என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ENDvsIND 5th Test இன்று காலை எழுந்ததும்... கடைசி நாள் ஆட்டம் குறித்து நினைவு கூர்ந்த முகமது சிராஜ்
- என்னுடைய திட்டம் தொடர்ச்சியாக சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து, நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.
- இன்று காலை நான் எழுந்தபோது, என்னால் அதை செய்ய முடியும் என்று நினைத்தேன்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முகமது சிராஜ் அபாரமான பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இன்று 4 விக்கெட் கையில் இருந்த நிலையில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. மீதமிருந்த இங்கிலாந்தின் 4 விக்கெட்டில் 3 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட்டும் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஆட்டநாயகன் விருது வென்ற முகமது சிராஜ் கூறியதாவது:-
இதை மிகவும் அமேசிங்காக உணர்கிறேன். ஏனென்றால் நாங்கள் முதல் நாளில் இருந்து வெற்றி பெறுவது வரை கடுமையாக போராடினோம். என்னுடைய திட்டம் தொடர்ச்சியாக என்னுடைய ஏரியாவில் (சரியான லைன் மற்றும் லெந்த்) பந்தை பிட்ச் செய்து, நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அங்கிருந்து அனைத்தும் போனஸ் ஆக அமைந்தது. இன்று காலை நான் எழுந்தபோது, என்னால் அதை செய்ய முடியும் என்று நினைத்தேன். கூகுளில் இருந்து Believe (நம்பு) படத்தை டவுன்லோடு செய்தேன்.
ப்ரூக்கிற்கு கேட்ச் மிஸ் செய்தது போட்டி மாறுவதற்கான தருணம் என்று நினைத்தேன். அதை பிடித்திருந்தால், இன்றைய கடைசி நாள் போட்டியில் களம் இறங்க வேண்டியது இருந்திருக்காது. ஆனால், அவர் விளையாடிய விதத்திற்கு பாராட்டு தெரிவித்தாக வேண்டும்.
இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்தார்.






