என் மலர்tooltip icon

    உலகம்

    • தற்போது ரஷியா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
    • ரஷ்யா ஏவிய 95 டிரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது

    கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து கடந்த 3 வருடங்களாக ரஷியா - உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. போர் தொடங்கியபோது ரஷியா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக வலுவாக சண்டையிட ரஷிய பல இடங்களில் பின்வாங்க தொடங்கியது.

    தற்போது இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

    கடந்த மாதம் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், ராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    இந்நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு அனல் மின் நிலையத்தின் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதலில் ரஷ்யா 143 டிரோன்களை ஏவியதாகவும் அதில், 95 டிரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது என்றும் 46 டிரோன்கள் இலக்கை அடையவில்லை என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

    • இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆப்கனிஸ்தானை சேர்ந்த 24 வயது வாலிபர் ஜெர்மனியில் கூட்டத்தில் காரை மோதினார்.

    ஆஸ்திரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

    இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் எல்லைக்கு அருகிலுள்ள வில்லாச் நகரில் நேற்று [சனிக்கிழமை] சாலையில் சென்றுகொண்டிருத்தவர்களை இளைஞன் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான்.

    ஆஸ்திரியாவுக்கு புலம்பெயர்ந்த 23 வயது சிரியா நாட்டு வாலிபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. மேலும் அந்த நபரின் பின்னணி குறித்த தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    பலியானவர்களில் நான்கு பேர் 14 முதல் 32 வயதுக்குட்பட்ட ஆண்கள், அதில் ஒருவர் துருக்கையை சேர்ந்தவர் என்று காவல்துறை   தெரிவித்துள்ளது. இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

     தாக்குதல் நடத்தியவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருந்ததா அல்லது பயங்கரவாத செயலா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    புலம்பெயர்ந்தவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நாட்டுக்கு படையெடுக்கும் அகதிகள் குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

     

    ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சக அறிக்கைப்படி, 2024 ஆம் ஆண்டில் 24,941 வெளிநாட்டினர் அந்நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் சிரியாவிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் வந்தவர்களே அதிகம்.

    முன்னதாக கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆப்கனிஸ்தானை சேர்ந்த 24 வயது வாலிபர் ஆஸ்திரியாவுக்கு அருகில் உள்ள ஜெர்மனி நாட்டின் முனீச்சில் நடந்த கூட்டத்திற்குள் காருடன் புகுந்ததில் 28 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • தேவையற்ற செலவை குறைக்க எலான் மஸ்க் தலைமையில் அவர் உருவாக்கிய DODGE ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
    • வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வழங்கி வந்த 21 மில்லியன் டாலர் நிறுத்தப்பட்டது.

    இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கி வந்த நிதியை எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க செயல்திறன் துறை DODGE நிறுத்தியுள்ளது.

    கடந்த மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதார். அரசின் தேவையற்ற செலவை குறைக்க எலான் மஸ்க் தலைமையில் அவர் உருவாக்கிய DODGE ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

    பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் USAID அமைப்புக்கான நிதி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்துவதாக DODGE அறிவித்துள்ளது.

    அதன்படி, இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வழங்கி வந்த 21 மில்லியன் டாலர், நேபாளத்திற்கு நிதி கூட்டாட்சிக்கு வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர், பல்லுயிர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வந்த 19 மில்லியன் டாலர் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுதவிர்த்து கம்போடியாவில், பராகுவே, செர்பியா,தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு வகையான நிதியுதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    • ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.
    • முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின

    உலகிலேயே தன்னை ஓரினசேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த முதல் இஸ்லாமிய மதகுரு இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ்(57) சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரமான க்வெபர்ஹா(Gqeberha) அருகே நேற்று (சனிக்கிழமை) முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட இமாம் ஒதுக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பிற ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று அவர் ஒருவருடன் காரில் இருந்தபோது, ஒரு வாகனம் அவர்களுக்கு முன்னால் நின்று அவர்கள்  வழியைத் தடுத்தது. முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

     

    இதில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டியவர் காயங்களுடன் தப்பித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    கொலைக்கான நோக்கம் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினத்தவர், திருநங்கைகள் சங்கம் (ILGA) இந்தக் கொலையைக் கண்டித்தது.

