்த சில நடிகர்கள் கதை திருட்டு செய்து நாடகத்தை கொச்சை ப்படுத்தி தவறாக நடித்து வந்தனர். இதை எதிர்த்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தபோது இது தங்களது நாடகம் என்று வாதிட்டு வந்தனர். இதனையடுத்து மத்திய அரசால் பெறப்பட்ட காப்புரிமை சான்றிதழை வடமதுரைபோலீஸ் இ ன்ஸ்பெக்டரிடம்காட்டி சம்மந்த ப்பட்ட குழுவினர் புகார் அளித்தனர்.

    சங்கர தாஸ் சுவாமிகளின் நாடக நடிகர் சங்கத்திற்கு உரிமம் பெற்ற இந்த நாடகத்தினை எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். எதிர்தரப்பினர் இனி இந்த நாடகத்தினை நாங்கள் நடத்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து எழுத்து மூலமாக சமர்ப்பித்துச் சென்றனர்.

    இசை நாடகத்தில் முதல் முறையாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாடகம் காளி காத்த கருப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது. என்று சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகர்கள் சங்க தலை வர் சாமி தெரிவித்துள்ளார்.

    ×