என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.
- இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன்.
இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் 4 ஆட்டங்களின் முடிவில் (2-1) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது போட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணிக்கு 35 ரன்களும் இந்தியா 4 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசியிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது :
உண்மையிலேயே இந்த கடைசி போட்டியில் என்னால் விளையாட முடியாமல் போனது சற்று வருத்தம் தான். இந்த போட்டியும் 5-ம் நாள் வரை வந்து மிகச் சிறப்பாக முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளுமே களத்தில் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்த ஒட்டுமொத்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக அமைந்தது.
போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன். ஏனெனில் அணியில் இடம்பிடித்திருந்த ஒவ்வொருவருமே இந்த தொடரில் தங்களது முழு பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
அதிலும் குறிப்பாக போட்டியின் சூழல் கடினமாக இருந்த போதெல்லாம் தனித்தனியே வீரர்கள் அணியின் நலனுக்காக நின்று இருக்கிறார்கள். இப்படி ஒரு அணியாக இணைந்து நாங்கள் இந்த தொடரில் செயல்பட்ட விதத்தை நினைத்து உண்மையிலேயே பெருமையாக உள்ளது.
என பென் ஸ்டோக்ஸ் கூறினார்.
- 5-வது டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
- 5 போட்டிகள் கொண்ட போட்டிகள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சிராஜ் உள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-2 என்ற கணக்கில் தொடர் சமமானது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை கூட மிஸ் செய்யாமல் அனைத்து போட்டியிலும் சிராஜ் விளையாடி அசத்தியுள்ளார். 5 போட்டிகளில் விளையாடி 185.3 ஓவர்கள் (1113 பந்துகள்) வீசி 26 மெய்டனுடன் 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட போட்டிகள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சிராஜ் உள்ளார்.
இந்நிலையில் சிராஜை நான் பெருமளவில் மதிக்கிறேன் என இங்கிலாந்து அணியின் பேட்டர் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிராஜை நான் பெருமளவில் மதிக்கிறேன். 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி, ஒவ்வொரு முறையும் 135kmph+ வேகத்தில் பந்து வீசினார். அவர் சிறந்தவர். இந்த வெற்றி அவருக்கு உரித்தானது.
என ஹாரி ப்ரூக் கூறினார்.
- தொடர் 2-2 என சமனில் முடிந்தது நியாயமான பிரதிபலிப்பு.
- இந்தத் தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது. அவ்வாறு அமைந்தது திருப்திகரமாக இருக்கிறது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2-2 என டிராவில் முடிந்துள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அபாரமான விளையாடி 4 சதங்களுடன் 700 ரன்களுக்கு மேல் குவித்தார்.
இதனால் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் சுப்மன் கில்லை தொடர் நாயகனாக தேர்வு செய்துள்ளார்.
ஆட்ட நாயகன் தொடர் விருது வென்ற சுப்மன் கில் கூறியதாவது:-
இரண்டு அணிகளும் விளையாடிய விதம் மிகவும் சிறப்பானது. இறுதி நாளான இன்று முடிவு யாருக்கு என்பது தெரியாமல் இரு அணிகளும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தின. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது, கேப்டன்ஷியை எளிதாக நோக்கலாம். நாங்கள் இன்று காலை விளையாடியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நாங்கள் மிகவும் உறுதியாக இருந்தோம். நேற்று கூட, அவர்களுக்கு நெருக்கடி இருந்தது எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் அதை முழுவதுமாக அப்படியே வைத்துக் கொள்ள விரும்பினோம். சிராஜ் கேப்டனுடைய கனவு. ஒவ்வொரு ஸ்பெல் மற்றும் ஒவ்வொரு பந்திலும் தனது பங்களிப்பை கொடுத்தார். தொடர் 2-2 என சமனில் முடிந்தது நியாயமான பிரதிபலிப்பு.
இது இரண்டு அணிகளும் எவ்வளவு ஆர்வமாக இருந்தன மற்றும் எப்படி வெளிப்படுத்தின என்பதை காட்டுகிறது. இந்தத் தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது. அவ்வாறு அமைந்தது திருப்திகரமாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை. கடந்த ஆறு வாரங்களிலிருந்து கற்றுக்கொண்டது இதுதான்.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
- என்னுடைய திட்டம் தொடர்ச்சியாக சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து, நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.
