என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.
    • அந்த அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    புளோரிடா

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 40 ரன்கள் அடித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் அடித்து திரில் வெற்றி பெற்றது. ஆல் ரவுண்டராக ஜொலித்த ஹோல்டர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஹோல்டர் 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பிராவோவின் சாதனையை முறியடித்துள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பிராவோவை (78 விக்கெட்), பின்னுக்குத் தள்ளி ஹோல்டர் (81 விக்கெட்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    • இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 754 ரன்கள் குவித்தார்.
    • 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்த், இந்தியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

    இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்னும், இங்கிலாந்து அணி 247 ரன்னும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 396 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    இதன்மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 35 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் நாளை 5-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

    நடப்பு தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மொத்தம் 754 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுனில் கவாஸ்கரிடம் இருந்து தட்டிப்பறித்தார்.

    இந்நிலையில், சுப்மன் கில்லுக்கு சுனில் கவாஸ்கர் 2 சிறப்பு பரிசுகளை வழங்கினார். தனது கையொப்பமிட்ட ஒரு சிறிய சிவப்பு தொப்பி மற்றும் சட்டை ஒன்றை பரிசாக வழங்கினார்.

    இதுதொடர்பாக கவாஸ்கர் கூறுகையில், சிறப்பு. என்னுடைய இன்னொரு சாதனையையும் முறியடிப்பீர்கள் என எதிர்பார்த்தேன். இது என்னிடமிருந்து உங்களுக்கு சிறிய பரிசு. ஒரு சட்டை மற்றும் என்னுடைய கையொப்பமிட்ட தொப்பி. இந்தத் தொப்பியை சிலருக்கு மட்டுமே கொடுப்பேன். வாழ்த்துகள், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். 2021 ஆஸ்திரேலியா காபா டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற நாளன்று அணிந்திருந்த அதிர்ஷ்டமான சட்டையை மீண்டும் இப்போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் அணிந்து வருவேன் என தெரிவித்தார்.

    • இங்கிலாந்து வெற்றி பெற 374 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • இங்கிலாந்து நான்காம் நாள் முடிவில் 339 ரன்கள் எடுத்துள்ளது.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    23 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பென் டக்கெட் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். ஒல்லி போப் 27 ரன்னில் வெளியேறினார்.

    ஜோ ரூட் உடன் ஹாரி புரூக் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதம் கடந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரி புரூக் 111 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 105 ரன்னில் வெளியேறினார்.

    மழை காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது.

    இறுதியில், நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.

    இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகள் தேவை என்பதால் நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 135 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது.

    முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. ஹசன் நவாஸ் 23 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் சல்மான் ஆஹர் 33 பந்தில் 38 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஜேசன் ஹோல்டர் 19 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 134 ரன் இலக்கை கடைசி பந்தில் எடுத்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 14 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.

    • அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.
    • அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் தொடர்வார் என்று தோனி தெரிவித்துள்ளார்.

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது எம்.எஸ்.தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    மேலும், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்று தோனி தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, "அடுத்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் வந்துவிடுவார், அவர் வந்ததும் அனைத்தும் சரியாகிவிடும். ஐபிஎல் 2025-ல் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்று சொல்லவில்லை. இருப்பினும் சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். மினி ஆக்சன் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் அணியில் சில வீரர்களை எடுக்க உள்ளோம்.

    அடுத்த 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு, என்னுடைய கண்கள் நன்றாக உள்ளது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சூட்சமம் என்னவென்றால், உடல் தகுதிக்கு இன்னும் TICK மார்க் கிடைக்கவில்லை. கண்களை வைத்து மட்டுமே விளையாட முடியாதே" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    • லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 371 ரன் இலக்கை எளிதாக எடுத்தது.
    • ஓவல் ஆடுகளத்தில் 374 ரன் இலக்கை எடுப்பது கடும் சவாலானது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன் எடுத்தது. 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன் னிங்சில் 396 ரன் குவித்தது. இதனால் இங்கிலாந்துக்கு 374 ரன் இலக்காக இருந்தது.

    ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். அவர் 118 ரன னும், ஆகாஷ் தீப் 66 ரன்னும், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்னும் எடுத்தனர். ஜோஷ் டங் 5 விக்கெட்டும், அட்கின்சன் 3 விக்கெட்டும், ஓவருடன் 2 விக் கெட்டும் கைப்பற்றி னார்கள்.

