என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஒமர்சாய் போராட்டம் வீண்: 2வது டி20 போட்டியிலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்
    X

    ஒமர்சாய் போராட்டம் வீண்: 2வது டி20 போட்டியிலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

    • டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. இப்ராகிம் ஜட்ரன் 38 ரன்னும், குர்பாஸ் 30 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் நவ்சம் அகமது, ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 24 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    அடுத்து இறங்கிய ஜேகர் அலி, ஷமிம் ஹொசைன் ஜோடி பொறுப்புடன் ஆடியது.4வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த நிலையில் ஜேகர் அலி 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷமிம் ஹொசைன் 33 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் நூருல் ஹசன் போராடி 31 ரன் எடுத்தார்.

    இறுதியில், வங்கதேசம் 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    Next Story
    ×