    "முஹ்சின் ஹென்ட்ரிக்ஸின் கொலைச் செய்தியால் ILGA வேர்ல்ட் குடும்பம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. வெறுப்பு காரணமாக நடந்த குற்றம் என இதை நாங்கள் அஞ்சுகிறோம். அதிகாரிகள் இதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று அதன் நிர்வாக இயக்குனர் ஜூலியா எர்ஹார்ட் தெரிவித்துள்ளார். 

    பல்வேறு LGBTQ ஆதரவு குழுக்களில் PANIYATRIYAஹென்ட்ரிக்ஸ், 1996 இல் ஓரினச்சேர்க்கையாளராக தன்னை வெளிப்படையாக அறிவித்திருந்தார். 

    • காரை பின்னால் கொண்டு வருவதற்கு இடையூறாக கேட் இருக்கிறது.
    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் டிரைவரின் சாமர்த்தியத்தை பாராட்டி பதிவிட்டனர்.

    அமெரிக்காவில் உள்ள உட்டா நகரில் ரெயில்வே கேட் வழியாக வாகனங்கள் சாதாரணமாக சென்று வந்தன. சம்பவத்தன்று ரெயில் பாதையில் வாகனங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது ரெயில் வந்த நிலையில், அவ்வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது என கேட் போடப்பட்டது.

    இதை கவனிக்காமல் கார் டிரைவர் ஒருவர் ரெயில்வே கேட்டுக்குள் சென்றுவிட்டார். இதனால் அவரது கார் கேட்டுக்குள் சிக்கிய நிலையில், டிரைவர் அதில் இருந்து காரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். ஆனால் காரை பின்னால் கொண்டு வருவதற்கு இடையூறாக கேட் இருக்கிறது.

    இந்நிலையில் ஹாரன் ஒலித்தபடியே ரெயில் வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த கார் டிரைவர் விரைவாக செயல்பட்டு காரில் இருந்து கீழே இறங்கி ஓடினார். பின்னர் அந்த தடத்தில் வேகமாக சென்ற ரெயில் கார் மீது மோதியது. இதில் கார் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. துரித நேரத்தில் இறங்கி ஓடியதால் டிரைவர் சாமர்த்தியமாக உயிர் தப்பினார்.

    இந்த சம்பவங்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் டிரைவரின் சாமர்த்தியத்தை பாராட்டி பதிவிட்டனர்.

    • சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம்.
    • பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள்.

    குழந்தைகள் நன்றாக படிக்கவில்லை என்றால் அவர்களை பெற்றோர் கண்டிப்பது இயல்பு. இவ்வாறு ஒரு தந்தை தனது மகனை திட்டியதால் ஆவேசமடைந்த சிறுவன் தந்தையை போலீசில் சிக்க வைத்த சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

    சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம். இவ்வாறு கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள்.

    இந்நிலையில் சந்திர புத்தாண்டையொட்டி தனக்கு கிடைத்த அதிர்ஷ்ட பணத்தை எனது தந்தை திருடி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்சு மாகாண பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் போலீசில் புகார் அளித்துள்ளான். உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று விசாரித்த போது தான் சிறுவன் சரியாக படிக்கவில்லை என்பதால் அவனை தந்தை கண்டித்ததும், அந்த ஆத்திரத்தில் அவரை போலீசில் சிக்க வைத்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் சிறுவனுக்கு அறிவுரை கூறினர். உனது பணத்தை தந்தை பத்திரமாக வைத்திருப்பார். உனக்கு பணம் தேவைப்படும் போது அந்த செலவுகளை அவர் செய்வார் என அறிவுரை வழங்கினர்.

    • புகைப்படங்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.
    • விலங்குகளுக்கு இவ்வாறு பெயிண்ட் அடிப்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.

    சீனாவில் உள்ள மிருக காட்சி சாலை ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய்க்குட்டிகளுக்கு புலிகள் போலவும், பாண்டா கரடிகள் போலவும் பெயிண்ட் அடிக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வந்தன.

