என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.
- 2011-ல் டோனி தலைமையில் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா வென்றது.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
இந்திய ஆண்கள் அணி இதற்கு முன் 50 ஓவர் உலக கோப்பையை 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் வென்றுள்ளது. அதன்பின் 2011ஆம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் வென்றுள்ளது.
தற்போது மகளிர் அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் என இந்தியாவுக்கு 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் கவுரை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
- இந்தியா ஏ அணி நவம்பர் 16-ம் தேதி பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது.
- ஐ.பி.எல். நட்சத்திரம் பிரியன்ஷ் ஆர்யாவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
புதுடெல்லி:
கத்தாரில் நடைபெற உள்ள ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025-க்கான இந்தியா ஏ அணிக்கு ஜிதேஷ் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இளம் வீரர்கள் பலரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். பஞ்சாப் ஆல்ரவுண்டர் நமன் தீர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டி20 விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 15 பேர் கொண்ட அணியை தலைமையேற்று வழிநடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிரடி பேட்ஸ்மேன் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வைபவ் சூரியவன்ஷி 14 வயதில் இந்திய ஏ அணியில் ஆசிய கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். நட்சத்திரம் பிரியன்ஷ் ஆர்யாவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை இம்மாதம் 14 முதல் 23-ம் தேதி வரை கத்தாரில் நடைபெறுகிறது. ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் ஏ அணிகளுடன் குரூப் பி பிரிவில் இந்திய ஏ அணி இடம்பெற்றுள்ளது.
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்தியா ஏ அணியின் விவரம் வருமாறு:
பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹல் வதேரா, நமன் தீர் (துணை கேப்டன்), சூர்யன்ஷ் ஷெட்கே, ஜிதேஷ் சர்மா (கேப்டன் - விக்கெட் கீப்பர்) , ரமன்தீப் சிங், ஹர்ஷ் துபே, அசுதோஷ் சர்மா, யாஷ் தாக்கூர், குர்ஜப்னீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுத்வீர் சிங் சரக், அபிஸ்.
ஸ்டாண்ட் பை வீரர்கள்: குர்னூர் சிங் ப்ரார், குமார் குஷாக்ரா, தனுஷ் கோட்டியன், சமீர் ரிஸ்வி, ஷேக் ரஷீத்.
இந்தியா ஏ அணி நவம்பர் 16-ம் தேதி பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறை வென்றதில் ஜிதேஷ் சர்மா அபரிமித பங்களிப்புகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
சென்னை:
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இடம்பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சி.எஸ்.கே. அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் அவர் இணைந்தார். சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ள அவர், பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார். அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டார்.
இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக வரவிருக்கும் பிக் பாஷ் லீக் சீசனில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார்.
இந்த சீசனுக்கான அவரது அணியான சிட்னி தண்டர், சென்னையில் பயிற்சியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.
- மகளிர் உலக கோப்பையில் 2 சதங்களுடன் 571 ரன்கள் குவித்தார்.
- ஸ்மிரிதி மந்தனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து தென்ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. அந்த அணியின் கேப்டனும், தொடக்க பேட்டருமான லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகவும், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும் சதம் அடித்தார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 9 இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தார். இதில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும்.
இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் முன்னேறியுள்ளார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். லாரா வால்வார்த் 814 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார். ஸ்மிரிதி மந்தனா 811 புள்ளிகள் பெற்றுள்ளார்.
உலக கோப்பையில் ஸ்மிரிதி மந்தனா 9 போட்டிகளில் 1 சதம், 2 அரைசதங்களடன் 434 ரன்கள் விளாசியிருந்தார்.
- உலகளாவிய சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளை டாம் மூடி இனிமேல் கவனிப்பார்
- லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார்
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உலகளாவிய கிரிக்கெட் இயக்குநராக டாம் மூடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் , SA20 உள்ளிட்ட உலகளாவிய சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளை டாம் மூடி இனிமேல் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாம் மூடியின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகளிர் உலக கோப்பையில் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
- கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வோர்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், மகளிர் உலக கோப்பையில் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
அந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வோர்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்மிருதி மந்தனா,ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகிய 3 இந்திய வீராங்கனைகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த அணியின் வீராங்கனைகள்:-
ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வோர்ட் (C), ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் காப், ஆஷ் கார்ட்னர், தீப்தி சர்மா, அன்னாபெல் சதர்லேண்ட், நாடின் டி கிளார்க், சித்ரா நவாஸ் (WK), அலனா கிங், சோபி எக்லெஸ்டோன்.
- ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கவுள்ளது.
- சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே அணியும் ஆலோசனை நடத்தி வருகிறது.
சிஎஸ்கே அணி மெகா ஏலத்தின் போது அஸ்வின், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட சீனியர் வீரர்களில் முதலீடு செய்தது. ஆனால் எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்து வருகிறது.
அதன்படி குஜராத் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் மூலமாக நிரப்ப முயற்சிகள் நடந்தது.
