என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சென்னை மணலி, விம்கோ நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் மேகவெடிப்பால் கனமழை பெய்துள்ளது.
- விம்கோ நகர் பகுதியில் 1 மணி நேரத்தில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்தது.
எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில், சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மணலி, விம்கோ நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் நள்ளிரவு, மேகவெடிப்பால் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விம்கோ நகர் பகுதியில் 1 மணி நேரத்தில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி கோயம்பத்தூர், கொச்சி, ஐதராபாத் என பல இடங்களில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்க இருக்கிறது.
- மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் யானை விழுந்தது.
- அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம், கோட்டப்பாடியில் இரவு நேரத்தில் ஒரு காட்டு யானை வீட்டுக் கிணற்றில் விழுந்தது.
மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் யானை விழுந்ததால் அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மீட்க போராடி வருகின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, அனுயா, சந்தானம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சிவா மனசுல சக்தி திரைப்படம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய ஹிட்டானது. மேலும் திரைப்படமும் ப்ளாக்ப்ஸ்டர் திரைப்படமாக உருவானது.
படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் இன்றும் பலரின் மனதில் இருக்கும். மச்சி ஒரு க்வாட்டர் சொல்லேன், தெரியல மச்சி, அவ போய் 6 மாசம் ஆகுது போன்ற வசனங்கள் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அப்படத்திற்கு பிறகு ஜீவாவும் ராஜேஷும் இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் இந்த மெகா வெற்றி கூட்டணி 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணைகின்றனர். ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார்.
- மதுரையில் வருகிற 4-ந்தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை:
கடந்த ஜூலை 14-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் மதுரையில் வருகிற 4-ந்தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக அந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "14-07-2025 அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க 04-09-2025 அன்று மதுரையில் நடைபெறுவதாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு கழக உயர்மட்டக் குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
இப்படத்திற்கு குமாரசம்பவம் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தை இசையை அச்சு ராஜமணி மேற்கொள்ள, ஒளிப்பதிவு ஜெகதீஷ் செய்துள்ளார்.
இப்படத்தை வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம தயாரித்துள்ளது. இதற்கு முன் இந்த நிறுவனம் யாத்திசை திரைப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா மொத்தம் 99 பதக்கங்களை வென்றுள்ளது
- இந்தியா 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
16 ஆவது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது.
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 99 பதக்கங்களை வென்று, முதலிடம் பிடித்து வரலாறு படைத்தது. இந்த 99 பதக்கங்களில் 50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கமும் அடக்கம்.
கஜகஸ்தான் 21 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தையும், சீனா 15 தங்கம் உள்பட 37 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
- நீண்ட நேரம் காத்திருந்தும் அவருடைய காதலன் வரவில்லை.
- போன் மூலம் காதலனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார்.
காதலனுக்காக பெற்றோரை விட்டு ஓடி போய் ஏமாற்றமடைந்து வேறு ஒருவரை திருமணம் செய்யும் சம்பவங்கள் சினிமாவில் பார்த்திருக்கிறோம்.
ஆனால் அது போன்ற ஒரு ஆச்சரியப்பட வைக்கும் சம்பவம் ஒன்று மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள இந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா திவாரி. கல்லூரி படிப்பை முடித்த இவர் வீட்டில் பெற்றோர் பராமரிப்பில் இருந்து வந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர். அவருடைய காதலன் எந்த சமயத்திலும் உன்னை கைவிடவே மாட்டேன் என அடிக்கடி வாக்குறுதி அளித்தார்.
இது ஒருபுறம் இருக்க காதல் விவகாரம் ஷ்ரத்தா திவாரி வீட்டிற்கு தெரிய வந்தது. அவர்கள் இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஷ்ரத்தா திவாரி வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்ய முடிவு செய்தார். இது பற்றி அவருடைய காதலனிடம் தெரிவித்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
சம்பவத்தன்று ஷ்ரத்தா திவாரி தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டார். வீட்டில் இருந்த பெற்றோர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது நான் எனது காதலனை திருமணம் செய்து கொண்டு தான் வருவேன் என கூறினார்.
அவரிடம் பெற்றோர்கள் கெஞ்சி கதறி அழுது பார்த்தனர். ஆனால் தன்னுடைய காதலனை திருமணம் செய்வதில் ஷ்ரத்தா திவாரி உறுதியாக இருந்தார். பெற்றோரை உதறி விட்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர் காதலனிடம்ஏற்கனவே கூறியபடி அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
நீண்ட நேரம் காத்திருந்தும் அவருடைய காதலன் வரவில்லை. போன் மூலம் காதலனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். அவர் அழைப்பை எடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் காதலனிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதில் இப்போது எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
காதலனை நம்பி பெற்றோரை உதறி விட்டு வந்த ஷ்ரத்தா திவாரி கதறி அழுதார். ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றனர். வீட்டிற்கும் செல்ல முடியாது காதலனும் கைவிட்டு விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் ஷ்ரத்தா திவாரி நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார்.

