என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கதறல் சத்தம் கேக்குதா அங்கிள்: தி.மு.க.வினருக்கு பதிலடி கொடுத்து த.வெ.க.வினர் ஒட்டிய போஸ்டர்
    X

    'கதறல் சத்தம் கேக்குதா அங்கிள்': தி.மு.க.வினருக்கு பதிலடி கொடுத்து த.வெ.க.வினர் ஒட்டிய போஸ்டர்

    • மதுரை நகர் பகுதி முழுவதும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
    • ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் அச்சிடப்பட்டு இருந்தன.

    மதுரை:

    மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதுடன், தமிழ்நாட்டில் பெண்கள் யாருக்கும் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    அத்துடன் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் சரிதானே என்று கேள்வி எழுப்பிய விஜய், அந்த சத்தம் கேட்கிறதா? என்றும் அதிர வைத்தார். அவரது பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்தநிலையில் விஜய்க்கு எதிராக பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கண்டன சுவரொட்டிகளை ஒட்டினர். மதுரை நகர் பகுதி முழுவதும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

    அதில் ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் அச்சிடப்பட்டு இருந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று த.வெ.க.வினர் மீண்டும் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களில் கதறல் சத்தம் கேக்குதா அங்கிள், சிங்கத்தின் கர்ஜனை தொடரும், அது உங்கள் உடன் பிறப்புகளை தூங்க விடாது என்ற வாசகத்துடன் அது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    மதுரை என்றாலே எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டும் பழக்கம் இருந்து வருகிறது. அதிலும் பல மீட்டர் தூரத்திற்கு ஒரே போஸ்டர் ஒட்டினாலும் அது பேசும் பொருளாகி வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் தற்போது தி.மு.க.வினரும், த.வெ.க.வினரும் மாறி மாறி போஸ்டர் போரில் இறங்கியுள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×