என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கடன்கள் குறித்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
    • தேவைப்பட்டால் வங்கிகளுக்கு முழு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

    சென்னை:

    ஒரு வங்கியின் இயக்குனர்கள், பங்குதாரர்கள், அதிகாரிகள் ஆகியோர் தங்களது உறவினர்களுக்கு அதேவங்கியில் அதிகளவில் கடன் வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த கடன் பெரும்பாலும் வாராக்கடன் ஆகி பொதுமக்களின் பணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ரிசர்வ் வங்கி ஒரு வரைவு அறிக்கையை, நேற்று வெளியிட்டுள்ளது. இது அடுத்தாண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி வங்கியின் இயக்குனர்கள், புரமோட்டர்கள், முக்கிய மேலாண்மை அதிகாரிகள் மற்றும் வங்கியில் 5 சதவீத பங்குகளை வைத்திருப்பவர்கள் ஆகியோர் தங்களின் உறவினர்கள் மற்றும் அவர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு தங்கள் வங்கியில் கடன் வழங்கக்கூடாது. அப்படியே கடன் வழங்கினாலும், சில நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி அவர்களுக்கு கடன் வழங்குவதாக இருந்தால் அது தொடர்பான முடிவெடுக்கும் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது. மேலும் ஜாமீன், கடன் தள்ளுபடி, மீட்பு, வாராக்கடன் தீர்வு போன்ற எந்தப் பணிகளிலும் பங்கேற்கக்கூடாது.

    அவர்களுக்கு கடன் வழங்குவதற்கும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.50 கோடி வரை மட்டுமே கடன் தரலாம். ஒன்று முதல் ரூ.10 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள நடுத்தர வங்கிகள் அதிகபட்சமாக ரூ.10 கோடியும். ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள சிறிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.5 கோடியும். உள்ளூர் வங்கிகள் மற்றும் மத்திய-மாநில கூட்டுறவு வங்கிகள் ரூ.1 கோடியும், என்பிஎப்சிகள் ரூ.10 கோடி வரையும் மற்ற அனைத்து நிதி நிறுவனங்கள் ஆகியவை ரூ.50 கோடி வரையும் கடன் கொடுக்கலாம்.

    இப்படி வழங்கப்படும் கடன்கள் குறித்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு தகவல் கொடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் நபார்டுக்கு கடன் விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும். வங்கிகள் ஆண்டுதோறும் தங்களது நிதி அறிக்கைகளில் எவ்வளவு கடன் தொடர்புடையவர்களுக்கு கொடுக்கப்பட்டது, அவற்றில் எவ்வளவு கடன் வாராக்கடன் நிலைக்கு சென்றது என்பதனை வெளிப்படையாக குறிப்பிட்ட வேண்டும். இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால் வங்கிகளுக்கு முழு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். முழுத்தொகையை ஒதுக்கீடாக வைத்திருப்பதை கட்டாயப்படுத்தும். மேலும் கூட்டுறவு வங்கிகளின் இயக்குனர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடன் ஜாமீன் வழங்கக்கூடாது.

    இந்த கட்டுப்பாடுகள் வங்கியின் நிர்வாகிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மட்டும் பொருந்தும். பொதுமக்கள் எடுக்கும் வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் போன்றவற்றுக்கு இந்த வரம்புகள் எதுவும் பொருந்தாது.

    • இந்த முறை நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம்.
    • கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்

    இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, ராஜஸ்தானில் அனுப்கர் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2-ம் பாகம் வெகு தொலைவில் இல்லை.

    இந்த முறை நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம். இந்த முறை நாம் ஏதாவது செய்வோம். அது பாகிஸ்தான், தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்று யோசிக்க வைக்கும்.

    பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க விரும்பினால், அது அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்" என்று தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் 2025-ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 குறித்து திவேதி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. 

    • 93வது விமானப்படை தின விழாவில் பேசிய விமானப்படைத் தளபதி மார்ஷல் சிங் பேசினார்.
    • மிகவும் சமநிலையான மற்றும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டது.

