என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஹோண்டா ADV 350 மாடல் 330 சிசி SOHC 4-வால்வுகள் கொண்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
    • பிரேக்கிங்கிற்கு முன்பக்கத்தில் 256mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

    ஹோண்டா நிறுவனம் ADV 350-இன் புதிய மாடலை ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முதன்முதலில் 2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய சந்தைக்கு வந்தது. புதிய அப்டேட் செய்த பிறகும் இந்த மாடலின் இயந்திர மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அப்படியே உள்ளன. இருப்பினும், ADV 350 இப்போது மூன்று புதிய வண்ணங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் உடன் வருகிறது.

    ஹோண்டா ADV 350 மாடல் 330 சிசி SOHC 4-வால்வுகள் கொண்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 30 hp பவர் மற்றும் 31.5 Nm நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரின் பவர் யூனிட் ஒரு அண்டர்போன் சேஸிக்குள் அமர்ந்திருக்கிறது. இது USD முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்களை கொண்டிருக்கிறது.



    பிரேக்கிங்கிற்கு முன்பக்கத்தில் 256mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முன்புறத்தில் 15-இன்ச் சக்கரம் பின்புறம் 14-இன்ச் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேக்ஸி ஸ்கூட்டரில் 11.7 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது.

    அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா ADV 350 பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்பிரிங்ஸ், ஹோண்டா ரோட்-சின்க் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் 5-இன்ச் TFT ஸ்கிரீன், மற்றும் ஆட்டோ-கேன்சலிங் இண்டிகேட்டர்கள் போன்ற அம்சங்களைப் பெற்றுள்ளது.

    • சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
    • தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.

    நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதியை பா.ம.க. தலைவர் அன்புமணி ஆய்வு செய்தார்.

    சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மக்களுடனான கலந்துரையாடலுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நதிக்கரையில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * தாமிரபரணி ஆற்றில் நாள்தோறும் 200 டன் திடக்கழிவுகள் கலக்கின்றன.

    * நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வு செய்த போதிலும் இன்னும் அதே நிலை தொடர்கிறது.

    * தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.

    * தாமிரபரணியை கூவம் ஆக்கி விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
    • இந்த பிராசஸர் TSMC-இன் 3nm (N3P) செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், சீன சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விற்பனையில் சிறந்து விளங்கிய ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை வெளியிட்ட மாடல்களில் மிகப்பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனுடன், இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் நவம்பர் 13ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. எனினும், இதுபற்றி ஒன்பிளஸ் தரப்பில் இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை.

    ஒன்பிளஸ் 15 பேட்டரி விவரங்கள்:

    டிப்ஸ்டர் பால்ட் பாண்டா வெளியிட்டுள்ள தகவல்களின் படி , ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 7,300mAh பேட்டரி வழங்கப்படும். இத்துடன் 120W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்குமா, இல்லையா என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

    பேட்டரியைத் தவிர, வரவிருக்கும் ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பிற அம்சங்களையும் டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார். அதில் இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பிராசஸர் TSMC-இன் 3nm (N3P) செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

    ஒன்பிளஸ் போனில் உள்ள மிகப்பெரிய பேட்டரியைத் தவிர, இது முந்தைய தலைமுறைகளின் 120Hz பேனல்களிலிருந்து 165Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே தொழில்நுட்பம் போன்களில் கேம்களை விளையாடும்போது அதிக ஃபிரேம் வீதங்களை ஆதரிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

    சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர்ஓஎஸ் 16 உடன் வரும் என்றும், மற்ற சந்தைகளில் ஆக்சிஜன் ஓஎஸ் 16 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • கனமழை பெய்யும் போது 40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம்.

    நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பதூர் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மாவட்டங்களில் கனமழை பெய்யும் போது 40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கரூர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது.
    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை.

    * விஜயை கைது செய்ய வேண்டும், சிறையிலடைக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை.

    * கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

    * கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

    * கரூர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது.

    * கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    * விஜயை கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது.

    * பொறுப்புடன் வந்த முதலமைச்சருக்கு விஜய் நன்றி தெரிவித்திருக்க வேண்டும்.

    * சதிகார, சூழ்ச்சிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால் அவர் இதுபோன்ற பல நெருக்கடிகளை சந்திக்க நேரும்.

    * விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டுமென்பது தான் என் வேண்டுகோள்.

    * உச்சநீதிமன்றத்திலும் சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்து ஆடுகிறது என்றார். 

    • ஆப்பிரிக்காவில் மன்னராட்சியின் கீழ் இருக்கும் ஒரே நாடு எசுவாத்தினி மட்டும் தான்.
    • எசுவாத்தினி நாட்டை மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி ஆட்சி செய்து வருகிறார்.

    தெற்கு ஆப்பிரிக்காவில் எசுவாத்தினி என்ற நாடு உள்ளது. பின்னர் இந்த நாடு சுவாசிலாந்து என்று அழைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் மன்னராட்சியின் கீழ் இருக்கும் ஒரே நாடு எசுவாத்தினி மட்டும் தான்.

    எசுவாத்தினி நாட்டை மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி ஆட்சி செய்து வருகிறார். 1986 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 40 வருடங்களாக அந்நாட்டை அவர் ஆட்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில், எசுவாத்தினி மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி தனி விமானத்தில் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கினார். அப்போது ன்னர் மூன்றாம் எம்ஸ்வதி அந்நாட்டின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.

    மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி உடன் அவரது 15 மனைவிகள் மற்றும் 30 குழந்தைகள் மற்றும் 100 பணியாளர்கள் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது. 

    • பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பாக விதி மீறல்கள் நடைபெற்றது.
    • சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு

    தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸின் ஒன்பதாவது சீசன் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.

    இதனிடையே கன்னட மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கன்னட பிக்பாஸ் செட்டை இழுத்துமூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெற்றதாகவும் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சுவாமி தெரிவித்தார்.

    இதனால் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12 முடிவுக்கு வருகிறதா என்று கன்னட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • 3 ஆம் இடம் பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!
    • இந்த வெற்றியின் மூலம், நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித் குமார் அவர்கள்!

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் களமிறங்கி, பல வெற்றிகளை குவித்து வரும் நடிகர் அஜித் குமாரின் 'Ajith Kumar Racing Team' அணி, 2025 ஆம் ஆண்டிற்கான Creventic 24H European Endurance Championship தொடரில் ஒட்டுமொத்தமாக 3 ஆம் இடம் பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!

    இந்த வெற்றியின் மூலம், நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித் குமார் அவர்கள்!

    மென்மேலும் அவரது அணி பல வெற்றிகளை குவிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என கூறியுள்ளார். 


    • வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
    • இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.

    இந்தியாவில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான வரிவிதிப்பு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. வரி விதிப்புக்கு ஏற்ப வாகனங்கள் விலையை உற்பத்தியாளர்கள் மாற்றியமைத்தது, வாகன விற்பனை விரைந்து அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    இந்ந நிலையில் ஜெர்மனியை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் தனது மெர்சிடிசஸ் வகை கார்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வரி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்னர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி இதுவரை 5,119 கார்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.

    • சென்னை ஒன் செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.
    • சென்னை ஒன் செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.

    இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், யுபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும். இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    'சென்னை ஒன்' செயலி பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.

    இந்நிலையில் சென்னையில் மாநகர போக்குவரத்து பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறுவதுபோல, சென்னை ஒன் செயலியிலும் மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இதற்கான பணிகளை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை ஒன் செயலி மூலமே மாதாந்திர பாஸ் பெறும் வசதியும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

    • டியூட் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
    • பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், 'டியூட்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை இன்று மாலை 05.04 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

    • ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
    • 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவியிட்டுள்ளதாவது:-

    2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.

    கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.

    கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார். 



    ×