அந்த நேரத்தில் ரெயில் ஒன்று வந்தது. அந்த ரெயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்தார். அந்த பெட்டியில் ஷ்ரத்தா திவாரி கல்லூரியில் படித்த போது நண்பராக இருந்த கரண் என்பவர் இருந்தார்.
இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது கண்கலங்கியபடி இருந்த ஷ்ரத்தா திவாரியிடம் ஏன் இப்படி இருக்கிறாய் என கரண் கேட்டார்.
திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி வந்து விட்டேன். காதலன் கைவிட்டதால் அதுவும் நடக்கவில்லை. இனிமேல் என்னால் வாழ முடியாது என்றார்.
கரண் அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை. இறுதியாக கரண் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.
நம்பிக்கை துரோகம் செய்த காதலனை விட ஆபத்தில் உதவும் நண்பன் எவ்வளவோ மேல் என சிந்தித்த ஷ்ரத்தா திவாரி சம்மதம் தெரிவித்தார். இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் தம்பதியினர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசார் இளம்பெண் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவரது தந்தை நான் எனது மகளை 10 நாட்கள் கணவரிடம் இருந்து பிரித்து எனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 10 நாட்களுக்கு பிறகும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விரும்பினால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
அதற்கு ஷ்ரத்தா திவாரி, கரண் இருவரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இளம்பெண் பெற்றோருடன் சென்றார்.
சினிமா போல் நடந்த இந்த சம்பவம் இந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் நேற்று சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனையடுத்து சீனாவில் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் பிரதமரை பார்த்து சொடக்கு போட்டு பேசுகிறார்.
- அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி.
நடிகர் ரஞ்சித்தின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி தமிழக வெற்றிக் கழகத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவில் நடிகர் ரஞ்சித் பேசியது தொடர்பாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூர் சந்திப்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.கவை சேர்ந்த நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமீபத்துல மதுரை மாநாட்டுல தம்பி விஜய், நான் உச்சத்தில் இருக்கும் போது வந்தவன். பிழைப்பு தேடி வரவில்லைனு பேசியிருக்கிறார். அப்படியென்றால் அவர் யாரை பார்த்து அதனை சொல்கிறார். எம்.ஜி.ஆரையா, ஜெயலலிதாவையா? இல்ல அன்பு அண்ணன் விஜயகாந்தையா, இல்ல கமல்ஹாசனையா?.
மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் பிரதமரை பார்த்து சொடக்கு போட்டு பேசுகிறார். இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்று கூறுகிறார். ஆனால் இதே விஜய், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி கோவையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பூனை குட்டியை போன்று கையை கட்டி அமர்ந்திருந்தார்.
அப்போது விஜய், பிரதமரை சந்தித்தது எதற்காக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவா? மீனவர் பிரச்சனை குறித்து பேசவா? அல்லது கல்வியை சமத்துவமாக்க வேண்டும் என்று பேசுவதற்காகவா? அல்லது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவா? எதுவும் இல்லை தன்னுடைய தலைவா என்ற படம் ஓடுவதற்காக பிரதமரை பார்த்துவிட்டு, இப்போது பிரதமரை பார்த்து கையை சொடக்கு போட்டு பேசுகிறார்.
இப்போ கையை சொடக்கு போட்டு பேசுற விஜய்க்கு பழையது எல்லாம் மறந்துட்டாரு. தம்பிக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் மாறி மறந்துட்டாருனு நினைக்கிறேன்.
மிஸ்டர், மிஸ்டர்னு சொடக்கு போட்டு சொல்லும்போதெல்லாம், ஒரு வாக்காளனா, ஒரு குடிமகனா எனக்கு அப்பா யாரென்றால் அதுமோடி தான். அவர்தான் என்ன காப்பாத்துறாரு. அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி. அவரை போய் கைநீட்டி சொடக்கு போட்டு பேச அருகதை இல்லை.
முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரீகமா. நீயே இப்படி இருந்தால், உன்ன நம்பி இருக்கும் இளைஞர்கள் என்ன ஆவார்கள். எனக்கு வர கோவத்துக்கு ஒங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. அதனை நாம் ஓங்கி ஓட்டாக குத்துவோம் என்று பேசியிருந்தார்.
- ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.
- இந்த யாத்திரையில் தேஜஸ்வி யாதவும் இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கலந்து கொண்டார்.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.
செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் யாத்திரையை முடிக்கிறார். இந்த யாத்திரையில் பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவும் ராகுல்காந்தியுடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில், பீகாரில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் தன்னிச்சையாக தம்மை அறிவித்தார்.
வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல்காந்தி மற்றும் அகிலேஷ் யாதவின் முன்னிலையில் தேஜஸ்வி யாதவ் இதனை அறிவித்தார்.
- மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
- மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி மெய்தி- குகி ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே கலவரத்தால் பெருதும் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை செல்லாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
உலகம் முழுவதும் பயணம் செய்யும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் மாநிலத்தைப் பார்வையிட்டு அங்குள்ள மக்களைச் பார்க்க நேரமோ, ஆர்வமோ இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், வரும் செப்டம்பர் 2ம் வாரத்தில் பிரதமர் மோடி அங்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவதுடன், பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என கூறப்படுகிறது.






