என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கொடைக்கானலில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்
- கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்தார்.
- பெருமாள்மலையில், பழனி மலைப்பாதை பிரிவு பகுதியில் முதலமைச்சர் வந்தபோது, சாலையோரம் பொதுமக்கள் சிலா் நின்று கொண்டு வரவேற்றனர்.
கொடைக்கானல்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானலுக்கு கடந்த 29-ந்தேதி வந்தார். கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர் தங்கி இருந்தார்.
மறுநாள் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். அத்துடன் கோல்ப் விளையாடினார். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை சந்தித்தார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை 3.40 மணி அளவில் விடுதியில் இருந்து காரில் புறப்பட்டார். வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதை வழியாக அவர் மதுரைக்கு சென்றார். முதலமைச்சர் செல்லும் வழியில் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்று கையசைத்தனர். அப்போது அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி அவர் சென்றார்.
பெருமாள்மலையில், பழனி மலைப்பாதை பிரிவு பகுதியில் முதலமைச்சர் வந்தபோது, சாலையோரம் பொதுமக்கள் சிலா் நின்று கொண்டு வரவேற்றனர்.
அப்போது காரை நிறுத்திய அவர், பொதுமக்களை சந்தித்தார். அவர்களிடம் இருந்து புத்தகங்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர், மதுரை விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.