என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்: தோல்வியிலும் வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் ஜோடி
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்தது.
- இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்கள் குவித்தது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஒரு கட்டத்தில் 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த நிலையில் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி 89 ரன்கள் சேர்த்தனர்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 8-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதற்கு முன்பு 2022-ல் நமீபியா வீரர்கள் (70 ரன்கள்) படைத்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.






