என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • தென் ஆப்பிரிக்கா ஏ அணி இந்தியா ஏ அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது. இந்தியா ஏ அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    திலக் வர்மா தலைமை தாங்க, ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியா ஏ அணி விவரம்:-

    திலக் வர்மா (கேப்டன்), ருதுராக் கெய்க்வாட் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், ரியான் பராக், இஷான் கிஷன், ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், மானவ் சுதார், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது

    இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்தது.
    • டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.

    ஆக்லாந்து:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 53 ரன் எடுத்தார். ரோவ்மன் பவல் 33 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, போல்க்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ஆனாலும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து போராடி 55 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு வழங்கப்பட்டது.

    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார்.

    இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது.

    உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் இன்று பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர். அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார்.

    இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2017-ல் பிரதமரை சாம்பியன் கோப்பை இல்லாமல் சந்தித்தோம். தற்போது சாம்பியன் கோப்பையுடன் சந்தித்தோம். பிரதமர் மோடியை அடிக்கடி சந்திக்க விரும்புகிறோம் என்றார்.

    • இங்கிலாந்து தொடரின்போது ரிஷப் பண்ட்-க்கு காயம் ஏற்பட்டது.
    • விக்கெட் கீப்பருடன், துணைக் கேப்டன் பதவியையும் சேர்ந்து கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுப்மன் கில் தலைமை தாங்க, ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருக்கு இங்கிலாந்து தொடரின்போது காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து மீண்டதால், அணியிடம் இடம் கிடைத்துள்ளது. அத்துடன் துணைக்கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆகாஷ் தீப்பும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த அணி விவரம்:-

    சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ஜுரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, அக்சர் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது.

    • ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது
    • இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

    ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் அணியில் இடம் பெறாததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனமாக நியமிக்கப்ட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-

    ஸ்மித் (C), ஸ்டார்க், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், அபோட், போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், கவாஜா, லாபுசாக்னே, நாதன் லியோன், ஜேக் வெதரால்ட், வெப்ஸ்டர்

    • முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
    • பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    இந்நிலையில், இந்திய மகளிர் அணி வீராங்கனைகள். இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற உள்ளனர்.

    இதற்காக டெல்லி விமான நிலையம் வந்த இந்திய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    • பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
    • தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தாருக்கும் ரூ.22.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    இந்நிலையில், மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது.

    மேலும், மும்பையைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தாருக்கும் ரூ.22.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஃபட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
    • இந்திய தேசிய கீதத்தை பாகிஸ்தான் ரசிகர் பாடியது இந்தியர்களை நெகிழ வைத்தது.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையை இந்திய வீராங்கனைகள் வென்றதை, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், அர்ஷத் என்ற நபர் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சியை அணிந்தபடி இந்திய மகளிர் அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.

    அதில், இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் எழுந்து நின்று இந்திய தேசிய கீதத்தைப் பாடியது இந்திய ரசிகர்களை உண்மையிலேயே நெகிழ வைத்தது.

    அர்ஷத்தின் இந்த செயல், இருநாட்டு எல்லைகளை கடந்து இதயங்களை இணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. 

    • முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
    • 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    இந்திய ஆண்கள் அணி இதற்கு முன் 50 ஓவர் உலக கோப்பையை 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் வென்றுள்ளது. அதன்பின் 2011ஆம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் வென்றுள்ளது.

    தற்போது மகளிர் அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் என இந்தியாவுக்கு 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.

    இந்நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு சிறந்த பேட்டர் மற்றும் ஃபீல்டர். அவர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினால் கேப்டன் பதவியின் சுமை இல்லாமல் இருந்தால் அவரால் இன்னும் சிறப்பாக அணிக்கு பங்களிக்க முடியும்" என்று தெரிவித்தார்.

    • ஆசிய கோப்பை தொடரின்போது இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர்.
    • இந்திய விமானங்களை சுட்டது போன்று ஹாரிஸ் ராஃப் சைகை காட்டியிருப்பார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் வீரர்கள் மிகவும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்தனர்.

    பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்று சைகை காட்டினார். ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை தெரிவிக்கும் வகையில் அவ்வாறு சைகை காட்டினார் என இந்தியா குற்றம்சாட்டியது.

    போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியா- பாகிஸ்தான் மோதலின்போது, உயிரிழந்தவர்களுக்கு வெற்றியை அர்ப்பணிப்பதாகவும், அவர்களுடன் நிற்பதாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

    இருநாட்டின் கிரிக்கெட் சங்கங்களும் ஐசிசி-யில் புகார் அளித்தது. இதனடிப்படையில் ஐசிசி ஹாரிஸ் ராஃப்-க்கு 2 போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு போட்டியின் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.

    ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை காட்டிய பாகிஸ்தான் தொடக்க வீரர் பர்ஹானுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை.

    • ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
    • ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டினர்.

    இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்பு பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், "நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன், இதை நான் தனியாகச் செய்திருக்க முடியாது. அவர் என்னைவழி நடத்தினார்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து இணையத்தில் ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.

    இந்நிலையில், ஜெமிமா மீதான மத ரீதியான ட்ரோல்களுக்கு முன்னாள் இந்திய வீராங்கனை சிகா பாண்டே பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிகா பாண்டே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆமாம் ஜெமிமா கடவுளுக்குப் பிடித்த குழந்தைதான். நீங்கள் அதற்காக பொறாமைப்பட்டால்... மன்னிக்கவும், யாரும் உங்களுக்கு உதவ முடியாது" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

    • இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
    • உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    உலகக் கோப்பையை வென்றது தொடர்பாக இந்நாள் மற்றும் முன்னாள் வீராங்கனைகள் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், உலகக் கோப்பை வென்றது தொடர்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி கூறியதாவது:

    இந்த உலகக் கோப்பைக்கு முன் எனக்காக அதைச் செய்வதாக அவர்கள் எனக்கு உறுதியளித்தார்கள்.

    2022-ம் ஆண்டு நாங்கள் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. அதன்பிறகு, ஹர்மனும் ஸ்மிருதியும் நள்ளிரவில் என் அறைக்கு வந்து, 'அடுத்த உலகக் கோப்பையில் நீங்கள் இருப்பீர்களா என எங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்காக அந்தக் கோப்பையை நாங்கள் வெல்வோம் என சொன்னார்கள். இறுதியாக, அவர்கள் அதைச் செய்தார்கள், அதனால்தான் நாங்கள் அனைவரும் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

    ×