என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    துலீப் கிரிக்கெட்: East Zone அணியில் முகமது ஷமி- இஷான் கிஷன் கேப்டன்
    X

    துலீப் கிரிக்கெட்: "East Zone" அணியில் முகமது ஷமி- இஷான் கிஷன் கேப்டன்

    • இங்கிலாந்து தொடரில் முகமது ஷமிக்கு இடமில்லை.
    • இந்த நிலையில் துலீப் டிராபி அணியில் இடம் பிடித்துள்ளார்.

    துலீப் டிராபி 2025 சீசனுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலம் (East Zone) அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளார். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி Standy player ஆக இடம் பிடித்துள்ளார்.

    கிழக்கு மண்டலம் (East Zone) அணி விவரம்:-

    இஷான் கிஷன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன் (துணைக் கேப்டன்), சந்தீப் பட்நாயக், விராட் சிங், டெனிஸ் தாஸ், ஸ்ரீதாம் பாம், ஷரன்தீப் சிங், குமார் குஷாக்ரா, ரியான் பராக், உட்கார்ஷ் சிங், மணிஷி, சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், முகமது ஷமி

    Standy players:- முக்தார் ஹுசைன், ஆசர்வாத் ஸ்வெயின், வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வாஸ்டிக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங்.

    கிழக்கு மண்டலம் அணி முதல் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வடக்கு மண்டலம் அணியை எதிர்கொள்கிறது.

    Next Story
    ×