    கடந்த ஏப்ரல் 2025-ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் பாகிஸ்தான் விமானங்களை இந்தியா தரப்பும், இந்திய விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பும் கூறி வருகிறது.

    இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற 93வது விமானப்படை தின விழாவில் பேசிய விமானப்படைத் தளபதி மார்ஷல் சிங்,

    ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றில் F-16 மற்றும் JF-17 போன்ற நவீன விமானங்களும் அடங்கும் என்று தெரிவித்தார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை தனது நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்தது மட்டுமல்லாமல், மிகவும் சமநிலையான மற்றும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டதாகவும் கூறினார்.

    விமானப்படை தனது நோக்கங்களை அடைந்தவுடன் உடனடியாக நடவடிக்கைகளை நிறுத்தியது, இது சர்வதேச அளவில் இந்தியாவின் பொறுப்பான பிம்பத்தை மேலும் வலுப்படுத்தியது என்றார். 

    முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையின் போது இதற்கு நேர் மாறாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும்.

    ரிஷபம்

    வருமானம் திருப்தி தரும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மிதுனம்

    நந்தி வழிபாட்டால் நன்மை கிட்டும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணத் தடை அகலும்.

    கடகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். வரவை காட்டிலும் செலவு கூடும்.

    சிம்மம்

    தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். கனிவாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும்.

    கன்னி

    சிவாலய வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பது நல்லது.

    துலாம்

    வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும். தொழிலில் பதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    விருச்சிகம்

    பிரதோஷ வழிபாட்டால் பெருமை சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

    தனுசு

    வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மகரம்

    நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன் பின் தெரியாதவர்கள் ஒத்துழைப்பு செய்வர். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

    கும்பம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். மறதியால் சில காரியங்களைச் செய்ய இயலாமல் போகலாம். வாழ்க்கை தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும்.

    மீனம்

    சுபவிரயம் ஏற்படும் நாள். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். வரும் தொலைபேசி வழித்தகவல் வருமானம் தரக் கூடியதாக இருக்கும்.

    • ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலும் டிரோன்கள் பறந்தன.
    • இந்த டிரோன்கள் ரஷியாவுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டது.

    பெர்லின்:

    டென்மார்க், போலந்து நாடுகளின் எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரோன்கள் கண்டறியப்பட்டன. இதனால் அந்த விமான நிலையங்களை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இந்த டிரோன்கள் ரஷியாவுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், தற்போது ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலும் டிரோன்கள் பறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டதால் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 15 விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் சுமார் 3 ஆயிரம் பயணிகள் அவதியடைந்தனர்.

    ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து டிரோன்கள் பறக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சில மணி நேரங்களுக்கு பிறகு விமான நிலையம் திறக்கப்பட்டு விமான சேவை தொடங்கியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்சில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தின் எதிரொலியாக முக்கிய சுற்றுலா தலமான ஈபிள் டவர் மூடப்பட்டது.

    பாரிஸ்:

    ஐரோப்பிய நாடான பிரான்சில் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அந்நாட்டு அரசு பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    பல சமூக நல திட்டங்களை முடக்குவது போன்ற செலவு குறைப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

    இது குறைந்த மற்றும் நடுத்தர வர்க்க மக்களை பெரிதும் பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து, அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, பிரான்சில் உள்ள பிரதான தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று முன்தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

    பிரான்ஸ் அரசு பொது சேவைகளுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும். இதற்கு பதிலாக பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த வேலை நிறுத்தத்தால் பிரான்ஸ் முழுதும் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாணவர்கள் சாலைகளில் இறங்கி போராடினர். இதனால் பொது போக்குவரத்து சேவைகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிற சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன.