    374 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3- வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 324 ரன் தேவை. கைவசம் 8 விக்கெட் உள்ளது. தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் கிறிஸ் வோக்ஸ ஆடமாட்டார்.

    லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 371 ரன் இலக்கை எளிதாக எடுத்தது. இதனால் அந்த அணி இந்த இலக்கை எடுக்கும் நிலை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

    ஆனால் அதே நேரத்தில் இந்த ஆடுகளத்தில் 374 ரன் இலக்கை எடுப்பது கடும் சவாலானது. இந்திய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்று தொடரை சமன் செய்வார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணி 374 ரன் இலக்கை எடுப்பது எளிதாக இருக்காது என்று சதம் அடித்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார். நேற்றைய போட்டி முடிந்த பிறகு அவர் நிருபர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது:-

    இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது சற்று கடினமானது. 4-வது நாளில் 374 ரன் இலக்கை துரத்துவது இங்கிலாந்து அணிக்கு எளிதாக இருக்காது. நாங்கள் நேர்த்தியாக பந்து வீசுவோம். இதனால் பேட்டிங் செய்வது கடினமானது. வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இங்கிலாந்தில் இது மாதிரியான ஆடுகளத்தில் விளையாடுவதை எதிர் பார்த்தேன். மனதளவில் நான் தயாராக இருந்தேன். நான் எனது பேட்டிங்கை ரசித்தேன். இந்த சதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து நிலையாக விளையாடுவதை விரும்புகிறேன். எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி கொண்டேன்.

    இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 19 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ல் நடைபெறுகிறது.

    குரூப் B-ல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன

    இந்நிலையில், ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ம் தேதி துபாய் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    • அதிரடியாக விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ் 60 பந்துகளில் 120 ரன்களை குவித்தார்.
    • அதிரடி சதம் விளாசிய ஏபி டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார்.

    உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் - தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷர்ஜீல் கான் 76 ரன்கள் அடித்தார்.

    பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 16.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    அதிரடியாக விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ் 60 பந்துகளில் 120 ரன்களை குவித்தார். ஜேபி டுமினி 50 ரன்கள் அடித்தார்.

    அதிரடி சதம் விளாசிய ஏபி டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய விருதுகளை வென்று அசத்தினார்.

    • இந்தியா 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

    முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அரை சதம் கடந்தனர். இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ஜடேஜா 19 ரன்களை எடுத்தபோது மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

    இந்திய அணி வெளிநாடுகளில் ஆடிய ஒரு டெஸ்ட் தொடரில் நம்பர் 6 அல்லது அதற்கு கீழான பேட்டிங் வரிசையில் ஆடிய வீரர்களில் வி.வி.எஸ்.லக்ஷ்மண் 474 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. 2002-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் விளையாடிய போது விவிஎஸ் லக்ஷ்மண் இந்த சாதனையை படைத்தார்.

    தற்போது 23 ஆண்டுக்கு பின் ஜடேஜா இந்த சாதனையை முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 10 இன்னிங்சில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் உள்பட 516 ரன்களை விளாசி அசத்தி இருக்கிறார்.

    • இந்தியா 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

    முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்தார். ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஜடேஜா அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதம் கடந்து 53 ரன் எடுத்தார்.

    இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • ஜெய்ஸ்வால் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
    • ஆகாஷ் தீப் 66 ரன்கள் அடித்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜ் (4), ஆகாஷ் தீப் (4) ஆகியோர் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்தார்.

    இன்றைய 3ஆவது நாள் தேனீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 300 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. மேலும் ஒரு ரன் சேர்க்காமல் ஜுரெல் விக்கெட்டை இந்தியா இழந்தது.

    ஜுரெல் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகின்றனர். இந்தியா 77 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா அரை சதத்தை நெருங்கி வருகிறார்.

    • சுப்மன் கில் 4 சதங்கள் அடித்துள்ளார்.
    • கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் 12 சதங்கள் விளாசியுள்ளனர். அத்துடன் ஒரே தொடரில் அதிக சதங்கள் அடித்த தொடராக இந்த இங்கிலாந்து தொடர் அமைந்துள்ளது.

    சுப்மன் கில் 4 சதங்கள் அடித்துள்ளார். கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர். ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.

    ×