search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி
    X
    கருணாநிதி

    நாளை 97-வது பிறந்தநாள்: கருணாநிதி சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்

    அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு நாளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    அவருடன் முதன்மை செயலாளர் ஆர்.டி.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் மட்டும் பங்கேற்கிறார்கள்.

    இதேபோல் அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்துக்கும் சென்று மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து வணங்குகிறார்.

    கோபாலபுரம் வீட்டுக்கும் சென்று கருணாநிதியின் படத்துக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    தற்போது சென்னையில் கொரோனா அதிகம் பரவி வருவதால் இந்த நிகழ்ச்சிகளில் வேறு யாரும் பங்கேற்க வரவேண்டாம் என்றும் அவரவர் தொகுதிகளில் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தலைமை கழக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×