என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார்.
    • இப்படத்திற்கு சுள்ளான் சேது என தலைப்பு வைத்துள்ளனர்.

    கிராமத்து பின்னணியுடைய படங்கள் மிகவும் அரிதாகி விட்டன. இதை எடுக்கும் இயக்குநர்கள் வெகு சிலரே எனலாம். கிராமத்து பின்னணி படங்களை முதன்மையாக எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் முத்தையா. இவர் எடுத்த கொம்பன்,குட்டி புலி,விருமன், போன்ற படங்களே இதற்கு சாட்சி.

    கார்த்தி நடிப்பில் வெளிவந்த கொம்பனும்,விருமனும் மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆர்யா நடித்து வெளியான 'காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்குநர் முத்தையா இயக்கி இருந்தார்.

    இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு சுள்ளான் சேது என தலைப்பு வைத்துள்ளனர்.

    மேலும் படத்தில் சமுத்திரகனி மற்றும் பிரிகிடா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசரை ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி படத்தின் டீசர் வரும் 27 ஆம் தேதி வெளியாகிறது.

    படத்தின் இசையை ஜென் மார்டின் மற்றும் ஜிப்ரான் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை நகர் பகுதி முழுவதும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
    • ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் அச்சிடப்பட்டு இருந்தன.

    மதுரை:

    மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதுடன், தமிழ்நாட்டில் பெண்கள் யாருக்கும் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    அத்துடன் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் சரிதானே என்று கேள்வி எழுப்பிய விஜய், அந்த சத்தம் கேட்கிறதா? என்றும் அதிர வைத்தார். அவரது பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்தநிலையில் விஜய்க்கு எதிராக பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கண்டன சுவரொட்டிகளை ஒட்டினர். மதுரை நகர் பகுதி முழுவதும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

    அதில் ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் அச்சிடப்பட்டு இருந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று த.வெ.க.வினர் மீண்டும் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களில் கதறல் சத்தம் கேக்குதா அங்கிள், சிங்கத்தின் கர்ஜனை தொடரும், அது உங்கள் உடன் பிறப்புகளை தூங்க விடாது என்ற வாசகத்துடன் அது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    மதுரை என்றாலே எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டும் பழக்கம் இருந்து வருகிறது. அதிலும் பல மீட்டர் தூரத்திற்கு ஒரே போஸ்டர் ஒட்டினாலும் அது பேசும் பொருளாகி வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் தற்போது தி.மு.க.வினரும், த.வெ.க.வினரும் மாறி மாறி போஸ்டர் போரில் இறங்கியுள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • இது ரஷியாவின் எண்ணை வர்த்தக வருவாயை குறைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை ஆகும்.
    • கொலை செய்வதை நிறுத்தாவிட்டால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனாலும் அதற்கு இது வரை எந்த பலனும் கிடைக்கவில்லை.

    இதனால் ரஷியா மீதான கோபத்தில் அங்கிருந்து கச்சா எண்ணை வாங்கி வரும் இந்தியாவுக்கு டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இதற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் விரைவில் முடிவடைவதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கடந்த சில வாரங்களில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ளது.

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியா மீது டிரம்ப் 2-வது கட்ட வரி விதிப்பை மேற்கொண்டார். தீவிர பொருளாதார நெருக்கடி தரும் வழிமுறைகளை டிரம்ப் பயன்படுத்தி உள்ளார்.

    இது ரஷியாவின் எண்ணை வர்த்தக வருவாயை குறைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை ஆகும். கொலை செய்வதை நிறுத்தாவிட்டால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தொடர்ந்து ரஷியா தனிமைப்படுத்தப்படும்

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    • சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் கிராமம் வ.உ.சி நகரில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் கவுஷிக் (வயது 12) ராமநத்தம் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவன் பள்ளிக்கு செல்ல வீட்டில் ஷூ அணிந்தார்.

    அப்போது அதில் இருந்த சிறிய பாம்பு கடித்தது. இதில் மாணவன் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடி காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிக்சர் அடித்த வீரர் தனது சக வீரரிடம் பேசத் தொடங்கினார்.
    • திடீரென்று வீரர் தரையில் மயங்கி விழுந்தார்.

