என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • கே.எல். ராகுல் 5 டெஸ்டில் 532 ரன்கள் குவித்தார்.
    • சுப்மன் கில் 754 ரன்கள் குவித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.

    ஆனால், அந்த சந்தேகத்தை இந்திய அணி தகர்த்தது. சிறப்பான ஆட்டத்தால் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என தொடரில் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.

    இதற்கு முக்கிய காரணம் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக தொடக்க வீரரான கே.எல். ராகுல் அற்புதமாக விளையாடினார். அவர் 10 இன்னிங்சில் 2 சதம், 2 அரைசதத்துடன் 532 ரன்கள் குவித்துள்ளார். கவாஸ்கருக்கு (774 மற்றும் 542) அடுத்தப்படியாக வெளிநாட்டு மண்ணில் தொடக்க வீரரான அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனால் இந்த தொடர் அவருக்கு எப்போதும் நினைவில் இருக்கக் கூடிய தொடராக இருக்கும்.

    அதேபோல் சுப்மன் கில் கேப்டன் பதவியுடன் சிறப்பாக பேட்டிங் செய்ய கடினம். அவருக்கு மிகுந்த நெருக்கடி இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர். ஆனால், சுப்மன் கில் அபாரமாக விளையாடி 4 சதங்கள் விளாசினார். இதில் ஒன்று இரட்டை சதம் ஆகும். மொத்தம் 754 ரன்கள் குவித்துள்ளார். 10 இன்னிங்சில் அவரது சராசரி 75.4 ஆகும்.

    ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கவாஸ்கருக்கு (774) அடுத்த இடத்தை பிடித்துள்ளார். இதனால் சுப்மன் கில்லுக்கும் இந்த தொடர் நினைவில் இருக்கக் கூடிய தொடராக இருக்கும்.

    • முதல் இன்னிங்சில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • 2ஆவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 127 பந்தில் சதம் அடித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜெய்ஸ்வால் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடுகளத்தில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆனதால் பேட்ஸ்மேன்கள் திணறினர். இருந்தாலும் ஜெய்ஸ்வால் தன்னம்பிக்கையுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    நேற்றைய 2ஆவது நாள் ஆட்டத்தில் 44 பந்தில் அரைசதம் அடித்தார். அத்துடன் 51 ரன்களுடன் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஆகாஷ் தீப் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 5ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 70 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜெய்ஸ்வால் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆகாஷ் தீப் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் சுப்மன் கில் 11 ரன்னில் வெளியேறினார். ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 127 பந்தில் சதம் விளாசினார். அவரது சதத்தில் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

    24ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜெய்ஸ்வாலின் 6ஆவது சதம் இதுவாகும். இந்த தொடரில் ஜெய்ஸ்வாலின் 2ஆவது சதம் இதுவாகும்.

    • வேலைப்பளு காரணமாக பும்ரா தொடர்ந்து விளையாடுவது கடினம்.
    • இங்கிலாந்து தொடரில் கூட 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால்தான் ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணி அடுத்ததாக ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

    பும்ராவின் வேலைப்பளு (WorkLoad) பெரிய அச்சத்தை ஏற்படுத்தியதால் ஆசிய கோப்பை டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக விளையாட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டில் ஒன்றில்தான் விளையாட முடியும்.

    இதனால் பும்ராவை ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட வைப்பதா? அல்லது வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வைப்பதா? என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் ஆகியோர்தான் இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    • முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 178 ரன்கள் குவித்தது.
    • பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 164 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் உள்ள லாடர்ஹில்லில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர் சைம் ஆயுப் 38 பந்தில் 57 ரன்கள் விளாசினார். ஃபஹர் ஜமான் 28 ரன்களும், ஹசன் நவாஸ் 24 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ், ஜீவல் ஆண்ட்ரூ தலா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்த விக்கெட்டுகளை இழந்தது.

    ஜேசன் ஹோல்டர் 12 பந்தில் 30 ரன்களும், ஷமர் ஜோசப் 12 பந்தில் 21 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது.

    • ஷ்ரேயாஸ் அய்யர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
    • ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். இவரது தலைமையிலான பஞ்சாப் அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதி, சாம்பியன் வாய்ப்பை இழந்தது. இந்தத் தொடரில் 17 போட்டிகளில் 604 ரன்கள் விளாசினார்.