    இந்நிலையில், போராட்டங்களின் எதிரொலியாக, பாரிசில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா சென்றார்.
    • அவரை வெள்ளை மாளிகை வாசலுக்கு வந்து கைகுலுக்கி வரவேற்ற டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. இதில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றார். அவரை வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்து கைகுலுக்கி வரவேற்ற டிரம்ப், நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். இதற்கு நேதன்யாகு சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது

    காசா அமைதி திட்டத்தின்படி, காசா முனை பகுதியில் உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்பு, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும் உள்ளிட்ட விசயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று வெளியிட்ட ட்ரூத் சோசியல் பக்கத்தில் கூறியதாவது:

    ஹமாஸ் அமைப்பு அமெரிக்க நேரத்தின்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (5-ம் தேதி) மாலை 6 மணிக்குள் ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். ஒவ்வொரு நாடும் அதில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்த இறுதி வாய்ப்புக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லையெனில், இதற்கு முன் ஒருவரும் பார்த்திராத நரக கொடுமையை ஹமாஸ் அமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மத்திய கிழக்கு பகுதியில் ஒன்று அமைதி ஏற்படும். இல்லையென்றால் அமைதியின்மை ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இந்திய அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    அகமதாபாத்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

    அதன்படி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்திய அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர்.

    இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 128 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா இதுவரை 286 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா அடித்த 5 சிக்சர்களின் மூலம் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் மகேந்திர சிங் தோனி 78 சிக்சர்களுடன் 4-வது இடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் ஜடேஜா அடித்த 5 சிக்சர்களோடு 80 சிக்சர்களுடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் (90), சேவாக் (90), ரோகித் சர்மா (88) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    • ராவணின் தங்க அரண்மனையை எரித்தது போல மோடியின் அரண்மனை அழிக்கப்படும் என்றார்.
    • உதித் ராஜ் கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தலைவரான உதித்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    பிரதமர் மோடி நவீன ராவணனின் சின்னமாகத் திகழ்கிறார். ஒவ்வொரு தசராவின் போதும் ராவணின் உருவ பொம்மை எரிக்கப்படும்.

    ராவணின் தங்க அரண்மனையை எரித்தது போல மோடியின் அரண்மனை அழிக்கப்படும் என தெரிவித்தார்.

    பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு உதித் ராஜ் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், உதித் ராஜ் கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா வெளியிட்ட அறிக்கையில், இதுதான் காங்கிரசின் உண்மை முகம். பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் இருப்பது அவர்களின் வழக்கமான செயல்பாட்டு நடைமுறையாகி விட்டது என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    • டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. இப்ராகிம் ஜட்ரன் 38 ரன்னும், குர்பாஸ் 30 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் நவ்சம் அகமது, ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 24 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    அடுத்து இறங்கிய ஜேகர் அலி, ஷமிம் ஹொசைன் ஜோடி பொறுப்புடன் ஆடியது.4வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த நிலையில் ஜேகர் அலி 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷமிம் ஹொசைன் 33 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் நூருல் ஹசன் போராடி 31 ரன் எடுத்தார்.

    இறுதியில், வங்கதேசம் 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    • மான்செஸ்டரில் யூத வழிபாட்டு தலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத வழிபாட்டுத் தலத்தின் மீது நேற்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டம் மீது காரை மோதி, அதன்பின் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

    இந்தக் கொடூரமான தாக்குதல் பயங்கரவாதத்தின் தீய சக்திகளிடமிருந்து நாம் எதிர்கொள்ளும் சவால்களை மீண்டும் கடுமையாக நினைவூட்டுகிறது.

    சர்வதேச அகிம்சை தினத்தில் இந்த தாக்குதல் நடந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி, அதைத் தோற்கடிக்க உலக சமூகம் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

    தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மான்செஸ்டர் நகர மக்களுக்காக பிரார்த்திக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை நட்பு நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணமான சிடொர்ஜொ நகரில் அமைந்துள்ளது அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி.

    இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதப்பாடம் பயின்று வரும் நிலையில், திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த மதப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில், மாணவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள்ள சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 50க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

    ×