    கிரிக்கெட் விளையாடும் போதும், நடன ஆடும் போதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    அந்த வகையில் ஒரு உள்ளூர் போட்டியில் கிரிக்கெட் விளையாடும் போது சிக்சர் அடித்த வீரர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிக்சர் அடித்த வீரர் தனது சக வீரரிடம் பேசத் தொடங்கினார். அப்போது திடீரென்று வீரர் தரையில் மயங்கி விழுந்தார். அங்கிருந்த வீரர்கள் உடனடியாக அவரை எழுப்ப முயன்று தண்ணீர் கொடுத்தனர். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. மைதானத்திலேயே அவருக்கு CPR கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு, வீரருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சில வினாடிகளுக்கு முன்பு சிக்சர் அடித்து அனைவரின் இதயங்களையும் வென்ற வீரர் இப்போது இந்த உலகில் இல்லை என்பதை மக்களால் நம்பவே முடியவில்லை.

    விளையாட்டுகளைத் தொடங்குவதற்கு முன் மருத்துவ பரிசோதனை மற்றும் உடற்தகுதி குறித்து கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்பதை இதுபோன்ற விபத்துகள் நமக்குக் கற்பிக்கின்றன.

    • மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது.

    பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இப்படத்தின் பாகம் இரண்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    அடுத்ததாக மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வீடியோவை சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் அடுத்தாண்டு சங்கிராந்தியை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 17 ஆம் தேதி கேரளாவில் நடக்கிறது. அங்கு பிரபாஸ்-இன் இண்ட்ரோ பாடல் மற்றும் மற்றொரு பாடல் படமாக்க இருக்கிறது. அக்டோபர் இறுதியில் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையமசத்தில் உருவாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார்.

    பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.

    • கூடுதல் வரதட்சனை கேட்டு உணவு அளிக்காமல் வீட்டில் சிறை வைத்து உடல் முழுவதும் சூடு வைத்து சித்ரவதை செய்தனர்.
    • உடல் முழுவதும் புதியதாக சூடு வைத்ததற்கான அடையாளங்களும் ஏற்கனவே சூடு வைத்து ஆறிப்போன அடையாளங்களும் இருந்தது.

    ஆந்திரா மாநிலம் கம்பம் மாவட்டம் கல்லூர், முடிச்சாவரத்தை சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா (வயது33). இவரது கணவர் நரேஷ் பாபு.

    இத்தம்பதிக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 2 ஏக்கர் மாந்தோப்பு, ஒரு ஏக்கர் விவசாய நிலம், ரூ.10 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்தனர்.

    தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது . அப்போது நரேஷ் பாபு மனைவி மற்றும் குழந்தையுடன் 6 ஆண்டுகள் மாமியார் வீட்டில் வசித்தார்.

    பின்னர் அஸ்வராபேட்டையில் உள்ள சகோதரி பூ லட்சுமி வீட்டிற்கு குடி பெயர்ந்தார். கடந்த 2 ஆண்டுகளாக லட்சுமி பிரசன்னாவிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு உணவு அளிக்காமல் வீட்டில் சிறை வைத்து உடல் முழுவதும் சூடு வைத்து சித்ரவதை செய்தனர்.

    இதனால் லட்சுமி பிரசன்னாவின் உடல் எலும்பு கூடாக மாறியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமனாருக்கு போன் செய்த நரேஷ் பாபு உங்களது மகள் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து காயமடைந்ததால் ராஜ மகேந்திரவரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

    இதனைக் கேட்டு பதறிப்போன லட்சுமி பிரசன்னாவின் பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் லட்சுமி பிரசன்னா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அடையாளம் காண முடியாத அளவு லட்சுமி பிரசன்னாவின் உடல் மெலிந்து எலும்பு கூடாக இருந்ததை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். அவரது உடல் முழுவதும் புதியதாக சூடு வைத்ததற்கான அடையாளங்களும் ஏற்கனவே சூடு வைத்து ஆறிப்போன அடையாளங்களும் இருந்தது.

    இதுகுறித்து வெங்கடேஸ்வர ராவ் போலீசில் புகார் செய்தார். போலீசார் மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள நரேஷ் பாபு, அவரது சகோதரி பூ லட்சுமி, தாய் விஜயலட்சுமி, மைத்துனர் சீனிவாச ராவ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • சல்வா ஜூடும்' சட்டவிரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011 இல் தீர்ப்பளித்தார்.
    • சல்வா ஜூடும் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.

    செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். என்டிஏ கூட்டணி சார்பில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிற்கிறார்.

    இதற்கிடையே கேரளாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, " இந்தியா கூட்டணி, நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

    சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிராகப் போராட பழங்குடி இளைஞர்களைக் கொண்டு அரசாங்கம் உருவாக்கிய 'சல்வா ஜூடும்' சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011 இல் தீர்ப்பளித்தார்.

