என் மலர்
நீங்கள் தேடியது "Romario Shepherd"
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்தது.
- இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்கள் குவித்தது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஒரு கட்டத்தில் 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த நிலையில் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி 89 ரன்கள் சேர்த்தனர்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 8-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதற்கு முன்பு 2022-ல் நமீபியா வீரர்கள் (70 ரன்கள்) படைத்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் 2வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இதில், ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், டி20 போட்டியில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4-வது வீரராக ரொமாரியோ ஷெப்பர்ட் இணைந்தார்.
டி20 போட்டியில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள் விவரம்:
லசித் மலிங்கா (இலங்கை)
டிம் சௌதி (நியூசிலாந்து)
பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
ரொமாரியோ ஷெப்பர்ட் (வெஸ்ட் இண்டீஸ்)
- டிம் டேவிட் 45 ரன்னிலும் ஷெப்பர்ட் 39 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 49 ரன்னில் அக்ஷர் படேல் பந்து வீச்சில் அவுட் ஆனார். 3 போட்டிகளில் விளையாடத சூர்யகுமார் அடுத்ததாக களமிறங்கினார். ஆனால் அவர் ரசிகர்களை ஏமாற்றும் வகையில் டக் அவுட்டில் வெளியேறினார்.
அடுத்த சிறிது நேரத்தில் இஷான் கிஷன் 42 ரன்னிலும் திலக் வர்மா 6 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து கேப்டன் பாண்ட்யா மற்றும் டிம் டேவிட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மெதுவாக விளையாடிய பாண்ட்யா 33 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் வெளுத்து வாங்கினார். முக்கியமாக ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்தார்.
இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 234 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- கடைசி வரை போராடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- மும்பை தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.
இறுதி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் வெளுத்து வாங்கினார். முக்கியமாக ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 235 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக வார்னர்- ப்ரித்விஷா களமிறங்கினர். வார்னர் 10 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ப்ரித்வி ஷா -போரல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அடுதனையடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், அக்ஷர் படேல் 8 ரன்னிலும் லலித் யாதவ் 3 ரன்னிலும் குமார் குஷாக்ரா 0 ரன்னிலும் வெளியேறினர்.
கடைசி வரை போராடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மும்பை தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