- இன்று காலை நான் எழுந்தபோது, என்னால் அதை செய்ய முடியும் என்று நினைத்தேன்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முகமது சிராஜ் அபாரமான பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இன்று 4 விக்கெட் கையில் இருந்த நிலையில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. மீதமிருந்த இங்கிலாந்தின் 4 விக்கெட்டில் 3 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட்டும் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஆட்டநாயகன் விருது வென்ற முகமது சிராஜ் கூறியதாவது:-
இதை மிகவும் அமேசிங்காக உணர்கிறேன். ஏனென்றால் நாங்கள் முதல் நாளில் இருந்து வெற்றி பெறுவது வரை கடுமையாக போராடினோம். என்னுடைய திட்டம் தொடர்ச்சியாக என்னுடைய ஏரியாவில் (சரியான லைன் மற்றும் லெந்த்) பந்தை பிட்ச் செய்து, நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அங்கிருந்து அனைத்தும் போனஸ் ஆக அமைந்தது. இன்று காலை நான் எழுந்தபோது, என்னால் அதை செய்ய முடியும் என்று நினைத்தேன். கூகுளில் இருந்து Believe (நம்பு) படத்தை டவுன்லோடு செய்தேன்.
ப்ரூக்கிற்கு கேட்ச் மிஸ் செய்தது போட்டி மாறுவதற்கான தருணம் என்று நினைத்தேன். அதை பிடித்திருந்தால், இன்றைய கடைசி நாள் போட்டியில் களம் இறங்க வேண்டியது இருந்திருக்காது. ஆனால், அவர் விளையாடிய விதத்திற்கு பாராட்டு தெரிவித்தாக வேண்டும்.
இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்தார்.
- 5-வது போட்டியின் ஆட்டநாயகன் விருதை இந்திய அணியின் சிராஜ் வென்றார்.
- 5 டெஸ்ட் போட்டியிலும் முகமது சிராஜ் விளையாடி 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஒரு போட்டி டிரா ஆனது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் கடைசி நாளன இன்று இங்கிலாந்து அணிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்தியாவுக்கு 4 விக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய சிராஜ், பிரசித் கிருஷ்ணாவின் பந்து வீச்சால் 4 விக்கெட்டை வீழ்த்திய இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்டது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை இந்திய அணியின் சிராஜ் வென்றார்.
இந்நிலையில் இந்த தொடரில் முகமது சிராஜ் 5 போட்டிகளிலும் விளையாடி இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் முதல் டெஸ்டில் 41 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் 2-வது டெஸ்டில் 31.3 ஓவர்கள் பந்து வீசி 7 விக்கெட்டுகளையும் 3-வது முதல் டெஸ்டில் 36.2 ஓவர்களும் 4 விக்கெட்டும், 4-வது டெஸ்டில் 30 ஓவர்களும் 1 விக்கெட்டும் 5-வது டெஸ்டில் 46.3 ஓவர்களும் 9 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 1113 பந்துகளை வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய பந்து வீச்சாளர்களில் 5 போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆவார். மேலும் இங்கிலாந்து வீரர்களில் கூட எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் 5 போட்டிகளில் விளையாடவில்லை. ஒரு தொடரில் அதிக ஓவர்களை வீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார்.
ஒரு வேகப்பந்து வீச்சு வீரர் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவது என்பது கடினமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் இந்திய அணிக்காக அனைத்து போட்டியிலும் விளையாடி அணிக்கு பெருமை தேடி தந்துள்ளார். அவரை இந்திய ரசிகர்கள் உள்பட பல முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சிராஜை போர் வீரரைப் போன்றவர் என புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.maalaimalar.com/news/sports/cricket/mohammed-siraj-is-a-real-warrior-he-gives-his-everything-for-india-joe-root-782980
- முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி இன்று 3 விக்கெட் வீழ்த்தினார்.
- இந்தியா 6 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி நாளான இன்று 5ஆவது நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது.