    இவர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் இடம்பிடித்து விளையாடி வருகிறார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்காக இந்திய அணியில் இவர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் நல்ல ஃபார்மில் உள்ள அவரை ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    துலீப் டிராபிக்கான மேற்கு மண்டல அணியின் கேப்டனாக இவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதால் அவர் கேப்டனாக நியமிக்கபடவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற பெறுகிறது. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணிக்காக டி20 போட்டியில் விளையாடியது கிடையாது.

    • இங்கிலாந்து தொடரில் முகமது ஷமிக்கு இடமில்லை.
    • இந்த நிலையில் துலீப் டிராபி அணியில் இடம் பிடித்துள்ளார்.

    துலீப் டிராபி 2025 சீசனுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலம் (East Zone) அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளார். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி Standy player ஆக இடம் பிடித்துள்ளார்.

    கிழக்கு மண்டலம் (East Zone) அணி விவரம்:-

    இஷான் கிஷன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன் (துணைக் கேப்டன்), சந்தீப் பட்நாயக், விராட் சிங், டெனிஸ் தாஸ், ஸ்ரீதாம் பாம், ஷரன்தீப் சிங், குமார் குஷாக்ரா, ரியான் பராக், உட்கார்ஷ் சிங், மணிஷி, சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், முகமது ஷமி

    Standy players:- முக்தார் ஹுசைன், ஆசர்வாத் ஸ்வெயின், வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வாஸ்டிக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங்.

    கிழக்கு மண்டலம் அணி முதல் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வடக்கு மண்டலம் அணியை எதிர்கொள்கிறது.

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என முன்னதாகவே அறிவிப்பு.
    • முதல் டெஸ்டில் விளையாடிய பும்ரா, அதன்பின் 3ஆவது மற்றும் 4ஆவது போட்டியில் பங்கேற்றார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை 2-2 என டிரா செய்ய முடியும் என்ற நிலையில் கூட பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என உறுதியாக கூறப்பட்டது. முதல் போட்டியில் விளையாடினார். அதன்பின் 3ஆவது மற்றும் 4ஆவது போட்டியில் விளையாடினார்.

    4ஆவது போட்டிக்கும் 5ஆவது போட்டிக்கும் இடையில் 3 நாட்கள் மட்டுமே இடைவெளி இருந்த நிலையில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பும்ரா ஓய்வு குறித்து அஸ்வின் கூறுகையில் "இது கடந்த கால இந்திய அணியாக இருந்திருந்தால், பும்ராவை இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாட வற்புறுத்தியிருப்பார்கள். இப்போது கூட, அணி நிர்வாகம் இதைப் பார்த்திருக்கலாம். ஆனால் பும்ராவின் பார்வையில், இது ஒரு சரியான முடிவு" எனத் தெரிவித்துள்ளார்.

    ஒரு தொடர் முழுவதும் விளையாட தகுதியாக இருந்தால் மட்டுமே இனிமேல் பும்ராவை டெஸ்ட் தொடரில் சேர்க்க இருப்பதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது.
    • முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் கிராலி, ஹாரி புரூக் அரை சதம் அடித்தனர்.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 23 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா அணி 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இப்போட்டியில் ஜோ ரூட் 29 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தங்களது சொந்த மண்ணில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் சச்சினை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்திற்கு ஜோ ரூட் ( 7220 ரன்கள்) முன்னேறினார்.

    சொந்த மண்ணில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் 7,578 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் சச்சின் 7,216 ரன்கள் அடித்துள்ளார்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஜாக் கிராலி, ஹாரி புரூக் அரை சதம் அடித்தனர்.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் கிராலி, ஹாரி புரூக் அரை சதம் அடித்தனர்.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 23 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்தியா 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார். கே எல் ராகுல் 7 ரன்னிலும், சாய் சுதர்சன் 11 ரன்னிலும் அவுட்டாகினர். ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் எடுத்தார்.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்தியா 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது.

    முதல் விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த நிலையில், பென் டக்கெட் 43 ரன்னில் அவுட்டானார். ஜாக் கிராலி அரை சதம் கடந்து 64 ரன்னில் வெளியேறினார். ஜோ ரூட் 29 ரன்னிலும், ஒல்லி போப் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 199 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
    • இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 200 விக்கெட்டுகளை கடந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தும் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

    முகமது சிராஜ் போப், ஜோ ரூட், முகமது சிராஜ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டிக்கு முன்னதாக முகமது சிராஜ் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 199 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஒல்லி போப் விக்கெட்டை வீழ்த்தியபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
    • நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. கடைசி பந்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.

    இதனால் தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    நாளை நடைபெறும் இறுதி ஆட் டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    ×