என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த மத்திய பிரதேச அரசு
    X

    இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த மத்திய பிரதேச அரசு

    • இறுதி போட்டியில் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் வீழ்த்தவில்லை.
    • உலக கோப்பை தொடரில் 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 298 ரன்கள் குவித்தது. பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியால் 246 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ளது.

    மகளிர் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. பரிசுகளும் குவிந்து வருகின்றன. பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கிராந்தி கௌட்டுக்கு, மத்திய பிரதேச மாநில அரசு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

    மிதவேகப் பந்து வீச்சாளரான இவர் இறுதிப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் 6 ஓவர்கள் வீசி 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

    உலக கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×