ஆட்டம் தொடங்கியதும் யார் பெற்றி பெறுவார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரில் பிரசித் கிருஷ்ணா 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
அடுத்த ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் ஸ்மித் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் பிரசித் கிருஷ்ணா 4 ரன்கள் விட்டுக்கொடுத்தார். சிராஜ் வீசிய 2ஆவது ஓவரில் ஓவர்ட்டனை சிராஜ் வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து 354 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.
20 ரன்கள் தேவை என்ற நிலையில் அட்கின்சன் உடன் ஜோஷ் டாங்க் ஜோடி சேர்ந்தார். 81 ஆவது ஓவரில் டாங்க் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் இங்கிலாந்து ரிவ்யூ கேட்டது. ரிவ்யூவில் பந்து ஸ்டம்பை தாக்காமல் வெளியில் சென்றது. இதனால் டாங்க் தப்பித்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தினால் இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிடும். ஏனென்றால் கிறிஸ் வோக்ஸ் தோள்பட்டை காயத்தால் களம் இறங்கவில்லை. ஒருவேளை பேட்டிங் செய்ய வந்தாலும் ரன் அடிப்து கடினம்.
அட்கின்சன்- டாங்க் ஜோடி சமாளித்து விளையாடியது. சிராஜ் அபாரமான பந்து வீசினார். 80 ஓவர்கள் முடிந்த நிலையிலும் இந்தியா புதுப்பந்து எடுக்காமல் பழைய பந்தை பயன்படுத்தியது. சிராஜ் சிறப்பாக பந்து ஸ்விங் செய்தது.
82 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. 83 ஆவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டாங்க் க்ளீன் போல்டானார். இதனால் இங்கிலாந்து 9 விக்கெட்டை இழந்தது. 17 ரன்கள் தேவைப்பட்டது.
தோள்பட்டை கை காயத்துடன் கிறிஸ் வோக்ஸ் களம் இறங்கினார். 84 ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். 2ஆவது பந்தில் அட்கின்சன் சிக்ஸ் அடித்து பரபரப்பை கூட்டினார். கடைசி பந்து அட்சின்சன் பேட்டில் படவில்லை. ஆனாலும் பை (Bye) மூலம் ஒரு ரன் ஓடினர். ஜுரெல் ரன்அவுட் செய்ய தவறினார்.
இதனால் 10 ரன்கள் தேவைப்பட்டது. 84ஆவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் பந்தில் அட்கின்சன் 2 ரன்அடித்தார். இதனால் 8 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் அட்கின்சன் ஒரு ரன் எடுத்தார்.
இதனால் இங்கிலாந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. சிராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் அட்கின்சன் க்ளீன் போல்டானார். இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-2 என சமன் செய்தது.
2ஆவது இன்னிங்சில் சிராஜ் 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
- அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நம்மை நினைக்க வைப்பவர்.
- இந்திய அணிக்காக தனது ஒட்டுமொத்த சக்தியையும் கொடுத்து விளையாடுகிறார்.
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாள் இன்று நடக்கிறது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 35 ரன்கள் மட்டுமே தேவை. இந்திய அணி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில் முகமது சிராஜ் போர் வீரரைப் போன்றவர் என இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்டர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முகமது சிராஜ் போர் வீரரைப் போன்றவர். அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நம்மை நினைக்க வைப்பவர். இந்திய அணிக்காக தனது ஒட்டுமொத்த சக்தியையும் கொடுத்து விளையாடுகிறார். சில சமயங்களில் போலியான கோவத்தை வெளிப்படுத்துவார்.
ஆனால், அதைப் பார்க்கும்போதே போலி என நமக்குத் தெரிந்துவிடும். உண்மையிலேயே அவர் நல்ல மனிதர். மிகவும் திறமை வாய்ந்த வீரர். அவருக்கு எதிராக விளையாடுவதை நான் மிகவும் விரும்புவேன்.
என கூறினார்.
- இந்தியா பிரமிக்க வைக்கும் வகையில் விளையாடியது.
