என் மலர்

  செய்திகள்

  கடந்த கால வலி மற்றும் கருத்து வேறுபாடுகளை இஸ்ரேல் - பாலஸ்தீன் களைய வேண்டும்: டிரம்ப்
  X

  கடந்த கால வலி மற்றும் கருத்து வேறுபாடுகளை இஸ்ரேல் - பாலஸ்தீன் களைய வேண்டும்: டிரம்ப்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகள் கடந்த கால வலி மற்றும் வேறுபாடுகளை களைய வேண்டும் என பேசியுள்ளார்.
  டெல் அவிவ்:

  அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகள் கடந்த கால வலி மற்றும் வேறுபாடுகளை களைய வேண்டும் என பேசியுள்ளார்.

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவை சந்தித்து பேசிய பின்னர் டிரம்ப், யூதர்களின் புனித தலமான சாலமன் தேவாலயத்தில் பிராத்தனை நடத்தினார். பின்னர் நேற்று, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை பெத்தலகேமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

  பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிரம்ப் பேசியதாவது:-

  எங்கே வன்முறை சகித்துக் கொள்ளப்படுகிறதோ அங்கு அமைதி நிலவ முடியாது. வன்முறைக்கு நிதி கிடைப்பதும் அதற்கு வெகுமதி கிடைப்பதும் தொடரும் வரை அமைதி ஏற்படாது. அமைதியாக வாழும் வழிமுறையைத் தேர்ந்தெடுத்து, பாதுகாப்பான வளமான வருங்காலத்துக்குச் செல்ல வேண்டும்.

  இந்தப் பிராந்தியத்தில் வாழும் யூத, கிறிஸ்தவ, முஸ்லிம் சிறுவர்களின் அமைதி என்னும் கனவு நிறைவேற அமெரிக்கா அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் தரும். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதி நிலவச் செய்ய வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். அவர்கள் இருவரிடையே இதற்கான உடன்படிக்கை ஏற்பட வேண்டும். அமைதி ஏற்படுத்துவற்காக என்னால் முடிந்த எந்த உதவியையும் செய்யத் தயாராக இருக்கிறேன்

  என டிரம்ப் பேசினார்.

  அவருக்கு முன்னதாகப் பேசிய பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் ,”பாலஸ்தீன நாட்டை இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை.
  இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் பெரிய பிரச்னையே. இது பாலஸ்தீனத்துக்கும் ஆக்கிரமிப்புக்கும் இடையேயான மோதலே தவிர எங்களுக்கும் யூத மதத்துக்கும் இடையேயான மோதல் அல்ல. 1967-ஆம் ஆண்டு எல்லை நிலவரப்படி, பாலஸ்தீனம் - இஸ்ரேல் என்னும் இரு நாடுகள், கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலைநகர் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்தார்.

  Next Story
  ×