பிக்பாஸ் செட்டை இழுத்துமூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு

பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பாக விதி மீறல்கள் நடைபெற்றது. சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு
பிக்பாஸ் செட்டை இழுத்துமூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு
Published on

தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸின் ஒன்பதாவது சீசன் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.

இதனிடையே கன்னட மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கன்னட பிக்பாஸ் செட்டை இழுத்துமூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெற்றதாகவும் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சுவாமி தெரிவித்தார்.

இதனால் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12 முடிவுக்கு வருகிறதா என்று கன்னட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com