என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தோற்றாலும் இந்த விஷயம் பெருமையாக உள்ளது- பென் ஸ்டோக்ஸ்
- போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.
- இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன்.
இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் 4 ஆட்டங்களின் முடிவில் (2-1) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது போட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணிக்கு 35 ரன்களும் இந்தியா 4 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசியிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது :
உண்மையிலேயே இந்த கடைசி போட்டியில் என்னால் விளையாட முடியாமல் போனது சற்று வருத்தம் தான். இந்த போட்டியும் 5-ம் நாள் வரை வந்து மிகச் சிறப்பாக முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளுமே களத்தில் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்த ஒட்டுமொத்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக அமைந்தது.
போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன். ஏனெனில் அணியில் இடம்பிடித்திருந்த ஒவ்வொருவருமே இந்த தொடரில் தங்களது முழு பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
அதிலும் குறிப்பாக போட்டியின் சூழல் கடினமாக இருந்த போதெல்லாம் தனித்தனியே வீரர்கள் அணியின் நலனுக்காக நின்று இருக்கிறார்கள். இப்படி ஒரு அணியாக இணைந்து நாங்கள் இந்த தொடரில் செயல்பட்ட விதத்தை நினைத்து உண்மையிலேயே பெருமையாக உள்ளது.
என பென் ஸ்டோக்ஸ் கூறினார்.