இந்நிலையில், வாஷிங்டன் சுந்தரை சிஎஸ்கேவுடன் வர்த்தகம் செய்யும் யோசனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெக்ரா ஏற்க மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவை சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
- ஆஸ்திரேலியாவை அரைஇறுதியில் வீழ்த்தியபோது 20 முதல் 30 சதவீதம் உயர்ந்தது.
- ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோரின் வருமானம் அதிக அளவில் உயரும்.
13-வது உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. நவி மும்பையில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன்பு 2 தடவை (2005, 2017) இறுதிப் போட்டியில் தோற்று இருந்தது. இதனால் நாடு முழுவதும் இந்திய மகளிர் அணியின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
1983-ம் ஆண்டு கபில் தேவ் உலக கோப்பையை வென்றது போல தற்போது ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் உலக கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மகளிர் உலக கோப்பையை வென்ற 4-வது நாடு இந்தியாவாகும். ஆஸ்திரேலியா (4 தடவை), இங்கிலாந்து (4), நியூசிலாந்து (1) வரிசையில் இந்தியாவும் இணைந்தது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ரூ.39.77 கோடி பரிசு தொகையை வழங்கியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.51 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணிக்கு கிட்டத்தட்ட ரூ.91 கோடி கிடைத்துள்ளது.
உலக கோப்பையை வென்றதால் இந்திய மகளிர் அணியினர் ஒரே இரவில் புகழின் உச்சத்துக்கு சென்றனர். வீராங்கனைக்கான விளம்பர மதிப்பு 35 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை அரைஇறுதியில் வீழ்த்தியபோது 20 முதல் 30 சதவீதம் உயர்ந்தது. தென் ஆப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் வீழ்த்தியதால் 35 சதவீதம் வரை விளம்பர மதிப்பு அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோரின் வருமானம் அதிக அளவில் உயரும். ஒரு விளம்பரத்துக்கு மந்தனா ரூ.2 கோடியும், ஹர்மன்பிரீத் ரூ.1.2 கோடியும், ஜெமிமா ரோட்ரிகஸ் ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், ஷபாலி வர்மா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் பெறுகிறார்கள்.
மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ.32 கோடி முதல் ரூ.35 கோடியாகும். ஹர்மன் பிரீத் சொத்து மதிப்பு ரூ.25 கோடியாகும்.
இந்த உலக கோப்பையில் மந்தனா 434 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருந்தார். இறுதிப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக ஷபாலி வர்மாவும், தொடரின் சிறந்த வீராங்கனையாக தீப்தி சர்மாவும் (22 விக்கெட், 215 ரன்) தேர்வு பெற்றனர்.
வீரர்களை பொறுத்தவரை விராட் கோலி ஒரு விளம்பரத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.11 கோடி பெறுகிறார். தெண்டுல்கர் ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடி வரையும், டோனி ரூ.4 கோடி முதல் ரூ.6 கோடி வரையும், ரோகித் சர்மா ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி வரையும் பெறுகிறார்கள்.
- 2008 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் ஒருநாள் போட்டியில் விளையாடியது.
- அதன்பிறகு நாளை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது. 2008 ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் பேருந்தில் செல்லும்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு முன்னதாக இக்பால் மைதானத்தில் பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்றது.
பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் செல்ல தயக்கம் காட்டின. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்களது போட்டிகளை பாகிஸ்தான் விளையாடியது. சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.
கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, முல்தானில் போட்டிகள் நடைபெற்றன. ஆனால் பைசலாபாத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை. மோசமான கட்டமைப்பு வசதிகள் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. சில வருடங்களாக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை பைசலாபாத் இக்பால் மைதானத்தில் நடக்கிறது.
தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமன் பெற்றது. டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியது. இந்த நிலையில்தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
- இறுதி போட்டியில் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் வீழ்த்தவில்லை.
- உலக கோப்பை தொடரில் 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 298 ரன்கள் குவித்தது. பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியால் 246 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ளது.
மகளிர் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. பரிசுகளும் குவிந்து வருகின்றன. பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கிராந்தி கௌட்டுக்கு, மத்திய பிரதேச மாநில அரசு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
மிதவேகப் பந்து வீச்சாளரான இவர் இறுதிப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் 6 ஓவர்கள் வீசி 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
உலக கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
- ஹர்மன்ப்ரீத் கவுர், உலக கோப்பையுடன் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், உலக கோப்பையுடன் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அப்புகைப்படத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரின் டி சர்ட்டில் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு மட்டுமல்ல , அனைவருக்குமான விளையாட்டு" என்று எழுதப்பட்டுள்ளது.
முன்னதாக கால்பந்து உலக கோப்பையை வென்ற மெஸ்ஸி, டி20 உலக கோப்பையை வென்ற ரோகித் ஆகியோர் உலக கோப்பையுடன் தூங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
- ஸ்மிருதி மந்தனாவும் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்
- இந்தூரை சேர்ந்த பலாஷ் முச்சல் இசையமைப்பாளராக உள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது காதலன் பலாஷ் முச்சலுடன் உலக கோப்பை வெற்றியை கொண்டாடினார்.
ஸ்மிருதி மந்தனாவும் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பலாஷ் முச்சல் இசையமைப்பாளராக உள்ளார். சில ஆல்பங்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார்.
ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல் ஜோடிக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.