    அந்தத் தீர்ப்பை அவர் வழங்கியிருக்காவிட்டால், சல்வா ஜூடும் நடைமுறையில் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.

    இடதுசாரிகளின் அழுத்தத்தின் பேரில்தான் காங்கிரஸ் கட்சி நீதிபதி சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

    அமித் ஷாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த சுதர்சன் ரெட்டி, "அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது, என்னால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது அல்ல. விவாதத்தில் கண்ணியம் இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சருடன் விவாதிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற 18 நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை கண்ணியத்துடன் விமர்சிக்க வேண்டும் என 18 முன்னாள் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • சினிமா, அரசியல் துறையின் சாதனையாளரும், சினிமாத்துறையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அருமை நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்.
    • அவருடன் பயணித்த அற்புதமான நினைவுகளையும், எண்ணற்ற தருணங்களையும் நினைவுகூறுகிறேன்.

    சென்னை:

    நடிகரும், பா.ஜ.க. உறுப்பினருமான சரத்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,

    சினிமா, அரசியல் துறையின் சாதனையாளரும், சினிமாத்துறையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அருமை நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவருடன் பயணித்த அற்புதமான நினைவுகளையும், எண்ணற்ற தருணங்களையும் நினைவுகூறுகிறேன்.

    அன்றாடம் நீங்காத நினைவுகளில் நிறைந்திருக்கும், அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை அவர்தம் பிறந்தநாளில் நினைவுகூர்ந்து மகிழ்வோம் என்று கூறியுள்ளார். 

    • முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும்
    • கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும்

    பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற வகையில் பதவி பறிப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    முதல்வர்கள், அமைச்சர்கள், ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பதுதான் அந்த மசோதாவின் முக்கியம்சம். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

    இந்நிலையில், இந்த மசோதா குறித்து பேசிய அமித் ஷா, "பதவி பறிப்பு மசோதாவில் பிரதமர் பதவியையும் பிரதமர் மோடி சேர்த்துள்ளார். முன்னதாக, இந்திரா காந்தி 39வது திருத்தத்தை (ஜனாதிபதி, துணைத் தலைவர், பிரதமர் மற்றும் சபாநாயகரை இந்திய நீதிமன்றங்களின் நீதித்துறை மதிப்பாய்விலிருந்து பாதுகாப்பது) கொண்டு வந்தார்.

    பிரதமர் சிறைக்குச் சென்றால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அரசியலமைப்புத் திருத்தத்தை நரேந்திர மோடி ஜி தனக்கு எதிராகக் கொண்டு வந்துள்ளார்

    ஆனால் பிரதமரே சிறை சென்றாலும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற வகையில், தனக்கு எதிராகவே ஒரு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்துள்ளார் பிரதமர் மோடி" என்று தெரிவித்துள்ளார்.

    • ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
    • வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது.

    சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

    பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ட்ரீம் 11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மதராஸி'.
    • ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'மதராஸி' வருகிற 5-ந்தேதி வெளியாக உள்ளது.

    இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'மதராஸி' வருகிற 5-ந்தேதி வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், 'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது:-

    "என்னுடைய இசையில் முதலில் பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவானது எதிர் நீச்சல் திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் இருந்து சிவகார்த்திகேயனும் எனக்கு இடையேயான நட்பு தொடங்கியது.

    நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் அவர்தான், எஸ்.கே என்னுடைய செல்லம். இது நாங்க சேரும் ஒன்பதாவது படம். அவர் மனசு சுத்தமா இருக்கிறதுதான் அவர் இன்னைக்கு இங்க இருக்குறதுக்கு காரணம். 50, 100னு இப்போ 300 கோடி வசூல் அடிச்சுட்டாரு.

    'மதராஸி' படத்துல வேற ஒரு எஸ்.கே.வ நீங்க பார்ப்பீங்க. டிரெய்லர்ல 'இது என் ஊருடா, நான் நிப்பேன்'னு சொல்வாரு. அது மாதிரி இது என் எஸ்.கே, நான் வந்து நிப்பேன். நானும் எஸ்.கே.வும் சேர்ந்து ஒரே சமயத்துல கரியரை தொடங்கினதுனால அது எனக்கு பர்சனலான உறவு. என்னைக்கோ ஒரு நாள் நான் Field Out ஆவேன். அன்னைக்கு எஸ்.கே.வின் வெற்றியை எண்ணி நான் சந்தோஷப்படுவேன்." என மிகவும் எமோஷனலாக கூறினார்.

    ×