search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கழுதைகளுக்கு வரிக்குதிரை போல பெயிண்ட் அடித்த பூங்கா ஊழியர்கள்
    X

    கழுதைகளுக்கு வரிக்குதிரை போல பெயிண்ட் அடித்த பூங்கா ஊழியர்கள்

    • புகைப்படங்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.
    • விலங்குகளுக்கு இவ்வாறு பெயிண்ட் அடிப்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.

    சீனாவில் உள்ள மிருக காட்சி சாலை ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய்க்குட்டிகளுக்கு புலிகள் போலவும், பாண்டா கரடிகள் போலவும் பெயிண்ட் அடிக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வந்தன.

    இந்நிலையில் தற்போது அங்கு ஷான்டான் மாகாணத்தில் உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் கழுதைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கோடுகள் வரைந்து வரிக்குதிரைகள் போல தோற்றமளிக்கும் வகையில் மாற்றி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக பூங்கா ஊழியர்கள் கூறுகையில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், அவர்களை ஈர்க்கும் வகையிலும் இவ்வாறு கழுதைகள் மீது ஓவியங்கள் வரையப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடும் பனிப்பொழிவு காரணமாக விலங்குகள் பாதிக்கப்படாத வகையில் இவ்வாறு வர்ணம் பூசப்பட்டதாக கூறப்படுகிறது.

    புகைப்படங்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர். விலங்குகளுக்கு இவ்வாறு பெயிண்ட் அடிப்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர். சில பயனர்கள், வருங்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என பதிவிட்டனர்.

    Next Story
    ×