என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கபில்தேவ், டோனியுடன் இணைந்த ஹர்மன்பீரித் கவுர்- சிறப்பு போஸ்டர் வெளியிட்டது பிசிசிஐ
    X

    கபில்தேவ், டோனியுடன் இணைந்த ஹர்மன்பீரித் கவுர்- சிறப்பு போஸ்டர் வெளியிட்டது பிசிசிஐ

    • 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.
    • 2011-ல் டோனி தலைமையில் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா வென்றது.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    இந்திய ஆண்கள் அணி இதற்கு முன் 50 ஓவர் உலக கோப்பையை 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் வென்றுள்ளது. அதன்பின் 2011ஆம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் வென்றுள்ளது.

    தற்போது மகளிர் அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் என இந்தியாவுக்கு 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் கவுரை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×