    இந்நிலையில் தற்போது அங்கு ஷான்டான் மாகாணத்தில் உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் கழுதைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கோடுகள் வரைந்து வரிக்குதிரைகள் போல தோற்றமளிக்கும் வகையில் மாற்றி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக பூங்கா ஊழியர்கள் கூறுகையில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், அவர்களை ஈர்க்கும் வகையிலும் இவ்வாறு கழுதைகள் மீது ஓவியங்கள் வரையப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடும் பனிப்பொழிவு காரணமாக விலங்குகள் பாதிக்கப்படாத வகையில் இவ்வாறு வர்ணம் பூசப்பட்டதாக கூறப்படுகிறது.

    புகைப்படங்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர். விலங்குகளுக்கு இவ்வாறு பெயிண்ட் அடிப்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர். சில பயனர்கள், வருங்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என பதிவிட்டனர். 

    • கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
    • பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    மேற்கு மாலியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 48 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

    ஆப்பிரிக்காவின் முன்னணி தங்க உற்பத்தியாளர்களில் மாலியும் ஒன்று. மேலும் சுரங்கத் தளங்கள் தொடர்ந்து நிலச்சரிவுகளால் விபத்துகளுக்கு ஆளாகின்றன. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மாலியில், தங்கத்தை ஒழுங்கற்ற முறையில் வெட்டி எடுப்பதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

    "சுரங்கத்தில்1800 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், சரிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. நிலை தடுமாறி சரிந்தவர்களில் சிலர் தண்ணீரில் விழுந்தனர். அவர்களில் ஒரு பெண் தனது முதுகில் குழந்தையை வைத்திருந்தார்," என்று ஒரு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் அதிகாரி ஒருவர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் கெனீபா தங்க சுரங்க தொழிலாளர்கள் சங்கமும் 48 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    முன்னதாக கடந்த ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தங்க சுரங்கத்தில் ஒரு சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    • இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன.
    • கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவுக்கு 2-வது முறையாக வருகிறார்.

    தோகா:

    கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி 2 நாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவர் 17, 18-ந்தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணம் எங்கள் வளர்ந்து வரும் பன்முக கூட்டாண்மைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும்.

    கத்தார் மன்னருக்கு 18-ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும். அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் கலந்துரையாடுவார். அப்போது மன்னருக்கு விருந்து அளிக்கப்படும். பின்னர் கத்தார் மன்னர்-பிரதமர் மோடி இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

    இந்தியாவும் கத்தாரும் நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன. கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகம் கத்தாரின் மிகப்பெரிய வெளிநாட்டு சமூகத்தை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளது.

    கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவுக்கு 2-வது முறையாக வருகிறார். இதற்குமுன்பு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார்.

    • பிரிக்ஸ் அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
    • பிரிக்ஸில் இணைய சவுதி அரேபியாவுக்கு அழைப்பு.

    அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று பிரேசில் அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டு வரை வளரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பிற்கு பிரேசில் தலைமை தாங்குகிறது.

    மேலும் உலகளாவிய தெற்கு நாடுகளிடையே உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2009-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் இணைந்து நிறுவப்பட்டது. பிறகு, 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது.

    கடந்த ஆண்டு, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்த கூட்டமைப்பு விரிவடைந்தது. சவுதி அரேபியாவும் இந்த அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா முறையாக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளன, மேலும் பல நாடுகள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

    • அண்டை பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
    • பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ரஷியாவின் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்தாய் குடியரசில் இன்று (சனிக்கிழமை) காலை 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரஷிய நில அதிர்வு ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உள்ளூர் நேரப்படி காலை 8:48 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. எனவே பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் சேதங்களை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த பிராந்தியத்தின்  தலைவர் ஆண்ட்ரி துர்ச்சக் தெரிவித்தார்.

    • இந்த பீர் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ரெவோர்ட்.
    • இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.

     ரஷிய பீர் பிராண்ட் ஒன்று தனது பீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்த பீர் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ரெவோர்ட்[Rewort]. மகாத்மா காந்தி உருவம் பொறித்த இந்த பீர் கேன்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பீர் கேன்களில் அதில் மகாத்மா G என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

    மது அருந்துவதற்கு எதிரான தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இழைக்கப்பட்ட அவமானம் இதுவென்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, இந்த பீர் கேன்களில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை அகற்றுமாறு பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

    ×