- ஆனால், முக்கியமான தருணங்களை அவர்களால் வெல்ல முடியவில்லை.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 5ஆவது போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றி பெற 35 ரன்கள் தேவை. கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் பரபரப்பான நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து தொடரில் இந்தியா பிரமிக்க வைக்கும் நிலையில் விளைடியாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டேவிட் லாய்டு கூறியதாவது:-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா பிரமிக்க வைக்கும் வகையில் விளையாடியது. ஆனால், முக்கியமான தருணங்களை அவர்களால் வெல்ல முடியவில்லை. ரோகித் அல்லது விராட கோலி விளையாடியிருந்தால், இந்தியாவின் ரிசல்ட் மாறுபட்டதாக இருந்திருக்கும். சில வீரர்கள் முக்கிய தருணங்களை மோப்பம் பிடித்து எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக முன்கூட்டியே செயல்படுவார்கள். இதில் பென் ஸ்டோக்ஸ் அற்புதமானவர்.
இவ்வாறு டேவிட் லாய்டு தெரிவித்துள்ளார்.
- நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் 3 விக்கெட்டை 106 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர்.
- ஜோ ரூட்-ஹேரி புரூக் ஜோடி ரன்களை குவித்து ஆட்டத்தை மாற்றி விட்டது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னும் , இங்கிலாந்து 247 ரன்னும் எடுத்தன. 23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சில் 396 ரன் குவித்தது. இதனால் இங்கிலாந்துக்கு 374 ரன் இலக்காக இருந்தது. 374 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை விளை யாடியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்து இருந்தது.
ஹேரி புரூக் ( 111), ஜோ ரூட் (105) ஆகியோர் சதம் அடித்தனர். டக்கெட் 54 ரன் எடுத்தார். ஜேமி சுமித் 2 ரன்னுடனும் , ஓவர்டன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட் டும், ஆகாஷ் தீப் 1 விக்கெட் டும் கைப்பற்றினார்கள்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 35 ரன்னே தேவை. கைவசம் 4 விக்கெட் உள்ளது.
எஞ்சிய 4 விக்கெட்டை வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறும். இந்திய பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
80-வது ஓவருக்கு பிறகு இந்திய அணி புதிய பந்தை எடுக்கும். அதற்கு முன்பு இங்கிலாந்து 35 ரன்னை எடுக்க முயற்சிக்கும். அந்த அணி 76.2 ஓவர்கள் ஆடியுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வரவில்லை. மேலும் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடிய போது பந்தும் வீசவில்லை.
2-வது இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்ய வருவது சந்தேகம் என கருதப்பட்டது. ஆனால் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்யலாம் என்று அந்த அணி வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, 'தேவைப் பட்டால் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்ய தயார். அவரால் பேட்டிங் செய்ய முடியும்' என்றார்.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் 3 விக்கெட்டை 106 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர். 4-வது விக்கெட்டான ஜோ ரூட்-ஹேரி புரூக் ஜோடி ரன்களை குவித்து ஆட்டத்தை மாற்றி விட்டது.
ஹேரி புரூக்கின் கேட்சை சிராஜ் தவற விட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கேட்ச் பிடித்து விட்டு அவர் எல்லை கோட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அப்போது புரூக் 19 ரன்னில் இருந்தார்.
இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
இந்தியா வெற்றி பெற்றால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடியும். இங்கிலாந்து வென்றால் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3-வது டி20 போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
- பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. சாஹிப்சாதா பர்ஹான் 53 பந்தில் 74 ரன்னும் (3பவுண்டரி, 5 சிக்சர்), சயிம் அயூப் 49 பந்தில் 66 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பாகிஸ்தான்13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
- கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு 4 விக்கெட்டுகள் தேவை
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
23 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை. இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகள் தேவை என்பதால் நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அடுத்த 3 நாட்களும் அவர் விளையாடவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி நாள் ஆட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஜோ ரூட், "தேவை ஏற்பட்டால் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்வார்" என்று தெரிவித்தார்.
- நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
- 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
23 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.
2 ஆவது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் தங்களது சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதம் விளாசியவர்கள் பட்டியலில் 24 சதங்களுடன் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறினார்.
பாண்டிங் (ஆஸ்திரேலியா), காலிஸ் (தென் ஆப்பிரிக்கா), ஜெயவர்தனே (இலங்கை) ஆகியோர் தங்களது சொந்த மண்ணில் 23 டெஸ்ட் சதங்களை விளாசி அப்பட்டியலில் 2 ஆம் இடத்தில உள்ளனர்.






