search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மோடி சர்வாதிகாரி போல் செயல்படுவதால் பாராளுமன்றம் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது- கே.எஸ்.அழகிரி அறிக்கை
    X

    மோடி சர்வாதிகாரி போல் செயல்படுவதால் பாராளுமன்றம் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது- கே.எஸ்.அழகிரி அறிக்கை

    • புதிய பாராளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை மீறி கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
    • பாராளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பென்ட் நடவடிக்கையும் அப்பட்டமான, ஜனநாயக விரோத செயலாகும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதிய பாராளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை மீறி கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    தமிழக கவர்னர் மாளிகைக்கு வெளியே நடந்த சிறிய அசம்பாவித நிகழ்வுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. உட னடியாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இதற்கெல்லாம் என்ன பதில் கூறப்போகிறார்? என்று தெரியவில்லை.

    பொதுவாக இன்றைக்கு பாராளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலும், அதையொட்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பென்ட் நடவடிக்கையும் அப்பட்டமான, ஜனநாயக விரோத செயலாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி, ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியைப் போல செயல்படுவதால் தான் பாராளுமன்றம் இத்தகைய தாக்குதலுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது.

    இத்தகைய போக்குகள் இந்தியாவின் ஜனநாயகத்திற்கே கேலிக் கூத்தாகவும், அவமானமாகவும் அமைந்துவிட்டது என்பதே ஜனநாயக உணர்வாளர்களின் கருத்தாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×