search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: ராஜ்நாத் சிங் பேட்டி
    X

    தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: ராஜ்நாத் சிங் பேட்டி

    • மிச்சாங் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்தார்.
    • மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் பறந்தபடி அவர் ஆய்வு செய்தார்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சென்னை வந்தார். மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்பு பகுதியை பார்வையிட்டார். அவருடன் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தார். அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வந்தார். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல் மந்திரி முக ஸ்டாலின் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:

    நான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். தொடர்ந்து முதலமைச்சரைச் சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன்.

    தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை பிரதமர் சார்பாக உறுதியளிக்கிறேன்.

    தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு இரண்டாம் தவணையாக ரூ.450 கோடியை வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

    நகர்ப்புற வெள்ளப் பிரச்சினையை சென்னை சமீப வருடங்களில் அடிக்கடி சந்தித்து வருவதால், நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.510 கோடி நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர் என தெரிவித்தார்.

    Next Story
    ×