என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேசன் ஹோல்டர்"

    • பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.
    • அந்த அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    புளோரிடா

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 40 ரன்கள் அடித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் அடித்து திரில் வெற்றி பெற்றது. ஆல் ரவுண்டராக ஜொலித்த ஹோல்டர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஹோல்டர் 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பிராவோவின் சாதனையை முறியடித்துள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பிராவோவை (78 விக்கெட்), பின்னுக்குத் தள்ளி ஹோல்டர் (81 விக்கெட்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ரோவ்மன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக மாற்று வீரரை வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவித்தது.

    டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.

    அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ரோவ்மன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நட்சத்திர ஆல் ராவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒபேத் மெக்காய் சேர்க்கப்பட்டுள்ளார். நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் மெக்காய் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி: ரோவ்மன் பாவெல் (கேப்டன்), அல்ஸாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஒபேத் மெக்காய், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.

    • வங்கதேசதம் டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ளது.
    • சுழல் பந்துவீச்சாளர் கெவின் பின் பிலே மற்றும் ஜோமல் வாரிக்கன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    வங்கதேசதம் அணி 2 டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி செல்ல உள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பை வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஏற்கனவே இழந்துவிட்டன.

    இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முன்னாள் கேப்டன் மற்றும் டெஸ்ட் அணியின் முக்கிய வீரரான வேகப் பந்துவீச்சு ஜேசன் ஹோல்டர் தோள்பட்டை காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

    மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் டெவின் இம்லாச், ஆண்டர்சன் பிலிப்ஸ் ஆகியோர் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்கள். சுழல் பந்துவீச்சாளர் கெவின் பின் பிலே மற்றும் ஜோமல் வாரிக்கன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக அனுபவ வீரர் கெமார் ரோச் உடன் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் மற்றும் ஷாமர் ஜோசப் என சிறப்பான வேகப்பந்துவீச்சு யூனிட் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக கிரேக் பிராட்வய்ட் தொடர்ந்து அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

    இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதியும் 2-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 30-ம் தேதியும் துவங்குகிறது. இதற்குப் பிறகு இரண்டு வெள்ளைப்பந்து தொடர்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி:

    கிரேக் பிராத்வைட் (கே), ஜோசுவா டா சில்வா (வி.கீ), அலிக் அதானாஸ், கீசி கார்டி, ஜஸ்டின் க்ரீவ்ஸ், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜேடன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர், ஜோமெல் வாரிக்கன், மைக்கேல் லூயிஸ், ஆண்டர்சன் பிலிப், மற்றும் கெமர் ரோச்.

    ×