என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20: 14 ரன்னில் பாகிஸ்தான் வெற்றி..!
- முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 178 ரன்கள் குவித்தது.
- பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 164 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் உள்ள லாடர்ஹில்லில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் சைம் ஆயுப் 38 பந்தில் 57 ரன்கள் விளாசினார். ஃபஹர் ஜமான் 28 ரன்களும், ஹசன் நவாஸ் 24 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ், ஜீவல் ஆண்ட்ரூ தலா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்த விக்கெட்டுகளை இழந்தது.
ஜேசன் ஹோல்டர் 12 பந்தில் 30 ரன்களும், ஷமர் ஜோசப் 12 பந்தில் 21 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது.






